top of page
Search

21.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு!தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி, பெரம்பலூர் கே . என்.அருண் நேரு,

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 20, 2024
  • 2 min read

ree

தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி, பெரம்பலூர் அருண் நேரு, 21, தி.மு.க.வேட்பாளர்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

ree

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில்தி,மு.கழக வேட்பாளார்களாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலை, தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30. மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலத்தில் வெளியிட்டார்.!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து தி.மு.கழக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான தொகுதிகளையும் ஒதுக்கி கொடுக்கப்பட்டு தேர்தல் பணிகளும் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றும் வருகிறன்றது.!

ree

கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வந்த நிலையில், 21 தி.மு.கழகத்தின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை 10.30. மணிக்கு முதல் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.!

.

இதில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.!

ree

தி.மு.கழக வேட்பாளர்களாக வட சென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

காஞ்சிபுரம் – செல்வம்

ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு

ஈரோடு – பிரகாஷ்

நீலகிரி- ஆ.ராசா

திருவண்ணாமலை- அண்ணாதுரை

வேலூர்- கதிர்ஆனந்த்

தென்காசி – ராணி ஸ்ரீகுமார்

தர்மபுரி – ஆமணி

கள்ளக்குறிச்சி – மலையரசன்

பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி

தூத்துக்குடி- கனிமொழி கருணாநிதி

ree

கோவை – கணபதி ராஜ்குமார்

.அரக்கோணம் – ஜகத்ரட்சகன்

சேலம் – டிஎம். செல்வகணபதி

தஞ்சாவூர்- முரசொலி

ree

பெரம்பலூர்- அருண் நேரு

ree

ஆரணி – எம்.எஸ். தரணி வேந்தன்

தேனி – தங்கத் தமிழ்ச்செல்வன்.50 சதவீதத்துக்கு மேல் புதுமுகங்கள் போட்டிதருமபுரி – ஆ.மணி, ஆரணி தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி மலையரசன், சேலம் செல்வகணபதி, ஈரோடு – கே.ஏ.பிரகாஷ், கோவை கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி ஈஸ்வரசாமி, பெரம்பலூர் அருண் நேரு, தஞ்சாவூர் முரசொலி, தேனி – தங்க தமிழ்ச்செல்வன், தென்காசி ராணி ஸ்ரீகுமார், ஆகியோர் களம் காண்கின்றார்கள்.!


2024. நாடாளுமன்ற தேர்தல் தி.மு.கழக கூட்டணியின் சார்பில், தி.மு.கழகத்தால் வேட்பாளர்களாக அறிவிக்கபட்டவர்களில்,3 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.!

ree

தூத்துக்குடி – கனிமொழி கருணா நீதி, தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன், தென்காசி – ராணி ஸ்ரீகுமார், ஆகியோராவர்கள் .!


கூட்டணி கட்சிகளின் தொகுதிகளும் வேட்பாளர்கள்களும்கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – நாமக்கல் -சூரியமூர்த்திஇந்திய யூனியன் முஸ்லிம் கட்சி – ராமநாதபுரம் – நவாஸ் கனிமதிமுக – திருச்சி – துரை வைகோஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிதிருப்பூர் – கே.சுப்புராயன்

நாகப்பட்டினம் – வை.செல்வராஜ்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதிண்டுக்கல் – சச்சிதானந்தம்

மதுரை – சு. வெங்கடேசன்விடுதலை சிறுத்தைகள் கட்சிவிழுப்புரம் – ரவிக்குமார்

சிதம்பரம் – திருமாவளவன். ஆகியோரும், போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.!

ree

மேலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளாக. திருவள்ளூர் (தனி)

கடலூர்,மயிலாடுதுறை

சிவகங்கை

திருநெல்வேலி, கிருஷ்ணகிரி

கரூர்

விருதுநகர்

கன்னியாகுமரி

புதுச்சேரி, ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, விரைவில் கட்சியின் தலைமை வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரத்தில் கூறப்படுகிறது.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page