உயர் நீதிமன்றம் பாராட்டு! போதை தடுப்பில் தமிழக அரசு சிறப்பான செயல்பாடு! போதை தொடர்பு போலீஸை கண்காணிக்கவும் அறிவுறுத்தல்!
- உறியடி செய்திகள்

- May 17, 2024
- 1 min read

போதைப் பொருள் குற்றவாளி களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் போலீசாரை கண்காணிக்க நேர்மையான அதிகாரிகள் கொண்ட உயர்நிலை ரகசியக் குழுவை அமைக்க வேண்டும்.!
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு.!
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார் அதில் அவர் தரப்பில் கூறியிருப்பதாவது:
மதுரை ஒத்தக்கடை ஐயப்பன் நகரில் சிலர் போதையில் பிரச்னையில் ஈடுபட்டனர். அப்போது கான் முகமது என்பவரை தாக்கினர்.
அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.!
ஒத்தக்கடையில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தவறிவிட்டனர்!.
இனியாவது கண்காணிப்பு கேமராக்கள் ஐயப்பன் நகர், நீலமேக நகரில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும்.!
மேலும் போதையில் வாகனம் ஓட்டுவோர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.!

இதனைநீதிபதிகள் பி.வேல்முருகன், கே.ராஜசேகர் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பில்,கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பொது இடங்களில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது.!
2021-24 ல் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வெளிமாநிலங்களை சேர்ந்த 2486 பேர் கைதாகியுள்ளனர். 3719 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது !.
2021ல் 20 ஆயிரத்து 323 கிலோ, 2022 ல் 27 ஆயிரத்து 208.5 கிலோ, 2023 ல் 23 ஆயிரத்து 468.4 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை தவிர ஹெராயின், போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.!
போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்களின் ரூ.1 கோடியே 43 லட்சத்து 52 ஆயிரத்து 957 மதிப்புள்ள சொத்துக்கள், 7389 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன!.
எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது முதல் வழக்கு முடிவடையும் வரை அதனை கண்காணிக்க மாநில, மாவட்ட அளவில் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டடுள்ளனர்.!
ஒத்தக்கடையில் 2019 முதல் 2024 ஏப்.,வரை 49 போதைப்பொருள் வழக்குகளில் 78 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 1070.670 கிலோ போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். கான் முகமதுவை தாக்கிய 6 பேர் கைதாகியுள்ளனர். இவ்வாறு காவல் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.!
. வழக்கை விசாரித்து வந்தநீதிபதிகள்:
சந்தேகத்திற்கு இடமின்றி, போதைப்பொருள்களை கட்டுப்படுத்த தமிழக அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது.!

எவ்வாறாயினும், போலீஸ் அதிகாரிகள் இன்னும் விழிப்புணர்வுடன் செயல்படும் பட்சத்தில், போதைப் பொருளின் சுதந்திரமான நடமாட்டம் சாத்தியமற்றது என கருதுகிறோம்.!
போதைப் பொருள் குற்றவாளிகளுடன் கைகோர்த்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் போலீசாரை கண்காணிக்க நேர்மையான அதிகாரிகள் கொண்ட உயர்நிலை ரகசியக் குழுவை தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆகியோர் அமைக்க வேண்டும்.!
இவ்வாறு உத்தரவிட்டனர்.




Comments