அண்ணாமலை கூட்டி, கழித்த தேர்தல் கணக்கு பலன்தருமா? கூட்டணி முறிவு! எடப்பாடி- சகாக்கள் டெல்லி பயணமும்!
- உறியடி செய்திகள்

- Sep 26, 2023
- 3 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா.
எடப்பாடி- சகாக்கள் டெல்லி பயணமும்! கூட்டணி. முறிவும்! அண்ணாமலை கூட்டி - கழித்ததேர்தல் அரசியல் பயன்தருமா? எழுந்துவரும் சர்ச்சைகளும், சந்தேகங்களும்!
அதிமுக - பாஜக கூட்டணி மோதல் உச்சத்தில் உள்ள போல் பிம்பம்கட்டமைக்கபட்ட நிலையில், கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்குவதாக கூறும் எடப்பாடியின் பேச்சும், சமீபத்திய டெல்லி பயண சம்பங்களும், சகாக்கள் புடை கழல சென்றதும் பல்வேறு சர்ச்சைகளையும் - சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.!
ஆனாலும் ஊடகங்களில் பக்கம் பக்கமாக, விவாதங்களாக பல தரப்பட்ட கதைகளை கூறுவார்கள்....
கதைகள்தானே இன்றையஅரசியல்!
ஆனால் தமிழ்நாடு அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது- எதிரிகளே இல்லாத களத்தில் தி.மு.க. சிக்ஸர் அடித்துக் கொண்டிருக்கும். என்கிற வலைதளவாசிகளின், வைரலுக்கும் பஞ்சமில்லை!

சமீபத்தில் பாஜக உடன் கூட்டணி உடைந்தது. பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று அதிமுக அறிவித்தது. அதன்பின் மறுநாளே அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அதிமுகவினர் பேச கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக செய்திகள் வந்தன.
இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டணி குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடாமல் மழுப்பலாக பேசினார்.
அவர் பேச்சில், அதிமுக- பாஜக இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கா ? இருக்கலாம்.. ஆனால், அதுவும் எனக்கு தெரியாது!


கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜம்தான் என்றெல்லாம் அரசியல் களத்தில் பட்டிமன்றங்களும் கருத்தரங்களும் உருவானது!.
இபிஎஸ்ஸை அடுத்த முதல்வராக்குவோம் என நான் கூற முடியாது. நான் யாரையும் எங்கேயும் தவறாக பேசவில்லை. என் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை ஒரே போடாக போட்டது தான் உச்சத்திலும், உச்சம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள் வட்டாரங்களில்.!
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக தேசிய பாஜக தலைவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் இருப்பது தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு மட்டுமல்ல, நடுநிலையாளர்கள், உள்ளிட்ட கூட்டணி கட்சியினரிடத்திலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டது!.

இந்த கூட்டணி குழப்பத்திற்கு இடையில் தமிழ்நாடு அதிமுக தலைவர்கள் பலர் சி.வி. சண்முகம் தலைமையில் பாஜகவின் பியூஸ் கோயலை சந்தித்த தகவலும் பரப்புடன் வெளியானது.!அதிமுக - பாஜக மோதல் தொடர்பாக ஆலோசனை செய்ய இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்பட்டது.!
அதன்பின் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உடனும், இவர்களின் சந்திப்பு நீண்டது. இந்த சந்திப்பில் பேசிய அதிமுக தலைவர்கள், பாஜக கூட்டணியில் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அதிமுக கட்சியை அவர்கள் அவமதிப்பதை ஏற்க முடியாது . அண்ணாமலையை மாற்றும் படி நாங்கள் கூற முடியாது,
ஆனால் அண்ணாமலை இருக்கிறவரை கூட்டணியில் சிக்கல்தான். அவர் கூட்டணியை மதிப்பது இல்லை. அவரால் பாஜக அதிமுக கூட்டணிக்கு நல்லதா என்று நீங்களே பாருங்கள். அவரால் அதிமுகவை விடுங்கள் பாஜகவிற்கு நல்லதா என்பதை முதலில் பாருங்கள். என்கிற பேச்சுக்கும் பஞ்சமில்லை!
பாஜகவிற்கு அவர் என்ன செய்கிறார் என்பதை உளவுத்துறை மூலம் நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், என்று பொறிந்து தள்ளியதாகவும், அதிமுக வட்டாரத்தில் சற்று பலமாகவே முனுக்கவும்பட்டது.!

இந்த சந்திப்பிற்கு பின் வெள்ளி, சனிக்கிழமை இரண்டு நாட்களுமே அமித் ஷாவை சந்திக்க அதிமுக தலைவர்கள் நேரம் கேட்டனர். ஆனால் அதற்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்கிற பேச்சுக்கும் பஞ்சமில்லை!.
அதிமுக - பாஜக கூட்டணி மோதல் உச்சத்தில் உள்ள நிலையில், கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்கும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரோ என்கிற கேள்வியும் காற்றுவாக்கில் தமிழக அரசியல் களத்தில் எழுமாலும் இல்லை!.

