100 கோடி சொத்து சேர்த்த, சவுக்கு சங்கர்! நீதிமன்றத்தில் கோஷம்! தமிழக அரசுசெயலிழந்துவிட்டதாக .....!
- உறியடி செய்திகள்

- Jun 21, 2024
- 2 min read

யூடியூபர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு சொந்தப் பிணை வழங்கி நீதிபதி விஜயபாரதி உத்தரவு.!
காவல் துறை ஏவல் துறையானது.கள்ளச்சாராய சாவுகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்ட யூடிப்பர் சவுக்கு சங்கர்.!

யூடியூபர் சவுக்கு சங்கர் அலுவலகத்தில் பணிபுரிந்த கார்த்திக் என்பவர் மீது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு சொந்தப் பிணை வழங்கி நீதிபதி விஜயபாரதி உத்தரவிட்டார்.

பிணை கிடைத்தப் பிறகு போலீசார் அழைத்துச் சென்றபோது 'கள்ளச்சாராய சாவுகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளது தமிழக அரசின் கையாளாகாத்தனத்தை காட்டுகிறது, என்று பணமோசடி புகாரில் 2 குற்றவாளியாக சேர்க்கப்பட்ட, சுமார்100 கோடிக்கு மேல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள யூடியூப்பர் கோஷம்.!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவரான கார்த்திக் என்பவர் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.!
இந்த வழக்கின் போது கார்த்தி யூட்டியூபர் சாவுக்கு சங்கரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.!

இந்நிலையில் அந்த மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரையும் இரண்டாவது குற்றவாளியாக அறந்தாங்கி போலீசார் சேர்த்து வழக்கு பதிவு செய்தனர்.!
இந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் நேற்று ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.!
வழக்கை விசாரித்த நீதிபதி விஜயபாரதி, சவுக்கு சங்கருக்கு சொந்த பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.!
பிணை கிடைத்த பிறகு போலீசார் அழைத்துச் சென்ற போது சவுக்கு சங்கர் தமிழக அரசு தங்களை எதிர்த்து பேசுபவர்களை, அரசியல் எதிரிகளை பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதற்காக தான் காவல்துறையை வைத்துள்ளது. தமிழக அரசு பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிக்க மேற்கொள்ளாததன் விளைவு தான் 33 உயிர்களை பலி வாங்கியுள்ளது.!

கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் இதுவரை தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது என்று, முழக்கமிட்டார்.!
வருமானத்திற்கு அதிகமாக, கடலூர் சிறையிலிருந்து வெளிவந்தவுடனே சுமார் 100 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது.
பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டது போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றசாட்டுக்கு ஆளாகியுள்ள யூடியூப்பர்,சவுக்கு சங்கரின் தமிழக அரசின் மீதான இத்தகைய விமர்சனம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்!
என்பதும் குறிப்பிடதக்கது.!
புதுக்கோட்டை சிவா...




எதுவுமே இல்லை