top of page
Search

தினசரி 1.76. கோடி பேர் பயணம்! அரசுபேருந்து பராமரிப்பில் தனி கவனம்! அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 23, 2024
  • 2 min read

Updated: May 24, 2024

ree

தமிழ்­நாடு அரசு போக்­கு­வ­ரத்­துக் கழக பேருந்­து­கள் மூலம் தின­சரி 1.36 கோடி பேர் பய­ணம் செய்­தி­ருக்­கி­றார்­க­ளென்­றும், நடப்பு நிதி­யாண்­டின் 7682 புதிய பேருந்­து­கள் வாங்­கப்­ப­டும்.! அமைச்­சர் எஸ்.எஸ்.சிவ­சங்­கர் தகவல் .!


இது குறித்து அரியலூர் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு போக்­கு­வ­ரத்­துத்­துறை அமைச்­சர் சா.சி.சிவ­சங்­கர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது.!


2011–2021 வரை­யி­லான 10 ஆண்டு காலத்­தில் அதி­முக அரசு 14,489 புதிய பேருந்­து­களை அதா­வது சரா­ச­ரி­யாக வரு­டத்­திற்கு 1449 பேருந்­து­கள் என அறி­மு­கப்­ப­டுத்­தி­யது தி.மு.கழக அரசு 2006–2011 வரை­யி­லான 5 ஆண்டு காலக்­கட்­டத்­தில் 15,005 பேருந்­து­கள் என வரு­டத்­திற்கு 3001 புதிய பேருந்­து­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.!

ree

கொரோனா பெருந்­தொற்று காலத்­தில் புதிய பேருந்­து­கள் வாங்­காத கார­ணத்­தி­னால், வயது முதிர்ந்த பேருந்­து­க­ளின் எண்­ணிக்­கை­யும், அவற்­றின் ஆயுட்­கா­ல­மும் உயர்ந்­து­விட்­ட­தால், அவற்றை கழிவு செய்து படிப்­ப­டி­யாக புதிய பேருந்­து­களை மாற்ற வேண்டி உள்­ளது.!

கே.எப்.டபுள்யூ. (KfW) .ஜெர்­மன் வளர்ச்சி வங்­கி­யின், மூலம் 2213 டீசல் மற்­றும் 500 மின்­சா­ரப் பேருந்­து­கள் வாங்­கு­வது சம்­பந்­தப்­பட்ட வழக்­கில் கடந்த ஆண்டு தகுந்த அறி­வு­ரை­கள் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து பெறப்­பட்டு அதன் அடிப்­ப­டை­யில் பேருந்து கொள்­மு­தல் செய்ய, தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியாரின் வழிகாட்டுதலுடன் துரித நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு, தற்­போது பேருந்­து­கள் கூண்டு கட்­டு­வ­தி­லும், ஒப்­பந்த நிலை­யி­லும் உள்­ளது.!


முந்­தைய அ.தி.மு.க அரசு போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­க­ளுக்கு 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலத்­தில் ரூ.23494.74 கோடி என வரு­டத்­திற்கு சரா­ச­ரி­யாக ரூ.2,349.47 கோடி மட்­டுமே வழங்­கி­யது. தி.மு.க அரசு 2021–24 ஆண்டு வரை 4 ஆண்டு காலத்­திற்கு ரூ.29,502.70 கோடி என வரு­டத்­திற்கு சரா­ச­ரி­யாக ரூ.7,375.68 கோடி நிதி ஒதுக்­கீடு செய்து உள்­ளது.!


மேலும், 2022–23, 2023–24 மற்­றும் 2024–25 நிதி ஆண்­டு­க­ளில் இந்த அரசு புதிய பேருந்­து­கள் மற்­றும் 6 ஆண்­டு­க­ளுக்கு மேற்­பட்ட பேருந்­து­க­ளின் கூண்­டு­கள் புதுப்­பிக்க நிதி ஒதுக்­கீடு செய்து 7682 புதிய பேருந்­து­கள் மற்­றும் 1000 மின்­சா­ரப் பேருந்­து­கள் மொத்த செலவு ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் என 8,682 புதிய பேருந்­து­கள், 1,500 பேருந்­து­கள் கூண்டு கட்டி புதுப்­பிக்க எடுத்த நட­வ­டிக்­கை­யில் இது­வரை 791 புதிய பேருந்­து­க­ளும் மற்­றும் 858 புதுப்­பிக்­கப்­பட்ட பேருந்­து­க­ளும் மக்­க­ளின் பயன்­பாட்­டிற்கு வந்­துள்­ளது.!

