முத்தமிழறிஞர் கலைஞரின் 102. வது பிறந்தநாள்.! அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் மலர் தூவி மரியாதை! காலம் உள்ள வரை புகழ் நிலைத்திருக்கும்!
- உறியடி செய்திகள்

- Jun 3
- 3 min read

மணவை.எம்.எஸ்.ராஜா@
ச.ராஜா மரியதிரவியம். தோகமலை .........
ஜூன் 3, இன்று தி.மு.கழக தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 102 ,வது பிறந்தநாள்.! அமைச்சர் கே.என்.நேரு தனது இல்லத்தில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை.! காலம் உள்ள வரை தலைவர் கலைஞரின் புகழ் நிலைத்திற்கும் புகழ் மாலை.!
1924சூன் 3,ம், ந் தேதி தமிழகத்தின், இன்றைய நாகபட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட
திருக்குவளை, எனும் ஊரில் பிறந்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர், தமது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தமது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை 7-7-1944 அன்று உருவாக்கினார். அதன் தலைவராக கலைஞரும், அமைச்சராக கே.வெங்கிடாசல என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன் மூலமாக இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பை பெருமளவு உதவ வழிவகையும் செய்த கலைஞர். அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிட்டு பெருமளவில் இளைஞர்களைத் திரட்டினார். சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான 'அனைத்து மாணவர்களின் கழகம்' என்ற அமைப்பாக உருப்பெற்றது. கலைஞர் , மற்ற உறுப்பினர்களுடனான சமூகப்பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார்.
இதனையடுத்து
திராவிட முன்னேற்றக் கழகம்
பிற அரசியல்
தொடர்புகள்
நீதிக்கட்சி, திராவிடர் கழகம் (1949க்கு முன்னர்) போன்றவற்றில் முக்கிய அங்கம் வகித்த முத்தமிழறிஞர்.
அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.,

முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார்.
சற்றொப்ப இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953-இல் சென்னையில் மாத இதழாகத் தொடங்கினார். 1960-ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார்.
தமிழக அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகு ஆகும்.இந்த பகுதியின் உண்மையான பெயர் கல்லக்குடி.வட இந்தியாவில் இருந்து ஒரு சிமெண்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரம் என பெயர் மாற்றப்பட்டது. தி.மு.க. அந்தப் பெயரைக் கல்லக்குடி என மீண்டும் மாற்ற வேண்டுமென வலியுறுத்தி கலைஞரும் மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர். மேலும் இரயில் மறியலிலும் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கலைஞரும் கைது செய்யப்பட்டார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
முதன்மைக் கட்டுரை: இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
1957-இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி, திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய கருணாநிதி ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டைப் பாதுகாக்க, இஃது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று முழக்கமிட்டார்.

அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்து கொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று பேரறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் நவம்பர் 19 அன்று கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.

தி.மு.க.வில் வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினர்
போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957-ஆம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தி.மு.க. வேட்பாளராகவும் போட்டியிட்டார். மேலவை உறுப்பினரானார்
1957 .ம் .ஆண்டு
1957 குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். இதனை தொடர்ந்து தி.மு.கழகம் பல்வேறு தேர்தல்களில் மிகுந்த சோதனை சந்தித்தபோதும், முத்தமிழறிஞர் தொடர்ந்து போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றியே பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

கலைஞர்
இந்திய அரசியல்வரலாற்றில் தனிப்பெரும் முத்திரை பதித்த மிக முக்கிய ஒரு சில தலைவர்களுல் இவரும்ஒருவர் என்றால் மிகையாகது. தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார்.
1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். முத்தமிழறிஞர் கலைஞர்.தமிழ்த் திரையுலகில் கதை, பாடல், உரையாடல் போன்ற பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பணியாற்றியவர்.'தூக்குமேடை' என்கிற நாடகத்தின் போது பட்டுக்கோட்டை அழகிரி, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்து மகிழ்ந்தார்.
இதனை தொடர்ந்து தமிழ் மொழி, இலக்கியம், உள்ளிட்டவற்றில் இவரின் பணி எவராலும் தாண்ட முடியாத மைல்கல்லாகவே தொடர்கிறது. இதனை தொடர்ந்து தான் முத்தமிழறிஞர் கலைஞர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து ஆளுமை திறனுடன் பங்குவகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவராக இவரது பணி இன்றும், இனி என்றும் போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.! கலைஞரின் கழகப் பணிகள் குறித்த சிந்தனை நன்கு உள்வாங்கி கொண்டவர்கள், இவரால் தி.மு.கழகப் பணிகளில் அடையாளபடுத்தபட்டு ஈடுப்பட்ட இன்றைய ஆளுமை மிக்கவர்கள் பலருண்டு .....
. இவர் 2018 ஆக. 7-ஆம் நாள் தன்னுடைய 94-ஆம் வயதில் சென்னையில் காலமானார்.



முத்தமிழறிஞர் கலைஞரின் 102 வது பிறந்த நாளில், தி.மு.கழக முதன்மை செயலாளர். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சமூக வலைதளத்தில் .....
கழகப் பணியிலும், மக்கள் பணியிலும் நம்மையெல்லாம் வளர்த்தெடுத்து - என்றென்றும் நம்மை வழி நடத்தும் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்தநாளை
யொட்டி சென்னையில் உள்ள எனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞரின் திரு உருவப்படத்திற்கு கனத்த இதயத்தோடு இன்று அதிகாலையில் மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
காலம் உள்ளவரை நம் கலைஞரின் புகழ் நிலைத்திருக்கும்..!
இவ்வாறாக தி.மு.கழக முதன்மை செயலாளர். அமைச்சர் கே.என்.நேரு தமது சமூக வலைதள பக்கத்தில் வெளிபடுத்தி பகிர்ந்துள்ளார்.




Comments