உலக பத்திரிக்கையாளர் தினம்! தமிழக பத்திரிக்கையாளர் கறுப்புதினமானது!! மாற்றம் வருமா?
- உறியடி செய்திகள்

- May 3, 2023
- 2 min read

தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு,மே 3 உலக பத்திரிகை சுதந்திர தினம்-கறுப்பு தினம்!
ஊடகவியலாளர்கள் மீது தொடரும் புனையப்பட்ட பொய் வழக்குகள்!
கைது செய்ய காவல்துறை காட்டிய வேகம் - பிணையில் வர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்துவரும் அவலம்,. இப்படி புணையப்படும் வழக்குகளில் வழக்கின் பின்னணியில் பல மாவட்ட நிர்வாக அதிகாரிகளே உடந்தையாக உள்ளதாக தகவல்கள் வருகிறது.
கரூர், , சென்னை, ராணிபேட்டை,மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சிகாலத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மம் கொண்டும். சில ஆதிக்க - அதிகார வர்க்கம், கனிம மாபியாக்களின் விசுவாகிகளாக மாறிப்போய், பத்திரிக்கையாளர் என்பதைக் கூட மறைத்து மனித உரிமை மீறல் செயல்களுடன், தமிழ்நாடு காவல்துறையின் கட்டளைகளை புறம்தள்ளி உண்மைக்கு மாறான புணையப்பபட்ட பொய் வழக்குகள் போட்டு, பத்திரிக்கையாளர்களை அலைக்க செய்வதும் - மன உலைச்சலுச்சலுக்கு ஆளாக்கும் சம்பவங்கள் இப்போதும் தொடர்வது மிகுந்த வேதனைக்குரியதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள செய்தியாளர்கள் மீது பணம் கேட்டு மிரட்டுதல், கொலை மிரட்டல், திருட்டு வழக்கு தொடர்புனையப்பட்ட வழக்குகளை சட்டரீதியில் எதிர்கொண்டு முடிக்கப்பட்ட வழக்குகளை குறிப்பிட்டு, காவல்நிலையங்களின் சரித்திரபதிவேட்டில் கொண்டு அதனை உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல், தொடர்ந்து பல ஆண்டுகளாக சரித்திரபதிவேட்டை, காவல்துறை உண்மைக்கு மாறான காரணங்களை காட்டி இன்றுவரை பத்திரிக்கையாளர்களை மிரட்டி வருவதும். இந்நிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிமாற்றம் அமைந்த பின்னும். தொடர்வது வேதனையிலும், வேதனையே
பத்திரிகையாளர்கள் மீது போடப்படும் வழக்குகள் பொய் என்று தெரிந்தும் காலல்துறையினர், அதிகார மனநிலையில்தாங்கள் போட்ட வழக்குகள் என்பதால் ஒரு புறம் மவுனம் சாதிப்பது இன்றும் தொடர்வதும். உளவுத்துறை காவலர்களும் இத்தகைய செயல்களுக்கு உடந்தையாகி வருவதும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியளிக்கும் வகையிலே உள்ளது.
இந்த கொடுர சூழலில் பத்திரிகை சுதந்திர தினம் கருப்பு தினமாகவே எண்ணவேண்டியுள்ளது.
பாஜக அண்ணாமலை ஒரு பக்கம் பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்து ஆத்திரங்களை" வன்மங்களை கக்கும் நிலையில் காவல்துறையினரும் தங்கள்கடமை மீறி பொய்வழக்குகள் போட்டு மிரட்டுகின்றனர்.
பத்திரிகைகள் பத்திரிகையாளர்கள் மீது வன்மம் கொண்டு இந்த மோசமான நிலைக்குத் தள்ளி வரும் காவல்துறையினரின் பொறுப்பற்ற தன்மையால் பத்திரிகையாளர்களுக்கும் தமிழக அரசுக்கும் இடைவெளியை ஏற்படுத்தும் இத்தகைய செயல்களால் பத்திரிகைசுதந்திர தினத்தை கருப்பு தினமாக மாற்றியுள்ளனர்...

மண்டல ரீதியாக, நேரடியாக நிர்வாக ஆய்வை முன்னெடுத்துதமிழக முதலமைச்சர், அப்பகுதி காவல்துறையினர் தரும் இதுபோன்ற தகவல்களை காகிதங்களை பார்த்து மட்டும் நிறைவு செய்யாமல் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தரப்பு விளக்கத்தையும் உள்துறை செயலாளரை இதில் உடனடியாக தலையிட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும்.......
திராவிட மாடல் ஆட்சியினை முன்னெடுத்து தமிழக மக்களுக்கு பணியாற்றிவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எதிர்வரும் 2024. ஆண்டு பத்திரிக்கையாளர் தினமாவது அர்த்தமுள்ளதாக அமையவேண்டும் என்பதே எல்லோரது நியாயமான எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனை வலியுறுத்தியே பத்திரிக்கையாளர்கள் சங்கங்களும், நிர்வாகிகளும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருதும் குறிப்பிடதக்கது.




Comments