அண்ணமலை - ராஜா காட்டம்!நீதிபதி சந்துரு அறிக்கை ஏற்க முடியாது? சமூக வலைதளங்களில் வைரலாகும் எதிர்வினை!
- உறியடி செய்திகள்

- Jun 20, 2024
- 2 min read

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு தமிழக அரசால் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.!
அந்தவகையில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தனது பரிந்துரை அறிக்கையை தயார் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்பித்தார்.!
அதில், புதிதாக தொடங்கப்படும் பள்ளியின் பெயரிலும் சாதி பெயர் இடம்பெறாதவாறு நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை அவ்வப்போது இடமாற்றம் செய்ய வேண்டும். முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் போன்ற முக்கிய பொறுப்புகளில் அந்தப் பகுதிகளின் பெரும்பான்மை சாதியை சேர்ந்தவர்களை பணியமர்த்தக்கூடாது. மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிவதையும், நெற்றியில் திலகம் இடுவதையும் தடை செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.!

இதற்கு பாஜக கடும் எதிர்வினை யாற்றியுள்ளது.!
பள்ளிகளில் ஜாதிக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது உண்மை தான் . ஆனால் நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்க முடியாது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.!
தமிழக பா.ஜ.,வின் மையக்குழு கூட்டத்திற்கு பிறகு அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வை பொறுத்தவரை 2024ம் ஆண்டு தமிழகத்திற்கு சிறப்பான ஆண்டு. நீட் தேர்வில் யார் குளறுபடி செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வில் தவறு இல்லை. தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது தான் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த அமைப்பு பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. தேசிய தேர்வு முகமையை மறு ஆய்வு செய்யப் போவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். நீட் குளறுபடி குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.!
தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கம் அதிகரித்து உள்ளது. தனது பணியை மேற்கொள்ளாத அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அரசு அதிகாரிகள் மீது மணல் கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்துகின்றனர். தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை இல்லை. வி.ஏ.ஓ.,க்கள் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு பெறும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு உள்ளது.!
பள்ளிகளில் ஜாதிக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது உண்மை தான் . ஆனால் சந்துரு அறிக்கையை ஏற்க முடியாது. அந்த அறிக்கையில் ஏற்றுக் கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்தினால், பள்ளி கல்லூரிகளில் மேலும் ஜாதி ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. கள்ளர், ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிகல்வித்துறையின் கீழ் கொணடு வரக்கூடாது.!
ஆசிரியர்களை ஜாதி பார்த்து தேர்வு செய்து ஜாதி பார்த்து வேலை வழங்குவதை ஏற்க முடியாது. அகர வரிசைப்படி மாணவர்கள் அமர வேண்டும் என்ற அறிவுறுத்தல் எப்படி சரியாக இருக்க முடியும்.
ஆக்கப்பூர்வமாக முடிவு எடுக்காமல் கையில் கயிறு கட்டி விபூதி குங்குமத்தை வைத்து அடையாளப்படுத்துவது சரியல்ல. பள்ளிகளில் தேர்தல் நடத்தினால் ஜாதி அரசியல் தான் அதிகரிக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.!
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்காதேவியே, உங்கள் கணவர் செய்வது சரியா? நீங்கள் எவ்வளவு பெரிய பக்தியாளர். ஆனால் உங்கள் கணவர் எடுக்கும் நடவடிக்கையெல்லாம் ஹிந்துக்களுக்கு எதிராக இருக்கிறதே. இதைப்பற்றி எல்லாம் நீங்கள் அவரிடம் பேசி ஹிந்துக்களுக்கு நல்லது செய்யமாட்டீர்களா?
விபூதி, குங்குமம். அணியக்கூடாது என்றநீதிபதி. கருத்தை ஏற்று கொள்ள முடியாது.
முதல்வர் நீதியரசர் சந்துரு கொடுத்துள்ள அறிக்கை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் மக்களிடத்தில் கருத்துக்களை கேட்க வேண்டும் மாணவர் மையத்தில் தேர்தல் நடத்துவது திலகம் இடக்கூடாது என்பது தவறான அறிக்கை போல் உள்ளது இதை மறு ஆய்வு செய்ய வேண்டும்
. என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்
பர்தா போடக் கூடாது என்று நீதிபதி சொல்வாரா ?

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு சமர்ப்பித்த அறிக்கை இந்து மதத்தினரை குறிவைப்பதாக உள்ளது என்றும்!பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை சர்ச்சைக்குரியதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக காழ்ப்புணர்வு நடவடிக்கை எடுக்கும் வகையிலும் அதன் பரிந்துரைகள் உள்ளன. அந்த அறிக்கையை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
ஹிஜாப் அணிய தடை விதித்தால் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று பேசுபவர்கள், இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாது, கைகளில் கயிறு அணியக் கூடாது என்று கூறுகிறார்கள். மேலும் இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. ஒரு பள்ளிக்கூடம் என்று சொன்னால், அந்த இடத்தை சுற்றி வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர் அந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கக் கூடாது என்றால், அதை எப்படி செயல்படுத்த முடியும்?
எனவே இந்த அறிக்கை, இந்து மதத்தினரை குறிவைப்பது போல இருக்கிறது. உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இது நிராகரிக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு” என்று எச்.ராஜா பேசினார்.!
அண்ணாமலை, எச்.ராஜா போன்றோர், முதலில் கல்வியை மத்தியிலுள்ள அவர்களின் மோடி அரசிடமிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வந்து, மாநில கொள்கை சார்ந்த விசயங்களில் கருத்துக்கள் கூறலாமா?
என்று சமூக வலைதளங்களில் எழுப்படும் கேள்விகளுக்கும் பஞ்சமில்லை




சாதியத்தை தூண்டும் இவர்கள் இருவரும் சத்தமில்லாமல் இருப்பது நல்லது.