ஒரு ஆண்டு நிறைவு விழா!சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில்நடமாடும் நூலகம்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!
- உறியடி செய்திகள்

- Mar 12, 2024
- 2 min read

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் நடமாடும் நூலகத்தை தொடங்கி ஓராண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வாசகர்களு டனான கலந்துரையாடல் நிகழ்ச்சி லேடி வில்லிங்டன் பள்ளியில் நடைபெற்றது.!
இதில் கலந்து கொண்ட தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசகர்களுடன் கலந்துரை யாடினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது!

பேரறிஞர் அண்ணாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அனைவரும் படிக்க வேண்டும் என்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.!
கலைஞரின் நூற்றாண்டு விழாவில் மதுரையில் கலைஞர் நூலகத்தைத் திறந்து வைத்தார்.!
கழகத்தலைவர், திராவிட மாடல் ஆட்சியின் நம் முதலமைச்சர் . கோவையிலும் விரைவில் திறக்க உள்ளார்.!

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி தி.மு. கழகத்தலைவர், தமிழ்நாட்டின்,நம் முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த நூல கத்தை தொடங்கபட்டது. இந்த நடமாடும் கலைஞர் நூலகத்தைத் தொடங்கி, ஓராண்டு நிறை வடைந்ததை யொட்டி வாசகர்களாகிய உங்க ளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக வந்துள்ளேன்.!
இந்த ஒரு வருடத்தில் பல்லாயிரக்க ணக்காணோர் பேர் இந்நூலகத்தால் பயன்பெற்றி ருக்கிறீர்கள். இதை இன்னும் நிறைய பேர் பயன்படுத்த வேண்டுமென்ப தான் என்னுடைய ஆசை. உங்கள் சட்ட மன்ற அலுவலக பணியாளர்கள், மற்ற விஷ யங்களை யெல்லாம் பேசும் போது, நான் அவர்களிடம் கேட்கின்ற முதல் கேள்வி, நூலகம் எந்தெந்த பகுதிகளுக்குச் செல்கிறது?
எவ்வளவு பேர் அதன்மூலம் பயன் பெற்றிருக்கிறார்கள்? எத்தனைப்பேரை நீங்கள் உறுப்பி னர்களாகச் சேர்த்திருக்கிறார்கள். ?

அதுதான் நான் தொடர்ந்து அவர்களிடம் கேட்கின்ற கேள்வி.!
நீங்கள் நிறையப் பேர் இதனால் பயன டைந்திருக்கிறீர்கள். இன்னும் நிறைய பேர் பயன்பெற வேண்டும். அதற்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.!
இதைப் பற்றி நீங்கள் இன்னும் நிறைய பேர்களிடம், நூலகத்தின் பயன்கள் பற்றி சொல்ல வேண்டும்.!

இந்த நூலகத்தில், மாணவர்கள், இளைஞர், உள்ளிட்ட அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், இன்னும் வேறு என்னென்ன புத்தகங்கள் எல்லாம் வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்து கொள்வ தற்காகத்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறோம்.!
எனவே, நீங்கள் யாராவது பேச வேண்டும் என்று நினைத்தால், இந்த நூலகத்தைப்பற்றி உங்களுடைய, ஆலோசனைகள், கருத்துக்கள், எண்ணங்களை இங்கு பகிரலாம்.!

இதில் தேவைப்படும் வேறு புத்தகங்கள், நூலக கூடுதல் தேவைகள் போன்ற உங்களின் ஆலோசனைகளை, கருத்துகளை நீங்கள் இங்கு தெரிவிக்கலாம்.!
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நூலகத்தின் மேற்பார்வையாளர், ஓட்டுநர், மற்றும் அதிகமாக புத்தகங்களை எடுத்து பயன்படுத்திய 7 வாசகர்கள் உள்ளிட்டவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.! தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.!
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்டச் செயலாளர் சிற்றரசு, பகுதிச் செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கமலா செழியன், மங்கை ராஜ்குமார், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிர்வாகி பி.கே.பாபு, தொகுதி பார்வையாளர் சி.எச்.சேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ், வட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் !




Comments