காங்கிரஸ் கட்சி சொத்துக்கள் மீட்க அதிரடி நடவடிக்கை! திருச்சியில் எல். ரெக்ஸ் தலைமையில் முடிவு!
- உறியடி செய்திகள்

- May 30, 2024
- 1 min read

திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், கட்சி சொத்துக்களை மீட்க அதிரடி நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு முக்கிய முடிவுகள் மாவட்டத் தலைவர் எல். ரெக்ஸ் தலைமையில் முடிவு செய்யப்பட்டது.!
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கோட்ட தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் நடைப்பெற்றது.!
சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் .கிறிஸ்டோபர் திலக் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர்
.வேலுசாமி கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள்.!

மற்றும் மாவட்ட பொருளாளர் .முரளி, மாவட்ட துணை தலைவர்கள், பொதுச்செயலாளர், செயலாளர்கள், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, வரகனேரி இஸ்மாயில், அரியமங்கலம் அழகர், காட்டூர் ராஜா டேனியல், பஞ்சப்பூர் மணிவேல், பொன்மலை பாலு, சுப்ரமணியபுரம் எட்வின், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், ஏர்போர்ட் கனகராஜ், உறையூர் பாக்யராஜ், தில்லைநகர் கிருஷ்ணா, புத்தூர் மலர் வெங்கடேஷ், பாலக்கரை வின்சென்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து பலதரப்பட்ட கருத்துக்களும் ஆலோசனைகளும் வழங்கினார்கள்.!
தொடர்ந்துகூட்டத்தில்:
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சொத்துக்களை மீட்டெடுக்க, மீட்புக்குழு அமைப்பது.!
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கைக்குழு அமைப்பது.!
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அணி மற்றும் பிரிவு அமைப்புகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிப்பது.!
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் ஊடகப்பிரிவு இணைந்து காணொளி கூட்டத்திற்க்கான புதிய இணைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.!

மேலும்கூட்டத்தில் மார்க்கெட் கோட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் . ராஜா பொறுப்பாளராகவும், மாவட்ட துணை தலைவர் சத்தியநாதன் ஜங்ஷன் கோட்டத்திற்கு கௌரவ ஆலோசகராகவும், மாவட்ட பொதுச்செயலாளர் விமல் மலைக்கோட்டை கோட்டத்திற்கு கௌரவ ஆலோசகராகவும், மாவட்ட துணை தலைவர் . அபுதாஹிர் சுப்ரமணியபுரம் கோட்டத்திற்கு கௌரவ ஆலோசகராகவும், மாவட்ட செயலாளர்கள் . பாலசுப்ரமணியன் மற்றும் . அன்பு ஆறுமுகம் ஆகியோர் காட்டூர் கோட்டத்திற்கு கௌரவ ஆலோசகர்களாவும் மாவட்ட செயலாளர் உறந்தை செல்வம் மற்றும் மாவட்ட துணை தலைவர் அபுதாஹிர் ஆகியோர் ஊடகபிரிவு ஆலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டாகள்.!




Comments