top of page
Search

100 நாள் வேலை திட்டம்! நிதி ஒதுக்காத பாஜக கூட்டணி அரசு! கனிமொழி கருணாநிதி எம்.பி கடும் குற்றசாட்டு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 16, 2024
  • 2 min read
ree

100 நாள் வேலைத்திட்டம் திமுக - காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டது. கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு 100 நாளாவது வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்.!


திமுகவும் காங்கிரசும் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை,” என்றும் தி.மு.கழக எம்.பி, கனிமொழி கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.!

ree

தி.மு.கழகத்துணை பொதுச் செயலாளர்,தூத்துக்குடி மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர், கவிஞர் கனிமொழி கருணாநிதி நேற்று ஜூலை 15 குறுக்குச்சாலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.!


தொடர்ந்து வேடநத்தம், குளத்தூர், கீழே வைப்பார், வேம்பார், சூரங்குடி, அரியநாயகிபுரம், விளாத்திகுளம், கரிசல்குளம், நாகலாபுரம், சின்னவநாயக்கன்பட்டி, புதூர், சிவலார்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.!


அப்போது அவர் பேசியதாவது.


“உங்களில் ஒருவராக இருந்து. இறுதி வரை கழகத்தலைவர், தமிழ்நாடு முதல் அமைச்சர் தளபதி வழியில், உங்களுக்காக பணியாற்றுவேன் என்று உறுதியுடன் கூற பெரிதும் கடமைப் பட்டுள்ளேன்.!!

ree

100 நாள் வேலை என்பது உங்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.! எனவே தான் தி.மு.கழகத் தேர்தல் அறிக்கையில்

தமிழ்நடு முதல் அமைச்சர் தளபதி,100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி வழங்குவேன் என கூறியிருந்தார்.!


அதேபோல் காங்கிரஸ் பேரியக்கமும் 100 நாள் வேலைக்கு ரூ.400 சம்பளம் என அறிவித்திருந்தனர். நீங்கள் சரியாக வாக்களித்து விட்டீர்கள்.!


உங்களைத் தவறு சொல்ல முடியாது. ஆனால் மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் வாக்களிக்கவில்லை. அதனால் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி தான் வந்துள்ளது.!


கடந்த முறையை விட குறைவாக வெற்றி பெற்றிருந்தாலும், வெற்றி பெற்றது அவர்கள் தான்.

ree

100 நாள் வேலைத்திட்டம் என்பது திமுக - காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டது. கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு 100 நாளாவது வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம். தி.மு.கழக மும், காங்கிரசும் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.!


நாங்கள் டெல்லியில் ஒவ்வொரு முறையும் சண்டையிடுகிறோம். மக்களவையில் இது போன்ற பிரச்சினைகளை எழுப்புகிறோம்.!


மக்களவை நிலைக் குழு தலைவராக நான் இருந்துள்ளேன்.!


நாங்களும் இது போன்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பலமுறை அறிக்கை அளித்து விட்டோம்.!

ree

இந்தியா முழுவதும் யாருக்கும் முழுமையாக 100 நாள் வேலையும் கிடைப்பதில்லை. அதில் சம்பளமும் முறையாக கிடைப்பதில்லை என்பதை வலியுறுத்தியும் தெரிவித்து விட்டோம்.!


எனவே ஒன்றிய பாஜக கூட்டணி அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கூறிய பின்னரும், நிதி அமைச்சரும், பிரதமர் மோடியும் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பற்றிய அக்கரையில்லாமல் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.!.


அதனால்தான் 100 நாள் வேலை சரிவர எல்லோருக்கும் கொடுக்க முடியவில்லை.!


மோடி தலைமையில், அவர்கள் கூட்டணிஆட்சியில் உள்ளனர். ஆனால் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை.! தொடர்ந்து மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும் வகையில் தான் செயல்படுகின்றனர்.

எனவே தான் ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இந்த நாடு காத்திருக்கிறது.!


தி.மு.கழகத் தலைவர்

தமிழ்நாடு முதல் அமைச்சர் தளபதி மக்கள் நலனுக்காக எந்த வாக்குறுதி அளித்தாலும் நிறைவேற்றக்கூடியவர்.


இதேபோல் காங்கிரசும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்.!


விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 100 நாள் வேலை நிச்சயம் எல்லோருக்கும் முழுமையாக அதிகரித்து கொடுக்கப்படும்.!

ree

ஆனால், வரக்கூடிய பட்ஜெட்டிலாவது மோடி அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்தால் 100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்குவோம்,” என்று கூறினார்.!


அப்போது வேடநத்தம் கிராமத்தில் கூடியிருந்த பெண்கள்100 நாள் வேலை சரியாக கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.


அதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., “100 நாள் வேலை மாநில அரசு கொடுக்க முடியாது. ஒன்றிய அரசு நி விருதுக்கீடு செய்ய வேண்டிய திட்டம், நிதி ஒதுக்கினால் தான் வேலை வழங்க முடியும்.!

எனவே தான், நான் உங்களுக்காக மக்களவையில் வலியுறுத்தி கேள்வி எழுப்பி வருகிறேன்.!

ree

இதே கோரிக்கையை எல்.முருகன், அண்ணாமலை வரும்போது நீங்கள் கேட்க வேண்டும்! இவ்வாறு கனிமொழி கருணாநிதி, எம்.பி. பேசினார்..


தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் உட்பட பலர்

கலந்து கொண்டனர்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page