தூத்துக்குடி:மக்கள் களம்! கோரிக்கைகள் மீது அதிரடி நடவடிக்கை! கனிமொழி கருணாநிதி வலியுறுத்தல்!
- உறியடி செய்திகள்

- Sep 15, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா...
தூத்துக்குடி:மக்கள் களம்! கோரிக்கைகள் மீது அதிரடி நடவடிக்கை! கனிமொழி கருணாநிதி வலியுறுத்தல்!
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்தில் உள்ள இராஜபதி ஊராட்சியில் நடைபெற்ற 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியில் தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளர்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு துணைத் தலைவர், கவிஞர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார். !
அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று,குறைகளைக் கேட்டறிந்தார். விழாவில்,26 பயனாளிகளுக்கு ரு. 15,31,273 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார்.!

முன்னதாக, இராஜபதிலிருந்து மணத்தி இனைப்பு சாலைக்கு இலவசமாக தங்களது நிலங்களைக் வழங்கிய 20க்கும் மேற்பட்டோரை கனிமொழி கருணாநிதி எம்.பி கௌரவித்தார்.!
தொடர்ந்து, ஏரல் வட்டத்தில் உள்ள குருகாட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று,குறைகளைக் கேட்டறிந்தார். இதில் 14 பயனாளிகளுக்கு ரு. 2,68,673 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கனிமொழி கருணாநிதிஎம்.பி வழங்கினார்.!
முன்னதாக, ஏரல் வட்டத்தில் அமைந்துள்ள குரங்கணி ஊராட்சியில் நடைபெற்ற 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியிலும் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று,குறைகளைக் கேட்டறிந்தார். 44 பயனாளிகளுக்கு ரு. 52.13 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கனிமொழி கருணாநிதி,எம்.பி வழங்கினார்.!

தொடர்ந்து
மழைப் பொய்த்துப் போனதால் உமரிக்காடு, வாழவல்லான், கொற்கை, அகரம், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.!

தூத்துக்குடி - மஞ்சள்நீர்காயல் ஊராட்சியிலுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உபகோட்ட சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி அப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும். குழாய்கள் மூலம் நிரந்தரமாகக் குடிநீர் வழங்குவதற்கானப் பணிகள் நடைபெறவுள்ள நிலையில், தற்காலிமாக லாரிகள் மூலம் சுற்றுவட்டார கிராமங்களுக்குக் குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கனிமொழி கருணாநிதி கூறினார்.!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர்,மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார், ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.




Comments