ree

மேலும், 2024–25 ஆம் ஆண்டு இறு­திக்­குள் 7,682 புதிய பேருந்­து­க­ளும் 1,500 கூண்டு புதுப்­பிக்­கப்­பட்ட பேருந்­து­க­ளும் மக்­க­ளின் பயன்­பாட்­டிற்கு வர துரித நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு ஒவ்­வொரு மாத­மும் 300–க்கும் அதி­க­மான புதிய பேருந்­து­கள் மக்­கள் பயன்­பாட்­டிற்கு வந்து கொண்டு உள்­ளது.!


மக­ளி­ரின் வாழ்­வில் ஒளி­யேற்ற வேண்­டும் என்ற உயர்ந்த குறிக்­கோ­ளு­டன் “ விடி­யல் பய­ணத் திட்­டம் “ கட்­ட­ண­மில்லா பய­ணச் சேவை­யாக தொடங்­கப்­பட்டு, இது நாள் வரை மக­ளிர் 473.61 கோடி பயண நடை­க­ளும், திரு­நங்­கை­கள் 28.62 இலட்­சம் பயண நடை­க­ளும், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் அவர்­தம் உத­வி­யா­ளர்­கள் 3.78 கோடி நடை­க­ளும் மேற்­கொண்டு பய­ன­டைந்­துள்­ள­னர். இவர்­கள் மாத­மொன்­றிற்கு பய­ணக்­கட்­ட­ணத்­தில் ரூ.888/– சேமித்து பிற செல­வு­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும், வாழ்க்­கைத்­த­ரம் உயர்ந்­துள்­ள­தா­க­வும் ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.!


இந்த அரசு எடுத்த நட­வ­டிக்­கை­க­ளால், கோவிட்–19 காலத்­திற்கு பின் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை உயர்ந்து, தற்­போது 1.76 கோடி பய­ணி­கள் தின­சரி பய­ணிக்­கின்­ற­னர்.!

பேருந்­து­களை பரா­ம­ரிப்­ப­தில் தனிக் கவ­னம் செலுத்தி தடை இல்­லாத பேருந்து சேவையை மக்­க­ளுக்கு அளிக்க தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது.!

முந்­தையை அரசு காலத்­தில் பேருந்­து­கள் விபத்­தி­னால் வரு­டத்­திற்கு, 1201 என நடந்த உயி­ரி­ழப்­பு­கள், தற்­போது 911 என குறைந்­துள்­ளது. இந்த எண்­ணிக்கை மேலும் குறைக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.!

திமுக அரசு போக்­கு­வ­ரத்­துக் தொழி­லா­ளர்­க­ளின் நல­னுக்­காக கீழ்க்­கண்­ட­வற்றை செயல்­ப­டுத்­தி­யுள்­ளது.!


1998 ஆண்டு முதல் ஓய்­வு­பெற்ற பணி­யா­ளர்­க­ளுக்கு மாத ஓய்­வு­தி­யம் அமல்­ப­டுத்­தி­யது

போக்­கு­வ­ரத்­துக் கழக தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கிய மாறும் அக­வி­லைப்­ப­டியை மாற்றி தமிழ்­நாடு அரசு ஊழி­யர்­க­ளுக்கு இணை­யாக சத­வீத அடிப்­ப­டை­யில் அக­வி­லைப்­படி வழங்­கி­யது

போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­க­ளின் வர­வுக்­கும் செல­வுக்­கு­மான பற்­றாக்­குறை நிதியை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

மேலும், வரும் நிதி ஆண்­டு­க­ளி­லும், புதிய பேருந்­து­கள் வாங்­கப்­பட்டு வயது முதிர்ந்த பேருந்­து­களை கழிவு செய்ய தொடர் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும்.!


இவ்வாறு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page