கலைஞரின் கனவு இல்லம்! முறை கேட்டாளர்கள் மத்தியில் சாத்தியாகுமா? கவனம் கொள்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
- உறியடி செய்திகள்

- Jun 18, 2024
- 2 min read
Updated: Jun 19, 2024

தமிழ்நாட்டின் முதல்வர், தி.மு.கழகத்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினால்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை தமிழ்நாடு அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.!
இதில்பல்வேறு சர்ச்சைகளும் எழும்பி வருகிறது.!
பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு அளித்துள்ளது. இப்பட்டியலை வரும் 30ம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும். தொடர்ந்து ஜூலை 10ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.!
வீடு இல்லாதவர்களுக்கு, நிரந்தரமாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரால், கடந்த 1975ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில், ‘கலைஞரின் வீடு வழங்கும் திட்டம்’ புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது.அதாவது, ஊரகப்பகுதிகளை குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அந்தவகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கிராமப்பகுதிகளில் கிட்டத்தட்ட 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்க நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.!

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அதுமட்டுமல்ல, திட்ட மதிப்பீட்டிற்கும் அதிகமாக செலவுகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள், அதை கூட்டுறவு வங்கிகளில் கடனாக பெறலாம் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.தகுதியான நபா்களை உறுதி செய்வதற்கென தனிக் குழுவை ஆட்சியா்கள் அமைக்க வேண்டும்.!
ஊராட்சி மன்றத் தலைவா், உதவிப் பொறியாளா் அல்லது ஒன்றியப் பொறியாளா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஒன்றிய மேற்பாா்வையாளா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகியோா் குழுவில் இடம்பெற்றிருப்பா்.! என்று அரசு அறிவித்துள்ளது.!
இங்கே தான் இடிக்கிறது சமூக நீதி!
அதிமுக, ஆட்சி காலத்தில் நடந்த கிராம உள்ளாச்சி தேர்தலில் வெற்றி பெற்று வந்த அதிமுக , உள்ளிட்ட எதிர்கட்சியினராக உள்ளவர்கள்இந்தக்குழுவில் இடம் பெருகின்றார்கள். !

தொடர்ந்து பெரும்பால உள்ளாச்சி பெண் நிர்வாகிகளை செயல்படவிடாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன தங்களின் ஆளுமையே செலுத்துவதுடன் லோக்கல் காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை தன்வசப்படுத்தி காரியங்கள் சாதித்து வருவது தெரிந்தம் உளவுத்துறையும், ஊமைத்துறையாக கையூட்டுக்கு ஆசைப்பட்டு செயல்படுவதாகவும், மேலும் பெரும்பாலான ஊராட்சி உறுப்பினர்கள் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்கட்சியினராக தங்களின் வசதிகள், உறவுகளின் தேவைகளை பூர்த்தி செய்து . ஊராட்சிகளின் 100 நாள் வேலை உளளிட்ட வைகள்யாவிலும் பெரும் முறைகேடுகளை செய்து வருவதும், கிரமசபா கூட்டங்களை பெயரளவுக்கு லோக்கல் அதிகாரிகளை சரிகட்டி அவர்கள் கொடுப்பதே தீர்மானம் என்று தெரிந்தும், திட்டமிட்டே கடந்த 3 ஆண்டுகளாக தி.மு.க ஆட்சிக்கு கெட்ட பெயரை மக்களிடம் ஏற்படுத்த முயல்வதும் தான் வேதனை.!
இது போன்ற புகார்கள் இல்லாத உள்ளாாட்சி அமைப்புகளே இல்லை என்கிற அளவுக்கு, கிராமஉள்ளாட்சிகளில் ஊழல், முறைகேடுகள் சந்தி சிரிப்பதாக வே பாதிக்கப்பட்ட பகுதிகளில் உச்சகட்ட பேசும் பொருளாக நீடித்து வருகின்றது.!
இத்தகைய போக்கு 2026. சட்டமன்ற
தேர்தலில் தி.மு.கழக ஆட்சிக்கு பலத்த சவாலகவே அமையவே அதிக வாய்ப்புகள் ஏற்படும் நிலையிம் உருவாகியுள்ளது.!
இவையனைத்தும் நன்கறிந்த சம்மந்தப்பட்ட அரசு துறையினர் உள்ளிட்டவர்கள், தி.மு.க.ஆட்சி அமைந்த பின்னரும் பலத்த மவுனம் சாதித்து, கண்டும் காணாமல் காகிதங்களை மட்டுமே சேர்த்து வருவது தான் இத்திடத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கே வே வைக்கிறது என்கின்றனர், சமூக, அரசியல் பவுப்பாய்வார்கள்.!
எனவே இத்திட்டத்தில் இடம் பெறச் செய்து நியமிக்கப்படுவோர், மீதுகடந்த காலங்களில் . தமிழக முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட பிற தொடர்புடை அரசு உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு முறைகேடு, ஊழல், நீதிமன்றங்கள் உத்தரவிட்டு செயல்படுத்தாத பல்வேறு மக்கள் குறைகளை தொடர்ந்து பல முறை அனுப்பபட்ட புகார்கள்வழக்கம்போல் கண்டும் காணாமல் ஏனோ தானோ என்று குப்பை கூடைகளுக்கு சென்று இப்போது போன்று இருப்பது இருந்தால் முதல்வரின் நன்மை பயக்கும் இத்திட்டம், தொடர்ந்து குற்ற செயல்களில், உள்ளாட்சி முறைகேடுகளில் ஈடுபடுவோரைத்தான் வளப்படுத்தும் திட்டமாகவே அமையும், தமிழக முதல்வர் நல்ல நோக்கத்துடன் செயல்படுத்த முன்னெடுக்கும் கலைஞரின் கனவு இல்லம், திட்டம் பொய்த்தே போய்விடும் என்பதும், அடிமட்டத்தில் திட்டங்களை மக்களுக்கு சென்றடையச்செய்ய வேண்டிய அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இப்படித்தான் நடந்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.!
குடிசை வீடுகளின் பட்டியல் அந்தந்த ஊராட்சியின் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.வீடுகள் அனைத்தும் குறைந்தது 360 சதுர அடியுடன் இருக்க வேண்டும். அதில், 300 சதுர அடி ஆா்சிசி கூரையும், 60 சதுர அடி தீப்பிடிக்காத பொருள்களைக் கொண்டும் பயனாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கட்டப்பட வேண்டும். கூரை அல்லது ஆஸ்பெட்டாஸ் சீட் கண்டிப்பாகத் தவிா்க்கப்பட வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.!
தமிழக முதல்வர் இதில் நேரடி கவனம் செலுத்தி, இத்திட்டம் குறித்த புகார்கள் மீது கவனம் கொண்டால் முத்தமிழறிஞர் கலைஞரின் கனவு இல்லம் சாத்தியமே! சாத்தியமே!
உறியடி செய்திக்குழு......




Comments