அமெரிக்கா: மு.க.ஸ்டாலின் ஆலோசனை ! கழக முப்பெரும் விழா ! தொழில் முதலீட்டு ஈர்ப்பு குறித்தும் பகிர்ந்து மகிழ்ந்தார் !
- உறியடி செய்திகள்

- Sep 9, 2024
- 1 min read

தோகமலை.
ச. ராஜா மரியதிரவியம் .....
அமெரிக்காவில் தொழில் ஈர்ப்பு முறை அரசு பயணமாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பயணத்திட்டப்பணிகளுடன், தமிழ்நாட்டு அரசுப்பணிகளையும் மேற்கொண்டவர், தி.மு.கழக முப்பெரும் விழா குறித்தும், ஒருங்கிணைப்புக்குழுவினருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். !
தி.மு.கழகத் தமிழ்நாட்டன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவிலிருந்து காணொலி வாயிலாக திமுகவின் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளை நேற்று (செப்.08.) ஞாயிற்றுக்கிழமைஇரவு ஆய்வு செய்தார்.!
அப்போது, முப்பெரும் விழா ஏற்பாடுகள், தி.மு.கழக பவளவிழா ஏற்பாடுகள், மாநிலம் முழுவதும் நடைபெறும் பொது உறுப்பினர் கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், கழக கொடியேற்றும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றின், ஏற்பாடு விவரங்களைக் கேட்டறிந்தார்.!

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா உள்ளிட்ட
முப்பெரும் விழா ஏற்பாடுகள்,
ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் "பவளவிழாவையொட்டி திமுகவினரின் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கழக இரு வண்ண கொடிகளைப் பறக்கவிட வேண்டும்" என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.!

அமெரிக்கத் தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றியும், கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்தும் ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் பகிர்ந்து கொண்டார்.!
மேலும், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அளித்த வரவேற்பு பற்றியும் உற்சாகமாகத் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், முதலீட்டாளர்களுக்குத் தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.!

சிகாகோவில் நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாகவும், உற்சாகமுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.!

அப்போது காணொலி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும், தி.மு.கழகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக் குழு வழங்கும்" என்றும் தெரிவித்தார்.!

தமிழ்நாடு அமைச்சர்கள், தி.மு.கழக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு, துணைப்பொதுச் செயலாளர் எ.வ.வேலு, விருதுநகர் மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு, தி.மு.க மு.கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.




Comments