top of page
Search

சவுக்கு கைது வழக்கு மேல் வழக்கு! ஜுன்4,க்கு பின் உடந்தையானவர்கள் மீதும் நடவடிக்கை யா?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 16, 2024
  • 4 min read
ree

யூடிப்பர் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் கைதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் முடியும் ஜுன் 4,ம் தேதிக்கு பின்னர், உடந்தையாயிருந்த அரசில், அரசு வட்டாரம், கனிம மாபியாக்கள் உள்ளிட்ட தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை அடையாள படுத்தும் நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளும் என்கிற தகவல் வெகுவாக பரவி வருகிறது.!



சவுக்கு சங்கர். ஊழல், இலஞ்சம், அதிகார அத்துமீரல், அடக்குமுறைகள் என்கிற சமூகத்திற்கு விடங்களுக்கு எதிராக, அரச பயங்கரவாதங்களை தோலித்து ரித்து தொங்கவிடும் சமூக போராளி என்கிற கட்டமைப்பை தொடர்ந்து உருவாகிவந்தது என்றே கூறலாம்!

ree

இத்தகைய நபரை கஞ்சா வழக்கு மற்றும் காவல்துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகள், பெண்கள். என்று அனைத்து தரப்பினரையும் அநாகரிகமாக, அவதூறாகப் பேசினார் என கைது செய்துள்ளது காவல்துறை.!

கைதின் தொடர்ச்சியாக சவுக்குசங்கரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனைகளும் நடத்தப்பட்டது.!

.

ree

சவுக்கு சங்கர் மொத்தம் 120 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்தாகவும், அதன்படியாக சென்னை தி.நகரில் 10 கோடி ரூபாய் மதிப்பில் வீடு, லீலா பேலஸ் ஸ்டார் ஓட்டல் அருகில் சீப்ரோஸ் கிரேஸ் ஷாட் வி.வி.ஐ.பி. அபார்ட்மெண்ட் 20 கோடி, 8600 சதுரஅடி, கொட்டிவாக்கம் வீடு 40 கோடி, மேத்தா நகரில் 3500 சதுரஅடி 20 கோடி. மதுரவாயலில் கேரளா ஸ்டைலில் அனைத்து நவீன வசதிகளுடன் 1000 சதுர அடியில் அதி நவீன வசதி - தோற்றம் - முற்றத்துடன் வீடு 10 கோடி, அதே மதுரவாயலில் ரமணீயம் பில்டிங்கில் முறையே 7 கோடி மதிப்பில் இரண்டு பிளாட்கள். பி.எம்.டபிள்யூ மற்றும் இரண்டு சொகுசுக் கார்கள். கோடிக்கணக்கான மதிப்பில் சகல நவீன தொழில்நுட்பத் துடன் கூடிய அலுவலகம் என இவையனைத்தையும் சோதனை போட்ட போலீசார் சவுக்கை தேனியில் கைது செய்தபோது, கஞ்சா 490 கிராமும் அதற்குப்பின் சோதனையின் போது மொத்தம் 2 கிலோ கஞ்சாவுடன் சிக்கியதாகவும்!

ree

இவரது முன்னால் உதவியாளர் ஒருவர் அளித்த பேட்டியில், "சவுக்கு சங்கர் கஞ்சா மட்டுமல்ல... அதற்கு மேலும் உள்ள நவீன போதைவஸ்துக் களையும் உபயோகப்படுத்துவார்' என்று கூறியதை தொடர்ந்து அது பற்றிய விசாரணையில் ஒரு பெரிய நெட் வொர்க்கே போலீஸ் வலையில் சிக்கியுள்ளதாகவும் பிரபல அரசியல் புலனாய்வு இதழான நக்கீரனில் செய்திகள் வெளியாகி பரபரப்பை - அதிர்ச்சியை மேலும் அதிகரிக்க வே செய்துள்ளது.!

