top of page
Search

அண்ணாமலை உறுதி! டை அடிப்பவர் பற்றிய விமர்சனம்! பின்வாங்க முடியாது! லண்டன் ஆக்ஸ்போடு படிக்கப்போறேன்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 28, 2024
  • 1 min read
ree

தோகமலை.

ச.ராஜா மரியதிரவியம் .......


டை அடிப்பவர் என்ற விமர்சனத்திலிருந்து பின்வாங்க முடியாது! லண்டன் ஆக்ஸ்போடு க்கு படிக்கப்போறேன்! என் இதயம் இந்தே தான்! அறிக்கை போர் எப்போதும் தொடரும்! பாஜக, அண்ணாமலை உறுதி!


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படிக்க 3 மாதம் சென்றாலும் என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். மேல்படிப்பிற்காக லண்டன் சென்றாலும் அறிக்கை மூலம் பேசிக் கொண்டே இருப்பேன் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.!


லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புகாக, தமிழக பா.ஜ.க தலைவர் செல்வதாக கூறிவரும் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது!


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்று இரவு லண்டன் செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், ஆளுங்கட்சியுடன் சண்டை இருக்கும். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், என் இதயம் இங்கே தான் இருக்கும். வெளிநாடு சென்றாலும் அரசியல் செய்வேன். ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன்.!

ree

பா.ஜ.க,வில் உறுப்பினர் சேர்க்கை வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிராமங்களை நோக்கி பயணம் செல்ல இருக்கிறோம். தேசிய அளவில் பிரதமர் மோடியும், தமிழகத்தில் எச்.ராஜாவும் முதல் உறுப்பினராக பா.ஜ.க.,வில் இணைவர். உறுப்பினர் சேர்க்கைக்காக இம்முறை கிராமத்தை நோக்கி பா.ஜ.க பயணம் மேற்கொள்கிறது. பா.ஜ.க தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து, உறுப்பினராக இணையலாம்.!


முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் போது பெரிய திட்டங்களுடன் அமெரிக்கா செல்லும் முதல்வர் ஏதேனும் நன்மையை தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும்.அமெரிக்காவில் அதிக தமிழர்கள் உள்ளனர். அவர்களிடம் பேசினாலே ஆயிரக்கணக்கான முதலீடுகளை தமிழகம் கொண்டு வரலாம். முதலமைச்சரின் சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் பயணங்களை மேற்கொண்ட முதலமைச்சரின் தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை தேவை.!


கட்சி வளர வேண்டும் என்றால் தனித்துத் தான் போட்டியிட வேண்டும். அரசியலில் மக்களின் பார்வை மாறிவிட்டது. 40 சதவீத வாக்காளர்கள் 39 வயதுக்குக் கீழ் இருக்கின்றனர். இந்தியா மாறிவிட்டது. அ.தி.மு.க.,வில் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் டை அடித்துக் கொண்டால், அவர்கள் இளைஞர்கள் ஆகிவிடுவார்களா? மக்களிடம் பேசுவதிலும், செயலிலும் தான் இருக்கிறது. இளமை. தலையில் டை அடிப்பதில் இல்லை. இ.பி.எஸ்., மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். என்னைப் பற்றி பேசினால், நானும் திரும்பப் பேசுவேன். நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரியானது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page