3-0 பதவியேற்பு விழா! 5 ஆண்டுகள் சமாளிப்பாரா? சறுக்கி விடுவார? பிரதமர் மோடி!
- உறியடி செய்திகள்

- Jun 9, 2024
- 2 min read

நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி இன்றிரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்றார்கிறார்.!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3வது முறையாக தக்கவைத்துக் கொண்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.!

இதை ஏற்றுக் கொண்ட திரவுபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி பதவியேற்று கொண்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பிரதமராக பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.!
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில்
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், 30 கேபினட் அமைச்சர்கள் உட்பட 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
இதில் ஏற்கெனவே பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மீண்டும் மத்திய அமைச்சர்களாக பங்கேற்றுள்ளனர்.!

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2019-ல் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பணியாற்றினார். கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர். செப்டம்பர் 2017 முதல் மே 2019 வரையில் மோடியின் முதல் ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக பணியாற்றினார்.
கடந்த 2014-ல் பிரதமர் மோடி ஆட்சி அமைத்த போது பல்வேறு துறைகளின் இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 2014, 2016 மற்றும் 2022-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.!

மோடியின் பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுகனாத், பூடான் பிரதமர் ஷெரிங் டாக்பே, வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா, செஷல்ஸ் துணை அதிபர் அகமது ஆஃபீஃப் ஆகியோரும்,
எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். நேற்றே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் கார்கே இன்று பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.!
பொருப்பேற்றவர்களுக்கான துறை விவரங்கள் ஏதும் விழாவில் குறிப்பிடப்படவில்லை, நாளை இதன் விபரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சர்கள் பெரும்பான்மையானவர்கள் பாஜக, வை சேர்ந்தவர்களாகவே பார்க்கபடுகின்றது.!
குஜராத் முதல்வராகவும் - கடந்த 10. ஆண்டுகள் இந்திய பிரதமராகவும் ஆர்.ஆர்.எஸ்.பின்புலத்துடன் செயல்பட்டு வந்துள்ள மோடி, தற்போதைய அரசியல் சூழலை எவ்வாறு எதிர்கொள்வார், அவருக்கு ஆர்.ஆர்.எஸ். தரப்பில் எத்தகைய பின்புல ஆதரவுயிருக்கும் என்பது இன்றைய அரசியல் கள நிலவரத்தில் யோசிக்க வேண்டிய ஒன்றாகவே உள்ளது.!

கடந்த கால அரசியல் நகர்வுகளில், ஒரு கட்டத்தில் சொல்ல முடியாத அளவுக்கு பல்வேறு வகையிலும் அழுத்ததிற்கு உள்ளான நாயுடு, நிதிஸ் உள்ளிட்ட ஆதரவு கூட்டணி கட்சிகளின் எதிர்கால அரசியல் சதுரங்க உள்குத்துக்கள் உருவாகும் காலங்களில் மோடி 5 ஆண்டு கால ஆட்சியைசமாளிப்பாரா? அல்லதுசறுக்கி விடுவாரா? என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
ஏன்னா அரசியல்ல எதுவும் சகஜம்னு ஆகிப் போச்சே!




Comments