top of page
Search

உலக அளவிலான புத்தக திருவிழா! தூத்துக்குடி விழாவில்,அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 23, 2022
  • 1 min read
ree

மணவை. எம்.எஸ்.ராஜா...


மக்களின் சிந்தனை திறனை அதிகரிக்கச் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் புத்தக திருவிழா, முதல்வரின் உத்தரவுப்படி நடந்துவருகிறது. விரைவில் உலக அளவிலான புத்தக திருவிழாவும் நடத்தப்படவுள்ளது. என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.....


தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகத் திருவிழாவினை தி.மு.கழக துணை பொதுச் செயலாளர், நாடாளுமன்ற தி.மு.கழகக்குழுவின் துணைத் தலைவர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வத்து பேசியதாவது......


தி.மு.கழக தலைவர்தமிழ்நாட்டின்

முதலமைச்சர், தளபதியாரின். உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.

புத்தகத்தின் முக்கியத்துவத்தை வருங்கால தலைவர்களாகிய இளைஞர்கள் அறிய வேண்டும், புத்தக பதிப்பாளர்களுக்கும். உரியவருவாய் கிடைக்க வேண்டும், புத்தகங்கள் பதிப்பிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறவும் வேண்டும் என்பதற்காக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதியாரின்,முயற்சியால் இந்தபுத்தக திருவிழா தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது..........

ree

மேலும் ஜனவரி மாதத்தில் உலக அளவிலான புத்தக திருவிழா நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார்கள்.......

தமிழர்கள் நல்ல அறிவாற்றல் பெற்ற சமுதாயமாக இருக்க வேண்டும், தங்களை நல்ல சிந்தனையாளர்காளக மாற்றிக்கொள்ள வேண்டும், புத்தக வாசிப்பையும், நாம் அனைவரும் ஊக்கவிக்க வேண்டும் என்பதற்காக புத்தக திருவிழா தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.......

புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அறிவாற்றலை பெருக்கிக்கொள்ள முடியும். நம்முடைய சிந்தனைத்திறன் அதிகரிக்கும். உலக நிகழ்வுகளை நாம் அறிந்துகொள்ள முடியும். உங்களுக்கு பிடித்த புத்தகங்களை நீங்களே தேர்வு செய்து படிக்க வேண்டும். புத்தக திருவிழா மூலம் மாணவ, மாணவிகள், வாசகர்கள் அனைவரும் பயனடைய வேண்டும் இவ்வாறாக அவர் கூறினார்......

.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page