2024. தேர்தல்! எம்.எல்.ஏ. தொகுதி நிலவரம் - தி.மு.க.வினர் கருத்தறிந்து வியூகம்! ஒருங்கிணைப்புக்குழு முடிவு!
- உறியடி செய்திகள்

- Jul 22, 2024
- 1 min read

தி.மு.கழக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம், எம்.எல்.ஏ. தொகுதி வாரியான நிலவரம் - கட்சியினர் கருத்துக்களுக்கு ஏற்ப அடுத்த நகர்வு!
தி.மு.கழக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நேற்று ஜூலை 21. ஞாயிற்றுக்கிழமை மாலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.!
இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்று, மாவட்டங்கள் பிரிப்பு, புதியவர்கள் நியமனம் ஆகியவற்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.!

மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.கழக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் சட்டப்பேரவை தொகுதிகளில் 221-ல் திமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளது.!
எனவே, வரும் 2026 தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் மேலும் கூடுதலான இடங்களை கைபற்றி, வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற உறுதியுடன் திமுக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.!
மக்களவை தேர்தல் முடிந்ததுமே, தற்போது 2024, சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.!
இக்குழுவில், தி.மு.கழக முதன்மை செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.!

தற்போது அடுத்த சட்டப்பேரவை தேர்தலை ஒருங்கிணைக்கும் பணியும் தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், மு.க.ஸ்டாலினால்முடுக்கி விடப்பட்டுள்ளது.!
இந்நிலையில், இக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை அன்று கழகத்தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!
இதையடுத்து, ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குழுவின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.!

தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி நிலவரம், எம்.எல்.ஏக்களின் பணிகள், கட்சியினர் மற்றும் பொது மக்களின் மனநிலைகளுக்கு ஏற்ப தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட செயல்பாடுகள் - புதிய மாவட்டங்கள் பிரிப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் முன்னெடுக்கப்பட வுள்ள ஆக்கபூர்வப் பணிகளை திட்டமிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.!
என்று தி.மு.கழக வட்டாரத்தில் மிகவும் பரப்பாக
கூறப்படுகின்றது.!




Comments