முதல்வரின் வழிகாட்டுதலோடு! பருவமழையை எதிர்கொள்ள அரசு தயராக உள்ளது !! அமைச்சர் கே.என்.நேரு தகவல்!!!
- உறியடி செய்திகள்

- Nov 19, 2022
- 2 min read

மணவை, எம்.எஸ்.ராஜா....
தமிழக முதல்வர் தளபதியாரின் வழிகாட்டுதல்கள் படி பருவமழையை எதிர்கொள்ள, மக்களை காத்திட அரசு தயராக உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு தகவல்.....
திருச்சி கலையரங்கத்தில் 69 ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா இன்று நடைபெற்றது.

தி.மு.கழக முதன்மைச் செயலாலர், தமிழக நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அ. கே.என்.நேரு, சிறுபான்மை நலத்துறைஅமைச்சர் செஞ்சி மஸ்தான், திருச்சி மாநகர தி.மு.கழக செயலாளர், திருச்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், செளந்தரராஜன், பழனியாண்டி, அப்துல் சமது, உட்பட பலர் கலந்து கொண்டார்கள்..

நிகழ்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
பின்னர். செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கழக முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை-குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி.மு.க.ஸ்டாலின் நேரடி கண்காணிப்பிலும், ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல் களுக்கு ஏற்ப,வடகிழக்கு பருவமழையில் சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளபட்டது. தொடர்ந்து எதிர்வரும் பருவமழை காலப் பணிகளையும், மிகுந்த கவனமுடனும், உரியமுறையில் மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் வழங்கியள்ளார்.....

எவ்வளவு மழை பெய்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் தேவையானநடவடிக்கைகளை துரிதமாக எடுக்க தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது.......
சென்னையில் இரண்டு இடங்களில் மட்டுமே பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதுவும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்கள் வெட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது....

திருச்சி மாவட்டத்தில் நடவுப் பணிகள் முடியும் தருவாயில் யூரியா தட்டுப்பாடு இருப்பதாக சொன்னார்கள். இது தொடர்பாக துறை அமைச்சரிடம் பேசி . விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு கடன் தர கூட்டுறவுத்துறை அமைச்சரிடமும் பேசி . அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் சம்மட்டி வைத்து அடித்து விட்டதால் காவிரி பாலத்தின் பேரிங் உட்கார்ந்து விட்டது. அதனை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் இந்த மாதிரியான தொழில்நுட்ப பணிகளை வேகமாக முன்னெடுக்க இயலாது. அதனால் தான் தாமதம் ஏற்படுகிறது. இன்னும் இரண்டு மாத காலத்தில் திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி அடிப்படை பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் எடுப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.......
தற்போது அதற்கு எதிர்ப்புகள் வந்துள்ளதால் பழைய முறைப்படி பணி நியமனம் செய்ய தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.....

முன்னதாக, திருச்சி பஞ்சப்பூரில் ஆசியாவிலேயே, மிக பெரிய அளவிலானா, அனைத்து விதமான வசதிகளுடன், தொடங்கப்பட்டுள்ள புதியமத்திய பேருந்துநிலைய கட்டுமானப்பணியை நேரில், ஆய்வு மேற்கொண்டு பணியின் தற்போதைய நிலை குறித்தும், கேட்டறிந்து, புதிய பேருந்துநிலைய கட்டுமான வரைப்படம் மூலம் பார்வையிட்டும்,............

பணிகளை தொய்வின்றி விரைந்து உரிய காலத்திற்குள்முடிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறி, பணிகளை முடுக்கிவிட்டு அதிகாரிகள் தீவிர கவனத்துடன், கண்காணிக்கவும் வலியுறுத்தினார். அமைச்சர் கே.என்.நேரு.
தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான். மாநகர தி.மு.கழகசெயலாளர், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாவட்ட தி.மு.கழகத் துணைச்செயலாளர் முத்துச் செல்வம், கலெக்டர் பிரதீப்குமார், உட்பட பலர் உடனிருந்தார்கள்.




Comments