2024 - மக்களவை தேர்தல் உணர்த்தியுள்ள பாடம் தான் என்ன?
- உறியடி செய்திகள்

- Jun 6, 2024
- 1 min read

2024 பாராளுமன்றத் தேர்தல் பல செய்திகளை சொல்லி இருக்கிறது. அதனால் தானோ என்னவோ கருத்து கணிப்பு போலகோடி மீடியாக்களையும் மறந்து விட்டோமோ?
பணம் இருந்தால் போதும் வென்று விடலாம் என்ற கூற்று.!
செய்தி - இரண்டு கல்வி வள்ளல்கள் வேந்தர்கள் 100 கோடிக்கு மேல் செலவு செய்தும் மண்ணை கவ்வியுள்ளனர்
(ACS ம், பாரிவேந்தரும்)
இந்துக்கள் அனைவரும் மோடியை ஏற்றுக்கொள்வார்கள்.!
செய்தி - இந்துக்களின் புனித இடமாக கருதப் படுகிற வாரணாசி தொகுதியில் போன முறை ஐந்தரை லட்சம் வாக்குகள் பெற்ற மோடி ஆரம்பத்தில் தண்ணி குடித்து, திரும்ப தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெற்றி பெற்றுள்ளார்.!
மோடியால் கட்டப்பட்ட ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத்திலும் மக்கள் பாஜகவை தோற்கடித்துள்ளனர்.!
ஒரே நாடு ஒரே தேசம் ஒரே மொழி என்று சொன்ன பாஜக ?
இன்று தென்னிந்தியாவில் இருக்கின்ற சந்திரபாபு நாயுடு தயவுடனும்,
சோசியலிசவாதியான நிதீஷ் குமாருடைய தயவுடனும் தான் அடுத்த ஐந்தாண்டுகளை மோடியால் கடக்க முடியும். என்பது தான்
எவ்வளவு பெரிய கால கொடுமை ...
ஊடகங்களை வசப்படுத்தியும் -மிரட்டியும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று ஒரு வருடமாக சொல்ல வைத்தது.!
உத்திரபிரதேசத்தில் மாயாவதியின் துணையோடு காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதிகளும் ஓட்டை பிரிக்கும் விதமாக ஆட்களை போட்டது!
ஓ வை சி என்ற இஸ்லாமிய கட்சித் தலைவரை கையில் வைத்துக்கொண்டு அனைத்து சிறுபான்மையினர் ஓட்டுக்களையும் பிரித்தாளும் சூழ்ச்சிகளை கட்டவிழ்த்து விட்டது!.
ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வரவில்லை. அவர்கள் இந்துக்களின் விரோதிகள் என்றும் மதரீதியான பிரச்சாரம் செய்தது.!
ஒரு தேசத்தின் பிரதமர், ஒரிசாவை ஒரு தமிழன் ஆளலாமா? ஒரிசாவின் கஜானா சாவியை ஒரு தமிழனிடம் கொடுக்கலாமா? என்றும் பிரித்துப் பேசியது.!
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வந்தேறி சாதிகள் நம் சொத்தை எல்லாம் கொள்ளையடித்து சென்று விடும் என்று சிறுபான்மையினரை கேவலப் படுத்தியது .!
இவ்வளவையும் மீறி ஆளும் வாய்ப்பு தற்காலிகமாக கிட்டினாலும், கண், காது மூக்கு ,நரம்பு, நாடி அனைத்தையும் ஒடுக்கப்பட்ட நிலையில் ஒரு ஜடத்தைப் போல பாஜகவை அரசியலிலும் - ஆட்சி அதிகாரத்திற்கும் கொண்டு வந்துள்ள இந்த நாட்டின் குடிமக்களே கதாநாயகர்கள்.!
இது அரசியல் கட்சிகளுக்கு பாடமாகவும் - படிப்பினையாாகவும் பயனளிக்கட்டும்.!
இனியாவது வாழ தொடங்கட்டும் ஜனநாயகம்.!




Comments