ree

மேலும் அந்த இதழிலில்

சவுக்கு டீமைசார்ந்தோர் வேளச்சேரியில் ஒரு பிளாட் வைத்துள்ளார்கள். ஒரு அடுக்குமாடி குடியிருப் பில் 12வது தளத்தில் அமைந்துள்ள அந்த மாடி குடியிருப்பிறக்கு (பிளாட்) தமிழகத்தில் செயல்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வந்து போவார்கள். காவல்துறை ரெய்டில் சிக்கும் பெண் வணிகம் செய்யும் தரகர்கள், அழகான பெண்களை அந்த அடிக்குமாடிக்குடியிருப்புக்கு அழைத்து வருவார்கள். உயர்தர வெளிநாட்டு மதுவுடன் கொக்கைன் என்கிற போதைப் பொருள்கள் அங்கு வரும் அதிகாரிகளுக்கு பரிமாறப்படும்.!

ree

பாட்டு டான்சு என களியாட்டங்கள் நடைபெறும் அந்த சரச பார்ட்டியின் முடிவில் தான், யார் யார் வீட்டுக்கு அமலாக்கத்துறை ரெய்டு போவது என்றும் முடிவு செய்யப்படும்.!

ree

அப்படி ரைடுக்கு உள்படுத்தும் நபர்களை சவுக்கு சங்கர் தலைமையிலான டீம் மிரட்டி. அவர் பெருந்தொகை கொடுத்தால் ரெய்டு இல்லை. அப்படி கொடுக்கவில்லை என்றால் அந்த நபர்கள் அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமானவர்கள் என டெல்லி தலைமைக்கு தமிழக அமலாக்கத்துறை அதிகாரிகள் மெசேஜ் அனுப்புவார்கள்.!

ree

உடனே அவர்கள் மீது அமலாக்கத்துறை ரெய்டு நடக்கும். இப்படித்தான் தமிழகத்தில் மிக முக்கிய வி.ஐ.பி.க்களாக இருந்த பலரும் மிரட்டப்பட்டார்கள்!.

இவர்களது வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டும் நடத்தபட்டது.!


மோடிக்கு மிக நெருக்கமான திரிவேணி எர்த் மூவர்ஸ், இராமநாதபுரம் சூரிய மின் தகடு ஆலை நிறுவும் அதானி ஆகியோரை யும் சவுக்கு சங்கர் கும்பல் விட்டு வைக்கவில்லை! மணல், கனிம தொழிலை நடத்தும் புதுக்கோட்டை ராமச்சந்திரன் என்பவர் பற்றி சமூக வலைத்தளங்களில் சவுக்கு சங்கர் எழுதி வந்தார்.!

ree

அதன் தொடர்ச்சியாக அவர் மீது வழக்கும் பதிவு செய்தது அமலாக்கத்துறை.!

அவரிடம் டீல் பேசிய சவுக்கு சங்கர் 30 கோடி ரூபாய் கொடு என கேட்டிருக்கிறார். ராமச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால். சவுக்கு மீடியாவில் வேலை செய்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் கோவிந்தராஜ்தான் மணல் ராமச்சந்திரனை இந்த பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்துள்ளார். இதில் சவுக்கின் 30 கோடி ரூபாய் டிமாண்டுக்கு மணல் ராமச்சந்திரன் ஒத்துக் கொள்ளவில்லை. மணல் ராமச்சந்திரனை சந்திக்க நடந்த ஏற்பாடுகள் சம்பந்தமாக சவுக்கும், கார்த்திக் கோவிந்தராஜும் பகிர்ந்துகொண்ட வாட்ஸ்அப் தகவல்களை போலீசார் கைப்பற்றி யிருக்கிறார்கள்.! என்றும் குறிப்பிட்டுள்ள இதழில் --

ree

ராமச்சந்திரன் ஒத்துவரவில்லை என்பதால் அ.தி.மு.க. மாஜி அமைச்சர் வேலுமணியுடன் சேர்ந்து ராமச்சந்திரனுக்குப் பதிலாக இன்னொருவர் மணல் எடுக்கட்டும், . அதில் வரும் லாபத்தை வேலுமணியுடன் சவுக்கு சங்கரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என திட்டமிடப்பட்டதை அறிந்த தி.மு.கழக. மேலிடம், மணல் வணிகத்தை அங்கீகரிக்க வில்லை. அது இன்றுவரை கிடப்பிலே வைக்கபட்டுள்ளது.!

