அரசியல் அனுபவம் பேசும் அண்ணமலை! தன் நிலை உணர்ந்து பேச வேண்டும்! திருச்சி எல். ரெக்ஸ் பதிலடி!
- உறியடி செய்திகள்

- May 28, 2024
- 2 min read

அரசியலில் பிரகாஷ்ராஜின் குரலுக்கு மரியாதை அளிக்க விரும்பவில்லை. பெங்களூரு மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்ததே அவரின் அரசியல் அனுபவம்” என அண்ணாமலை சாடியதற்கு, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸ், மாஜி ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையின் அரசியல் அனுபவம் என்ன? முன்னுக்குப்பின் முரணாக பேசி வருபவர்,எத்தனை தேர்தலில் அவர் அரசியல் கட்சி தலைவராக, போட்டியிட்டு நிருபித்துள்ளார் என்று விமர்சனம் செய்துள்ளார்.!
முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா - 2024 சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. அதில் , நடப்பாண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ், “கடந்த 10 ஆண்டுகளாக தான் இந்த மன்னரை (பிரதமர் மோடி) எதிர்த்து கொண்டிருக்கிறேன். இனிமேல் அவரை மன்னர் என்றும் கூற முடியாது. அவர்தான் தெய்வக் குழந்தை ஆகிவிட்டாரே.
நாட்டுக்கு அவரால் எதாவது துன்பம் ஏற்பட்டால் அவரை திட்டவும் முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். !
அரசியலமைப்பு சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.!
மக்களின் பரிசத்தை உணராத ஒருவர், மனதை அறியாத ஒருவருக்கு மக்களின் பசி புரியாது. எனவே தன்னை தெய்வமகனாக சொல்லி கொள்பவர் தெய்வமகன் அல்ல. டெஸ்ட் டியூப் பேபி தான்.! மன்னரை பார்த்து பயப்படுபவன் நான் இல்லை. எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும். நான் எப்போதும் மக்களின் குரலாக இருப்பேன்” என்று பேசினார்..!

இதற்கு பதிலளிக்கும் வகையில்
சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை அவர், “பெங்களூரு மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்த நடிகர் பிரகாஷ் ராஜ். ஒரு நடிகராக அவர் மீது மரியாதை உண்டு. அதை தாண்டி அரசியலில் அவரின் குரலுக்கு மரியாதை அளிக்க விரும்பவில்லை. பெங்களூரு மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்ததே அவரின் அரசியல் அனுபவம். மோடியை திட்டுவதை மட்டுமே தனது முழுநேர வேலையாக கொண்டுள்ளார்.!
எனவே, பிரகாஷ் ராஜ் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை.
கடவுள் அனுப்பியதாக பிரதமர் மோடி பேசியதை திரித்து இங்கே சிலர் மேடையில் பேசுகிறார்கள்.! பிரதமர் மோடி இந்தியில் பேசுவதை புரியாமல் இங்கு பேசினால் அதற்கு என்ன பதில் சொல்வது? திருமாவளவன் ஒரு எம்.பி. பொறுப்பாக பேச வேண்டியவர் அண்ணன் திருமாவளவனுக்கு எனது வேண்டுகோள். பேசும்போது தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை உணர்ந்து பேச வேண்டும். மோடி எதிர்ப்பு என்பதை பல எல்லைக்கு கொண்டுச் சென்றுள்ளதை மோடியே கூறி வருகிறார்.!
நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை மாற்று கட்சியினருக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. ஸ்டாலின் மாதிரி நாங்கள் இரவு இரண்டு மணிக்கு யாரையும் கைது செய்ய மாட்டோம்.! திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கருத்துரிமையை பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது” என்றார்.!
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் - மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் அண்ணாமலைக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.!

மக்கள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர் தலைவகள், மோடி தனது 10 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாட்டிற்கும் - இந்திய வளர்ச்சிக்கும் செயல்படுத்திய உருப்படியானதிட்டம் என்ன என்று தொடர்ந்து கேள்விகள் கேட்டும் இதுவரை பதில் கூற முடியாமல் திணறுவதை நாடும், நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.!
மெளனம் மட்டுமே பா.ஜ.க.வின் பதிலாக உள்ளது.!
பத்தாண்டு பிரதமராகயிருந்த மோடி தோல்வி பயத்தில், மாநிலத்திற்கு, மாநிலம், தனது நிலைபாட்டை மாற்றி கொண்டு எப்படியாவது மக்களை முட்டாளாக்கி ஏமாற்றி தேர்தல் வெற்றியை அடைந்திட வேண்டும் என்று பேசி வருவது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும்.!
அந்த வகையில் அண்ணாமலை ஊடக வெளிச்சத்திற்காக போகிற போக்கில் கொளுத்தி போடும் பேச்சும் புதிதல்ல!

அரசியல் அனுபவம் பற்றி பேசும், மாஜி ஐ.பி.எஸ். அதிகாரியாகயிருந்து, இன்று அரசியல் பேசும் அண்ணாமலை தனது அரசியல் அனுபவம் என்ன என்பதை முதலில் நன்குபுரிந்து கொள்ள வேண்டும்.!
அதன் பின்னர் பா.ஜ.க.வின் மீதும் மோடி மீதும் விமர்சனம் செய்பவர்களுக்கு பதில் கூறலாம்.!
தேர்தல் பற்றி பேசும் அண்ணாமலை எத்தனை தேர்தலில் போட்டியிட்டு தனது, கட்சியின் பலத்தை மக்கள் மத்தியில் பெற்று நிருபித்துள்ளார் என்பதைபற்றியும் முதலில் நன்கு சிந்தித்து விட்டு பேச வேண்டும்.!
அரசியலில் கருத்துக்களை கூற சமான்யனுக்கும் சம உரிமை உண்டு.! இது ஒன்றும் இடி அமீன் காலமல்ல.!
ஒரு கட்சியின் மாநில தலைவராக பொருப்பு வகிக்கும் அண்ணாமலை, மீண்டும், மீண்டும் வாய்க்கு வந்ததை போகிற போக்கில் சிறுபிள்ளைத்தனமாக, ஊடக வெளிச்சத்திற்காக பேசி வருவது அழகல்ல.!
இவ்வாறு கூறினார்




Comments