2.600 பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை ! பருவமழையை எதிர்கொள்ளவும் தயார் ! அமைச்சர் கே.என்.நேரு தகவல் !
- உறியடி செய்திகள்

- Oct 9, 2024
- 1 min read

தோகமலை.
ச.ராஜா மரியதிரவியம் .......
நகராட்சி நிர்வாாகத்துறையில் விரைவில் 2.600, பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை. அமைச்சர் கே.என்.நேரு புதுக்கோட்டையில் தகவல்.!
மேலும் தமிழகத்தில்வடகிழக்குப் பருவமழையின்போது எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயார்,” என தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
புதுக்கோட்டை நகராட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தப்படி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, அதன் முதல் மாமன்றக் கூட்டத்தின் தொடக்க விழா, மாநகராட்சி அலுவலகத்தில் (அக்.9) நடைபெற்றது.!

மாவட்ட ஆட்சியர் எம்.அருணா தலைமை வகித்தார், விழாவில் தி.மு.கழக முதன்மை செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் மாநகராட்சி நடவடிக்கைகளை தொடங்கி வைத்தனர்.!
விழாவில், மேயர் திலகவதிக்கு செங்கோல் வழங்கியும், பேருந்து நிலையக் கட்டுமானப் பணி, 7 வார்டுகளில் புதைசாக்கடைத் திட்டம், 5 வார்டுகளில் குடிநீர் விநியோகத்துக்கான பணி உள்ளிட்ட ரூ.145.55 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் அமைச்சர் கே.என்.நேரு அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கழகத் தலைவர் முதல்வர் தளபதியார், துணை முதல்வர் ஆகியோர் பல்வேறு கட்டங்களில் ஆய்வு கூட்டங்களை நடத்தி பல்வேறு வழிகாட்டு தல்களோடு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து நகர் பகுதிகளிலும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. எத்தகைய பாதிப்புகளையும் எதிர்கொள்ள நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.!

அதேபோல, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் மக்களை பாதுகாப்புடன் தங்கவைப்பதற் கான இடங்கள், மரங்களை அப்புறப்படுத்துதல், நீர்நிலைகளின் உடைப்புகளை சரி செய்தல் உள்ளிட்டவைக்குத் தேவையான கருவிகள், இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.!
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார். ஒரே நேரத்தில் வரியை உயர்த்தி சுமையை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே ஆண்டுதோறும் வரி உயர்த்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களை வரி உயர்வு பாதிக்காது. தேர்தல் வரவுள்ளதால் அதிமுகவினர் அரசியலுக்காகபோராட்டம் நடத்தி வருகிறார்கள்.!
நகராட்சி நிர்வாகத் துறையில் 2,600 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன,
இவ்வாறு அவர் கூறினார்.
.




Comments