இப்படியாக அமலாக்கத்துறையை வைத்து தமிழகம் முழுவதும் இரண்டரை வருடங்களில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த சவுக்கு, பல அரசியல்வாதிகளுடனும் டீலிங்கில் இருக்கிறார்.!


எடப்பாடியுடன் டீலிங் போட்டு கோடிக்கணக் கில் பணம் பெற்றிருக்கிறார். பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரனின் உதவியாளர் வி.ஆர்.என். நாகராஜ் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் சவுக்குடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.!

நயினார் நாகேந்திரின் நான்கு கோடி ரூபாய் சிக்கியதன் பின்னணியிலும் சவுக்கின் பங்கு பெரும் அளவில் இருந்துள்ளது.!.

ree

சவுக்கு சங்கரின் செயல்பாடுகளில் இவருக்கு நெருக்கமாக செயல்பட்டவர் பெலிக்ஸ் ஜெரால்டு, . அவர் சவுக்கு கைது செய்யப்பட்டவுடன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.!

ree

முன்ஜாமீன் கொடுக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பெலிக்ஸின் ரெட்பிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்பிய சவுக்கு சங்கரின் பேட்டியில் அவர் காவல்துறையில் வேலை செய்யும் பெண்களை இழிவாக விமர்சனம் செய்திருந்தார்.!

முன்பு ரெட்பிக்ஸில் வெளியான இன்னொரு காணொலி பேட்டியில், நீதித்துறையில் வேலை செய்யும் பெண்களை இழிவாக விமர்சனம் செய்துப் பேசியிருந்தார்.!


முந்தைய பேட்டி தொடர்பாக அவரை நீதிமன்றமே ஆறு மாதம் சிறையில் அடைத்தது.!

அப்பொழுது, நீதிமன்றத்தில் இனிமேல் அப்படிப் பேசமாட்டேன் என மன்னிப்புக் கேட்டு உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார் சவுக்கு!.

ஆனால், மறுபடியும் பெலிக்ஸ் ஜெரால்டுடன் சேர்ந்து காவல்துறை உயரதிகாரி ஒருவரையும், அவருடன் வேலை செய்யும் பெண்களை யும் கேவலமாகப் பேசினார். அதில் சவுக்கு கைது செய்யப்பட, பெலிக்ஸ் ஜெரால்டும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.!


இதற்கான முன்ஜாமீன் வழக்கில் கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி இதில் பெலிக்ஸ் ஜெரால்டுதான் முதல் குற்றவாளி என்று கூறி நீதிமன்ற ஜாமீன் மறுக்கப்பட்டது.!

இதனையடுத்து பெலிக்ஸ் ஜெரால்டு செல்போனை ஆப் செய்துவிட்டு டெல் லிக்கு பறந்து சென்றுள்ளார்.!

அங்கிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவுக்கு சென்ற அவரை, அவர் தங்கியிருந்த லாட்ஜிலே வைத்து திருச்சி ரூரல் எஸ்.பி. வருண் குமாரின் ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த வீரமணி என்கிற இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.!

ree

நான் இருக்குமிடத்தை எப்படிக் கண்டுபிடித் தீர்கள்?' என்று கேட்ட பெலிக்ஸிடம் "உன்னைச் சுற்றி உள்ளவர்கள்தான் தகவல் தருகிறார்கள்' என வீரமணி சொன்ன போது, பெலிக்ஸ் ஜெரால்டு அதிர்ந்து போனார்.!

கடும் கோடையில் டெல்லியிலிருந்து திருச்சிக்கு ரயிலில் ஏற்றி பெலிக்ஸ் ஜெரால்டை கொண்டு வந்தார்கள்.!


அவரை கைது செய்தவுடன் "என்னை பிளைட்டில் கொண்டுசெல்லுங் கள்' என கோரிக்கை வைத்திருக்கிறார் பெலிக்ஸ் ஜெரால்டு. அதை மறுத்த போலீஸ், அவரது மனைவியை தொடர்புகொண்டு கைதான தகவலை மட்டும் சொல்லச் சொல்லிவிட்டு, அவரை அழைத்து வந்து விட்டது.!


இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டின் பெரிய அரசியல் தலைவர் ரேஞ்சில் சவுக்கு சங்கர் மிரட்டிப் பணம் கேட்டதற்கு உறுதுணையாக இருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளில் சிலர், அமலாக்கத்துறை அதிகாரிகள் என பலர் சவுக்கு சங்கரின் கைதால் அரண்டுபோயிருக்கிறார்கள்.!

ree

அவரது இ-மெயில் மற்றும் சமூக வலைத் தளங்கள் மூலமாகப் பரிமாறப்பட்ட அனைத்துத் தகவல்களையும் அவருக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவே காவல்துறை கைப்பற்றிவிட்டது.!

"சவுக்குக்கு மிக நெருங்கிய தோழியான மாலதி என்பவரது அக்கவுண்டில் மட்டும் குறுகிய காலத்தில பணம் வந்து சேர்ந்திருக்கிறது' என்கிறார்கள்,

காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.!


சவுக்கின் பைனான்ஸ் விசயங்கள் அனைத்தும் இன்றும் மாலதியின் கைகளில்தான் இருக்கின்றது. தேனி மாவட்டத்தில கோம்பை என்கிற ஊரைச் சேர்ந்த மாலதியின் தந்தை, திருவொற்றியூரில் தேங்காய் வியாபாரம் செய்யும் ஒரு சாதாரண வியாபாரி. மாலதியின் பெயரில் சென்னை தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டர் பக்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார் சவுக்கு சங்கர். மாலதி, பத்திரிகையாளரான தனது முதல் கணவரை விவாகரத்து செய்யும்போது பெற்ற தொகை வெறும் 32 லட்சம் தான்.!


யுடியூப் சேனல்களில் வேலை செய்த மாலதி பல கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியது எப்படி என்கிற கேள்வியை போலீசாரே எழுப்பி வருகிறார்கள்.!


இது போல பலர் பெயர்களில் சவுக்கு சங்கர் சொத்துக்கள் வாங்கிக் குவித்துள்ளார். மிரட்டல் பணம், சொத்துக் குவிப்பு, போதை என்று ராஜ வாழ்வு வாழ்ந்த இந்த சவுக்கு டீமில் செக்ஸ் வக்கிரங்களுக்கும் எந்தக் குறைவும் இல்லை என அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கிறார்கள் காவல்துறையினர்.!


இவ்வாறான தகவல்களை இதழிலில் குறிப்பிட்டு செய்தி வெளியாகி மேலும் பரப்பரப்பையும் - அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.!


இதனை தொடர்ந்து இத்தகைய செயல்களுக்கு உடந்தையாக - ஊக்கமாகயிருந்த அரசியல் - காவல் உள்ளிட்ட அரசு அதிகார வட்டத்தினர். மணல், கனிம மாபியாக்களும் சிக்குவார்கள் என்று தமிழகஅரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.!

ree

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது துணைவியர், உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் பல்வேறு வழிவகைகளை கையாண்டு ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியாக, மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்துவரும் ஆட்சியாளர்கள் மீதும், பிற துறையினர்கள் மீதும், விஷம, அவதூறு பரப்பிய இத்தகைய நபர்களின் திரைக்கு பின்னால் ஒளிதிருக்கும், அரசியல், அரசு உயர் பிரிவினர்கள் கனிம மாபியாக்களையும் அடையாளம் கண்டு, .....!


ஒன்றிய மக்களவை தேர்தலை, 7 கட்டமாக நடத்தி, - நடத்த விதிகள் என்கிற பெயரில் மாநில அரசுகளை முடக்கிவைக்கபட்டுள்ள நிலையில், வரும் 4.ம் தேதிக்கு பின்னர் அரசு உரிய நடவடிக்கை எடுத்து அடையாளபடுத்தும் என்கிற வாசகர்கள் - அரசியல் விமர்சகர்கள், பார்வையாளர்கள், சமூகத்தின் மீது அக்கரை கொண்டோர்களுடன் நாமும் உறுதியாக நம்புவோம்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page