16. குற்றசாட்டுக்கள்! 31-ந் தேதிக்குள் அன்புமணி பதிலளிக்க அருள் எம்.எல்.ஏ. கெடு!
- உறியடி செய்திகள்

- Aug 19
- 1 min read

பா.ம.க.வில் பொதுக்குழு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து, அக்கட்சியின் எம்.எல்.ஏ. அருள், வழக்கறிஞர் பாலுவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து உள்ளார். ராமதாஸ் குறித்து பேச பாலுவுக்கு அருகதை இல்ல என்றும் ஆவேசமாக பேசினார்.
'ராமதாஸ் பற்றி பேச பாலுவுக்கு அருகதை இல்ல'... பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் ஆவேசம்
பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) பொதுக்குழு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து, அக்கட்சியின் எம்.எல்.ஏ. அருள், வழக்கறிஞர் பாலுவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ளார். தியாகி கோ. மா. ஜா. சங்கர் மற்றும் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் கூட்டிய பொதுக்குழு செல்லாது என்றும், நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் உண்டு என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி மீது குற்றஞ்சாட்டப்பட்ட 16 குற்றசாட்டுகளுக்கு அன்புமணி ராமதாஸ் 31-ம் தேதிகளுக்குள் பதிலளிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டன.
தொடர்ந்து, பா.ம.க எம்.எல்.ஏ அருள், தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, வழக்கறிஞர் பாலுவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். கட்சி விதிகள் குறித்துப் பேச வழக்கறிஞர் பாலுவுக்கு அருகதை இல்ல. அவர் ம.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர், அவருக்குப் பதவி வழங்கியவர் ராமதாஸ் மட்டுமே. கட்சியின் விதிகளின்படி, நிறுவனருக்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் உள்ளன. 3 ஆண்டுகளுக்கு பிறகு கட்சிப் பதவிகள் காலாவதியாகிவிடும். அதன் பிறகு ராமதாஸ் அங்கீகரித்தால் மட்டுமே ஒருவர் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும்.
ஆகஸ்ட் 17 அன்று ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டம் மட்டுமே அதிகாரப்பூர்வ பொதுக்குழு. பதவியில் இல்லாதவர்கள் கூட்டிய கூட்டம் செல்லாது. கட்சி விதிகள்படி, ராமதாஸ் தலைமையில் நடக்கும் கூட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும். கட்சியின் பதிவு அலுவலகம் தைலாபுரம் தோட்டம் மட்டுமே. பா.ம.க.வின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணிக்கு 31-ம் தேதிக்குள் விளக்கமளிக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உரிய விளக்கம் அளிக்காதபட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி அவர் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸிடம் வலியுறுத்தும். நிறுவனருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று சொல்லும் அதிகாரம் பாலுவுக்கு எப்படி வந்தது? என்று அருள் கேள்வி எழுப்பினார். பாலு தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.




Comments