நடிகர் சூர்யா வேதனை!வயநாடு நிலச்சரிவு! வெள்ளம்! பாதிக்கப் பட்டவர்களுக்காக பிராத்தனை! களப்பணியினருக்கு வணக்கம்!
- உறியடி செய்திகள்

- Jul 31, 2024
- 2 min read

தோகமலை
ச.ராஜா மரியதிரவியம்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, மழை வெள்ள பாதிப்பு குறித்து நடிகர் சூர்யா கவலை தெரிவித்துள்ளார்.!
மீட்பு நடவடிக்கைகளில் குடும்பங்களுக்கு உதவி செய்யும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் - களத்தில் உள்ள மக்களுக்கும் என்னுடைய வணக்கங்கள் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்!

பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் பாய்ந்ததால் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த வீடுகளை மூடியது. டன் கணக்கிலான மண் சேறும் சகதியுமாக மூடியதில், அந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன!
நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்த இயற்கை பேரிடர் பாதிப்பை அடுத்து, 2வது நாளாக இன்றும் (புதன்கிழமை) மீட்புப் பணிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளில் ஈடுபட கேரளாவில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் வந்தாலும் கூட நிபுணத்துவம், அனுபவம் நிறைந்தவர்கள் மட்டுமே மீட்புப் பணியில் அனுமதிக்கப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. ராணுவம் சார்பில் வயநாட்டை எளிதில் அடைய தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.!

வயநாடு நிலச்சரிவு பேரிடரில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது. சாலியார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டோரின் சடலங்கள், நிலச்சரிவு நடந்த மேப்பாடி பகுதிக்கு அடையாளம் காண ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. 2-வது நாளாக மீட்புப்பணி தொடருகிறது.குழந்தைகள், பெண்கள் உள்பட 238 பேர் உயிரிழந்துள்ளதாகக் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.!

நிலச்சரிவுகளில் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்பதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது. இதுவரை 160 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், 191 பேரைக் காணவில்லை என்றும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. மேப்பாடி பகுதியில், 8 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 421 குடும்பங்களைச் சேர்ந்த 1,486 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.!

முண்டக்கை பகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அங்கும், அட்டமலா, சூரல்மலா பகுதிகளிலும் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்று கூடுதலாக 132 ராணுவத்தினர் மீட்புப் பணிகளுக்காக வந்தடைந்துள்ளனர். 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.!
மீட்கப்பட்டுள்ள உடல்களுக்கு நேற்றிரவிலும் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கோழிக்கோட்டிலும் தலசேரியிலும் இருந்து மருத்துவர்கள் குழு ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு குறித்து நடிகர் சூர்யா கவலை தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் குடும்பங்களுக்கு உதவி செய்யும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் களத்தில் உள்ள மக்களுக்கும் என்னுடைய வணக்கங்கள் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.!

இது குறித்து சூர்யா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இதயம் நொறுங்குகிறது. மீட்பு நடவடிக்கைகளில் குடும்பங்களுக்கு உதவி செய்யும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் களத்தில் உள்ள மக்களுக்கும் என்னுடைய வணக்கங்கள்” என்று தெரிவித்துள்ளார்.




Comments