top of page
Search

75 வது குடியரசு தின விழா! திருச்சியில் மேயர் மு. அன்பழகன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jan 26, 2024
  • 2 min read
ree



திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்

மாநகர தி.மு.கழகச்செயலாளர்,

மேயர் மு. அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.!

திருச்சி மாநகராட்சி அலுவலகவளாகத்தில், இன்று 75. வது குடியரசு யெட்டி. மாநகரத்தின் மேயர், மாநகர தி.மு. கழகச் செயலாளர் மு. அன்பழகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.!


பின்னர் நடைபெற்ற விழாவில்.ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் தமிழகத்தின் தூய்மையான நகரமாக திருச்சிராப்பள்ளி மாநகரம் முதல் இடம் பெற்றதற்கு உறுதுணையாக சிறப்பான முறையில் சிறப்பான முறையில் பொது சுகாதார பணிகளை மேற்கொண்ட அலுவலர்களை பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களையும் பணியாளர்கள் உள்ளிட்ட 25 நபர்களை கௌவுரவித்து பாராட்டி வழங்கினார்.!

ree

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகர தி.மு.கழகச்செயலாளர் மேயர் மு. அன்பழகன் மாநகராட்சி ஆணையர் மரு. இரா.வைத்திநாதன்,, துணைமேயர் .ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று (26.01.2024) தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.!

மாநகராட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த 19 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்.!

திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் தூய்மை சேவைகளை மேம்படுத்த இம்மாநகராட்சியில் நடைபெற்ற பொதுசுகாதார பணியின் அர்பணிப்பு முயற்சியால் தேசிய அளவிலான கணக்கெடுப்பு ஸ்வச் சர்வேக்ஷன் 2023 ன்படி தமிழகத்தின் தூய்மையான நகரமாக திருச்சிராப்பள்ளி மாநகரம் முதல் இடம் பெற்றதற்கு உறுதுணையாக இம்மாநகராட்சியில் சிறப்பான முறையில் பொது சுகாதார பணிகளை மேற்கொண்ட அலுவலர்களை பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ் பணியாளர்கள் உள்ளிட்ட 25 நபர்களை கௌவுரவித்து பாராட்டி மாநகர மேயர் மு. அன்பழகன் வழங்கினார்,!

எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற மாணவ, மாணவிகளின¦ கலை நிகழ்ச்சி மற்றும் நண்பர்கள் சிலம்பாட்டம் . கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுமாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் வழங்கி மேயர் மு. அன்பழகன் பாராட்டினார்.

ree

தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மேயர் மு. அன்பழகன் , காந்திமார்கெட் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியும் காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும். தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.!

மாநகராட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சிகளில் நகரப்பொறியாளர் .ப.சிவபாதம், நகர் நல அலுவலர் .த.மணிவண்ணன், மண்டலத்தலைவர்கள் . ஆண்டாள்ராம்குமார், .மு.மதிவாணன், .துர்காதேவி, .விஜயலட்சுமி கண்ணன், . பு.ஜெயநிர்மலா, துணை ஆணையர் . நாராயணன், செயற் பொறியாளர்கள் , உதவிஆணையர்கள், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள் ,மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page