முகேஸ் அம்பானி வீழ்வாரா?ஜோதி தேஷ்பாண்டே வீழ்த்துவாரா! தொடங்கியதா வர்த்தக யுத்தம்!!!
- உறியடி செய்திகள்

- Apr 26, 2023
- 2 min read

முகேஷ் அம்பானி சாயம் வெளுத்தது.. இனி எல்லாதுக்கும் துட்டு.. அதுவும் வெறும் 2 ரூபாய்..!
ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பு செய்வது மூலம் இந்தியாவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் ஸ்ட்ரீமிங் தளமாக மாறியுள்ள ஜியோ சினிமா தளத்தில் இதுவரையில் எவ்விதமான கட்டணமும் இல்லாமல் மக்கள் கண்டு மகிழ்ந்து வரும் வேளையில் இதற்கு முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது.
இந்தியாவில் டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய வர்த்தகத்தையும் வருமானத்தையும் பார்த்து வரும் வேளையில் இந்த துறையில் எந்த இந்திய நிறுவனமும் இல்லாத நிலையில் வயாகாம் 18 நிறுவனத்தின் FIFA, IPL போட்டிகளின் ஒளிப்பரப்பு மூலம் களத்தில் இறங்கியது.
முதலில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற இலவசமாக கொடுத்தது.
ஐபிஎல் போட்டிக்கு பின்பும் தொடர்ந்து ஜியோசினிமா தளத்தில் அதிகப்படியான பார்வையாளர்களையும், வர்த்தகத்தையும் பெற்ற சுமார் 100 திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியஸ்-களை அறிமுகம் செய்ய உள்ளதாக வயாகாம் 18 இன் தலைமை நிர்வாக அதிகாரியான ஜோதி தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் ஜியோசினிமா தளத்தில் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜோதி சமீபத்தில் ஒரு இன்டர்வியூவ்-ல் தெரிவித்துள்ளார்.

இது உண்மையாகும் விதத்தில் ஜியோசினிமா தளத்தில் ஒரு டெஸ்டிங் வெப்சைட்-ஐ பார்த்த ரெட்டிட் யூசர் தனது கணக்கில் ஜியோசினிமாவின் subscription திட்ட விபரங்களின் ஸ்கிரீன்ஷாட்-ஐ வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் முகேஷ் அம்பானி இலவச சேவை அளிக்கும் திட்டத்தின் சாயம் வெளுத்தது.இது மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானி வழக்கம் போல் அனைத்து தரப்பு மக்களையும் தனது வாடிக்கையாளராக கொண்டு இருக்கு வேண்டும் என்பதற்காக வெறும் 2 ரூபாய் சேவை அளிக்கும் திட்டத்தையும் வைத்துள்ளார். இந்த திட்டங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் திட்டத்தின் விபரம் பலே பலே..
இந்த ரெடிட் யூசர் வெளியிட்ட தரவுகள் படி ஜியோ சினிமா தளத்தில் கோல்டு, டெய்லி, பிளாடினம் என 3 திட்டங்களை வைத்துள்ளது. 3 திட்டத்திலும் அனைத்து கன்டென்ட்-களையும் 4K குவாலிட்டியில் பார்க்க முடியும். இந்த 3 பிர்மியம் திட்டத்தின் இலக்கு ஒன்று தான் "Watch all content, on any device, in the highest quality"
இதில் கோல்டு பிளான் என்பது 3 மாதத்திற்கு 2 கருவிகளில் ஜியோ சினிமா கன்டென்ட்களை பார்க்க 299 ரூபாய் அறிமுக சேவையாக 67 சதவீத டிஸ்கவுன்ட் உடன் 99 ரூபாய்.டெய்லி பிளான் ஒரு நாளுக்கானது, 2 கருவிகளில் ஜியோ சினிமா கன்டென்ட்களை பார்க்க 29 ரூபாய் அறிமுக சேவையாக 93 சதவீத டிஸ்கவுன்ட் உடன் வெறும் 2 ரூபாய்க்கு அளிக்கப்பட உள்ளது.
'
பிளாட்டினம் திட்டம் - 4 கருவிகள் எவ்விதமான விளம்பரமும் இல்லாமல் ஜியோ சினிமா கன்டென்ட்களை பார்க்க முடியும். 1199 ரூபாய் கட்டணம் கொண்ட பிளாட்டினம் திட்டத்திற்கு அறிமுகம் சேவையாக 50 சதவீத தள்ளுபடி உடன் 599 ரூபாய்க்கு அளிக்கப்பட உள்ளதாக பரப்பரப்பு தகவல்கள் கூறுகின்றன!




Comments