top of page
Search

அமித்ஷா,வின் விமர்சனம்! தவெக , விஜய் கண்டனஅறிக்கை! யாருக்கோ அஞ்சி அரசியலா! மலுப்பலா?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Dec 18, 2024
  • 2 min read
ree

ச. ராஜா மரியதிரவியம்...

தோகமலை ....

அம்பேத்கார் பற்றிய அமித்ஷா விமர்சனத்திற்கு, ஒரு வழியாக பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்ததிற்கு பின்னர் பட்டும் படாமல் கண்டனம் விடுத்தார் த வெக தலைவர் நடிகர் விஜய். அரசியல் பார்வையாளர்கள் கருத்து.!


அம்பேத்கர் பற்றி அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்பேத்கர் பற்றிய நூலை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அமித்ஷாவை கண்டிக்க வேண்டும் என்று விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.


டிச.17. நேற்று மாநிலங்களவையில் பேசியமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசினார்.


அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவதையும், அரசியல் சாசனம் குறித்தும் தொடர்ச்சியாக பேசி வருவதையும் கடுமையாக விமர்சித்தார்.

ree

அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது, அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இப்படி பல முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று அமித் ஷா கடுமையாக விமரித்தாக தகவல்கள் பரவியது.



‘ இதற்கு எதிர்வினையாற்றிஉங்க அமைச்சர் பதவிக்கு காரணமே அம்பேத்கர் தான்’.. அமித்ஷாவுக்கு ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்


மேலும் அமித் ஷாவின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததற்காக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.


அம்பேத்கர் படத்துடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்ட மும் நடைபெற்றது!


தி.மு.கழக தலைவர் தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், அமித் ஷா பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தும் வருகின்றனர்.

ree

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் சார்பில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது.


இந்நிலையில் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு

இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்து வெளியிட்டு இணைய தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புரட்சியாளர்அம்பேத்கர் வகுத்து தந்த இந்திய அரசியலமைப்புச்சட்டம் தான் இன்றும் நாடாளுமன்றத்தை வழிநடத்துகிறது.



அந்த நாடாளுமன்றத்துக்குள்ளேயே புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்து பேசியுள்ளார் இந்திய ஒன்றிய அமைச்சர் சனாதனவாதி, அமித்ஷா. அரசியலமைப்பின் 75 ஆம் ஆண்டை பெருமையோடு கொண்டாடுவதாக சொல்லி பெருமைப்படும் பிரதமர் மோடியோ இது குறித்து இதுவரை கண்டிக்கவே இல்லை.


குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்கவாவது சொல்லியிருக்க வேண்டும். இதிலிருந்து பாஜக எப்படி அம்பேத்கரை மதிக்கிறது என்பதை நாடும், மக்களும் புரிந்து கொள்ளலாம்.! நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். அதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் அதிமுகவோ பாமக தலைவர் அன்புமணியோ பங்கேற்கவில்லை.


அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கண்டிக்கக் கூட இல்லை. அது கூட போகட்டும், கடந்த டிசம்பர் 6 அன்று அம்பேத்கர் நூலை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூட இதுவரை அமித்ஷாவை கண்டிக்கவில்லை.!


எல்லோரும் அமித்ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். அதுவே புரட்சியாளர் அம்பேத்கரை மதிப்பதாக பொருள். இல்லையேல், அடையாள அரசியலை செய்வதாகத்தான் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று வன்னி அரசு தெரிவித்திருந்தார்.

ree

இந்நிலையில் இன்று மாலை தவெக.தலைவர் நடிகர் விஜய் தனது சமூக வலைதளத்தில்


யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.


அம்பேத்கர்...

அம்பேத்கர்... அம்பேத்கர்...

அவர் பெயரை

உள்ளமும் உதடுகளும் மகிழ

உச்சரித்துக்கொண்டே இருப்போம்.


எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.! என்று பதிவிட்டாார்.


இதனை சமூகநீதி ஆர்வலர்கள், அரசியல் நோக்கர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் விஜய் வெளியிட்ட அறிக்கை என்பது யாருக்கோ, எதற்கோ அஞ்சி பட்டும் படாமல் கண்டனமாக சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ளதாக வே பார்க்க வேண்டியுள்ளது. அமித்ஷா நேரடியாகவே மாநிலங்களவையில் சட்ட மாமே தை அண்ணல் அம்பேத்கார் பெயரை குறிப்பிட்டுள்ளது. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பதை போலானது தெரிந்தும் விஜய் வெளியிட்டுள்ள சமூக வளைதள கண்டன பதிவு பார்க்கவே பார்க்கவேண்டியுள்ளது.என்று விமர்சனம் செய்து வருகின்றார்கள்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page