அதன்படி 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து இறுதிக் கோரிக்கையை எடுப்பதற்காக, நேற்று திங்கள்கிழமை மாலை மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அதிமுக அழைப்பு விடுத்தது.
இதில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படலாம் என்கிறார்கள். முக்கியமாக பாஜக, காங்கிரஸ் யாருடனமும் கூட்டணி வைக்காமல் நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி போல தனியாக களமிறங்கும் திட்டத்தில் எடப்பாடி இருக்கலாம் என்கிறார்கள்!.



அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பேசும் போது ‘நாம் இருவரும் கூட்டணி வைத்து போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் தோற்றிருக்கிறோம்..’ என்றுதான் உரையாடல் தொடங்கியிருக்கிறது!
இந்த பேச்சுதான் அரசியல் பார்வையாளர்கள் பலரையும், பெரும்மையான மக்களையும் மிகவும் சிந்திக்க வைத்துள்ளது.! என்கிற எதிர்வினை கருத்துக்களும் சற்று ஓங்கித்தான் ஒலிக்கவும் செய்தது.!
‘ஒரு வாய்ப்பு தாருங்கள் 10 தொகுதிகளில் வென்று உங்களுக்கு தேர்தலுக்குப் பிறகு ஆதரவு அளிக்கிறோம்’ என்று உறுதி அளிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. என்கிற உடன்பாடு பேச்சும் எழுமால் இல்லை
மேலும் அமித்ஷாவிடமிருந்து அண்ணாமலைக்கு
அதிமுகவை திட்டுவது போல நடிக்கத் தொடங்குங்கள் என்ற உத்தரவும் வந்தது செல்கிறது எதிரணி வட்டார பேச்சுக்கள்!.
அதிமுகவுக்கு உறுதியாக வரவே வராத வாக்குகளை பாஜகவுக்கான வாக்குகளாக மடைமாற்றுவது மட்டுமே
அண்ணாமலைக்கான அசைன்மெண்ட் என்றும்!

எப்படியும் முக்குலத்தோர் வாக்குகளை எடப்பாடியால் பெறவே....! முடியாது எனவே அதனை பாஜகவை நோக்கி ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் முத்துராமலிங்கத் தேவர் அரசியலை கையில் எடுக்கிறார் பா.ஜ. அண்ணாமலை!.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விமர்சித்த போதெல்லாம் பம்மிக் கொண்டிருந்த அதிமுக தலைவர்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட் படி அண்ணாமலையை எதிர்ப்பது போல குரல் கொடுத்தார்கள். இது உமியும் - அவிலும் கதைப்போல...!
வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் டெல்லி சென்று பாஜகவின் தலைவர் நட்டாவிடம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இயற்றப்படும் தீர்மானம் குறித்து முன்னரே அனுமதி பெறத்தான்!.

அனைத்தும் தீர்மானிக்கப்பட்டபடி மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்நடத்தப்பட்டு, கிளைமேக்ஸாக கூட்டணி முறிவதாக அறிவிக்கவும்பட்டது !!
இனி புரோக்கர்கள் குதூகலிப்பார்கள். எடப்பாடியை ஆளுமை என்று புகழ்வார்கள்.20%க்கு மேல் அவருக்கு மக்கள் ஆதரவில்லை என்று எடப்பாடிக்கும் தெரிந்திக்கும்...! ஜனநாயகம் காப்பதாக கூறும் ஊடகங்களுக்கும் தெரியும்...!
என்கிற எதிரணி அரசியல் களத்தில் பிட்டு, பிட்டும் கருத்துக்களும் வெளிவந்து கொண்டேதான் இருக்கிறது.!
எது எப்படியோ? எல்லாவற்றிக்கான முடிவு என்னவோ ஓட்டுப் போடவுள்ள மக்களிடம்தான்!
தேர்தலும், முடிவுகளும் வரட்டும் காத்திருப்போம்!

ஆனாலும் ஊடகங்களில் பக்கம் பக்கமாக, விவாதங்களாக பல தரப்பட்ட கதைகளை கூறுவார்கள்....
கதைகள்தானே இன்றையஅரசியல்!
ஆனால் தமிழ்நாடு அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது- எதிரிகளே இல்லாத களத்தில் தி.மு.க. சிக்ஸர் அடித்துக் கொண்டிருக்கும். என்கிற வலைதளவாசிகளின், வைரலுக்கும் பஞ்சமில்லை!
உறியடி செய்திக்குழுவினர்.




Comments