2024 - மக்களவை தேர்தல்! சு.திருநாவுக்கரசர் போட்டியிட வேண்டும்! திருச்சி எல். ரெக்ஸ் தலைமையில் விருப்ப மனு வழங்கபட்டது!
- உறியடி செய்திகள்

- Mar 20, 2024
- 1 min read

மக்களவை தேர்தலில், சு.திருநாவுக்கரசர் போட்டியிட விருப்ப மனு, திருச்சி எல். ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் வழங்கினார்கள்.!
முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர், .சு.திருநாவுக்கரசர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும்.!


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனே, உள்ளிட்ட தலைவர்கள் இடத்திலும், தமிழ்நாட்டில் தி.மு.கழகம், உள்ளிட்ட அனைத்து கூட்டணி தலைவர்களிடமும் இணக்கமான நட்பை கொண்டவர் என்கின்றார்கள். கட்சியினர்!
ஒன்றுபட்ட திருச்சி மண்டல காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் கட்சியினரின் நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்றார்.
கட்சியினரிடையே, மட்டுமின்றி தொகுதி மக்களிடமும் நேரடி தொடர்பும் கொண்டவராக, கட்சியின் வளர்ச்சிக்கு, அனைவரையும் அரவணைத்து ஈடுபட செய்து, கட்சியினரை மிகுந்த உற்சாக படுத்தியும் வந்தார். என்பது குறிப்பிடதக்கது.!

இந்நிலையில் தற்ப்போது திருச்சி தொகுதி இண்டியா கூட்டணி கட்சியான மதிமுக,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.!

இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ்தலைவர். மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், திருச்சி, தஞ்சை புதுக்கோட்டை, மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் - கட்சியினருடன், 2024 , மக்களவை தேர்தலில் சு.திருநாவுக்கரசர்
போட்டியிட விருப்ப மனுவை, காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வழங்கினார்.!

திருச்சி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் திரு.பெனட் அந்தோணிராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ பி சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் குழு.முத்துகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் திரு.முருகேசன், திருச்சி மாநகர மாவட்ட பொருளாளர் ஜி. முரளி ,ஸ்ரீரங்கம் கோட்டதலைவர் ஜெ. ஜெயம் கோபி, மாவட்ட பொதுச்செயலாளர் எழிலரசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.!




Comments