கள்ளச்சாரயம் காய்ச்சிய அதிமுக நிர்வாகி - மிரட்டி சொத்தை அபகரித்த அதிமுக மாஜி! திசை திருப்பும் எப்பாடி!
- உறியடி செய்திகள்

- Jun 26, 2024
- 2 min read

லெமூரியன் பார்வை...
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடிய போது, கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்பி பேச அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் விதிகளை சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சஸ்பென்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தவு .!

இன்று வழக்கம்போல் காலை சட்டமன்ற கூட்ட தொடர் வழக்கம் போல துவங்கியது, அப்போது அதிமுக, வினர் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பேச
வே ண்டும் என்று அமளியில் ஈடி பட்டதை தொடர்ந்து
அப்போது பேசிய சபாநாயகர், “8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்தார்.!
சபாநாயகர் விடுத்த வேண்டுகோளை புறக்கணித்து, அதனை ஏற்க மறுத்த அதிமுவினர் அமளி செய்ததை தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதனையடுத்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் அவை வாயிலில் இருந்து முழக்கமிட்டனர்.!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்; கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன்.!

பேரவைத்தலைவரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.ஆனாலும், மக்கள் பிரச்சினையைப் பற்றி இப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அ.தி.மு.க. மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்று முதல்வர் கூறியுள்ளார்.!


இதைத் தொடர்ந்து பேசிய அவை முனைவர் அமைச்சர் துரைமுருகன், “பிரச்சினையை சபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி இருக்கிறோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர். கருப்பு சட்டை அணிவதற்கான காரணத்தை அதிமுகவினர் அவையில் பேசுவதில்லை.!

முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று அதிமுக உறுப்பினர்கள் அவைக்குள் வந்திருக்க வேண்டும். அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று கூற வேண்டியதை கூறியிருந்தால் அவர்களை கிழி கிழி என்று முதல்வர் கிழித்திருப்பார்.நடக்கக்கூடாதது நடந்துவிட்டது அதற்கான பரிகாரங்களை முதல்வர் செய்துள்ளார். முதலமைச்சர் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது என்பதாலேயே அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர்,!
இவ்வாறு தெரிவித்தார். இதையடுத்து, அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்தார். அவை முன்னவரின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.!
அவைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததால் பேரவை விதிகளின்படி அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அவைக்கு வந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.!

நேற்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற விதிகள், மரபுகளை தெரிந்தும், வேண்டுமென்றே அவைக்கு குந்தகம் ஏற்படுத்தி மக்களுக்கான திட்டங்களை, ஆலோசிகனை பேசவிடாமல், அவர்களும் இப்படி ஆக்கப்பூர்வமானப் பணிகளை செய்யாமல், திட்டமிட்டே கலவரத்தை ஏற்படுத்த வே இத்தகைய வகையில் நடந்து வருகின்றார்கள்.!
நீங்கள் மரபு, விதிகளை பின்பற்றி, சபையில் எதிர்கட்சி, ஆளும்கட்சி என்று பாராமல் எல்லோருக்கும் சமவாய்ப்பளித்து, இதுவும் அவர்களுக்கு நன்கு தெரியும்.!
அவர்கள் ஆட்சி காலத்தில் சபாநாயகராகயிருந்தா வர், பேச எழுந்தாலே முகத்தைக்கூட பார்க்க மாட்டார்.
அனுமதிக்கவும் மாட்டார். இது அப்போது சட்டமன்ற உறுப்பினர்களாகயிருந்தவர்களுக்கும் தெரியும்.!
எனவே திட்டமிட்டோ, உள்நோக்கத்தோடு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் உள்நோக்கத்தோடு நாடகமாடும், அவர்களை, சட்டமன்ற அவை மரபு விதியை சுட்டிகாட்டி, இந்த கூட்ட தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.!
இதனை தொடர்ந்து உடனே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சஸ்பென்ட் செய்வதை ஏற்க விரும்பாத நிலையில், சபாநாயகர் அப்பாவு கேட்டு கொண்டதற்கு இணங்க அமைச்சர் கே.என்.நேரு, தனது தீர்மானத்தை மாற்றி பேசி ஏற்றுக் கொண்டது குறிப்பிடதக்கது.!






Comments