
திருச்சியில் ரூ.349 கோடியில் பிரமாண்ட பேருந்து நிலையம்! அமைச்சர் கே.என்.நேரு அதிரடி ஆய்வு!
- உறியடி செய்திகள்

- Aug 22, 2024
- 1 min read
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ரூ.349 கோடியில்
பேருந்து முனையம் கட்டும் பணிகள் அமைச்சர் கே.என். நேரு அதிரடி ஆய்வு! ஆலோசனைகளும் வழங்கி பணிகளை துரிதபடுத்தி முடித்திடவும் வலியுறுத்தல்!

பஞ்சப்பூர் பேருந்து முனையம்
பஞ்சப்பூர் பேருந்து முனையம்
மத்திய பேருந்து நிலையத்துக்கு மாற்றாக இந்த பேருந்து முனையமானது பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான மக்கள் கூட்டம் மற்றும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அதிக அளவில் வந்து சென்ற காரணத்தினால் அதிகளவில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலை தீர்ப்பதற்காக பஞ்சப்பூரில் மிகப்பெரிய பேருந்து முனையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.!

இந்த பணிகள் ஆனது சுமார் 349 கோடி செலவில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ! மாநகராட்சி சார்பில் 50 கோடியும் தமிழக அரசு சார்பில் 140 கோடியும் தமிழக நிதி மற்றும் உள்கட்டமைப்பு துறை சார்பில் 159 கோடி கடனாகவும் பெற்று பணிகள் அனைத்தும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.!

மேலும் இந்த பேருந்து நிலையத்தில் ஏசி அறை போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பேருந்து முனையத்தில் சிறிய சிறிய கடைகள், உணவகங்கள், அலுவலகங்கள் மற்றும் மினி ஹால் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.!

இந்நிலையில் இன்று (22.08.2024) பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை தி.மு.கழக முதன்மைச்செயலாளர். சேலம் மாவட்ட பொருப்பு - தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்!


அப்போது அதிகாரிகளிடம் கட்டுமான பணிகளை உரிய தரத்துடன் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி, மேலும் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கினார்.!

மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் மேயர் .மு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையாளர் வே.சரவணன் , தி.மு.கழக மாவட்டச் செயலாளர் .
வைரமணி மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தார்கள்.




Comments