top of page
Search

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்! இறப்பில் மீண்டும் அண்ணாமலை அரசியலா! அரசியல் - சமூக வளைதளங்களில் கேள்வி?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 15, 2024
  • 4 min read

ree

கொலை வழக்கு விசாரணை!

சுட்டான் சுட்டேன் போலீஸ்! எப்படி சுடலாம் அண்ணாமலை ? மீண்டும், மீண்டும் இறப்பில் அரசியல் செய்கிறாரா? தொடர்ந்து எழும் சந்தேகங்கள்!


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி மாலை 6.55 மணிக்கு சென்னை பெரம்பூரில் அவரது புதிய வீடு

அருகே ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் போல் வேடம் அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பலினால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.!


கொலை குற்றவாளிகள் அனைவரும் 3 பைக்குகளில் அங்கிருந்து தப்பிய இந்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது.!


சென்னையில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.!


இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக இருந்த அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது


இக்கொலை தொடர்பாக, பிரபல ரவுடியும் கூலிப்படை தலைவனுமான ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, அவரது மைத்துனர் அருள் உட்பட 11 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து சட்டம் -ஒழுங்கு குறித்து எழுந்த கடும் விமர்சனங்களால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டு, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண், சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.!

ree

உடனடியாக அப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அருண், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தனிக் கவனம் செலுத்த உத்தரவிட்டு விசாரணையை முடுக்கிவிட்டார். சென்னையில் பகல், இரவு ரோந்து உள்பட போலீசார் கடும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்.!


இதைத்தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, மைத்துனரான வழக்கறிஞர் அருள் (33), குன்றத்தூர் பெரியார் நகர் காமராஜர் தெருவை சேர்ந்த ரவுடி திருவேங்கடம் (33), ராணிப்பேட்டை கவுண்டபாளையத்தை சேர்ந்த கோகுல் (25), விஜய் (19), திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசக்தி (26), வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22), திருநின்றவூர் கன்னடபாளையத்தை சேர்ந்த ராமு (எ) வினோத் (38), மணிவண்ணன், சந்தோஷ், ஆட்டோ டிரைவர் திருமலை ஆகிய 11 பேரை 7 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணையும் நடத்தி வந்தனர்.!

ree

இதன் ஒரு நடவடிக்கையாக 11 பேரையும் போலீசார் பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். 11 பேரின் செல்போன்களை ஆய்வு செய்ததில்., ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலுவுடன் ரவுடி திருவேங்கடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரிந்தது. உடனே திருவேங்கடத்தை போலீசார் தனியாக விசாரித்ததில், வேறு ஒரு கொலை வழக்கில் சிறையில் இருந்தபோது ஆற்காடு சுரேசுடன் நெருங்கிப் பழகி வந்ததாகவும், அதன்பிறகு ஆற்காடு சுரேஷின் கூலிப்படையில் திருவேங்கடம் சேர்ந்ததாகவும் தெரிய வந்தது.!


ஆற்காடு சுரேஷின் நட்பு கிடைத்த பிறகு குன்றத்தூர் பகுதியில் திருவேங்கடம் பிரபல ரவுடியாக வலம் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.!


மேலும் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்க ஆற்காடு சுரேஷின் சகோதரரான பொன்னை பாலு திட்டமிட்டபோது, அதற்கு உடந்தையாக ரவுடி திருவேங்கடமும் இணைந்து செயல்பட்டதும், அதற்காக திருவேங்கடம் தலைமையில்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கூட்டாளிகளை அவர் தேர்வு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.!

ree

இதைத்தொடர்ந்து திருவேங்கடம் 10 நாட்களாக ஆன்லைன் டெலிவிரி ஊழியர் போல உடை அணிந்து, ஆம்ஸ்ட்ராங் செல்லும் இடங்களுக்கு ஆட்டோ டிரைவரான திருமலையுடன் சேர்ந்து பின்தொடர்ந்து நோட்டமிட்டுள்ளார்.


அப்போது, புதிதாக கட்டி வரும் வீட்டை பார்வையிட வாரத்திற்கு 3 நாட்கள் ஆம்ஸ்ட்ராங் தனியாக வருவது திருவேங்கடத்திற்கு தெரியவந்ததாக கூறப்படுகின்றது.!


இதனை பலமுறை நேரில் சென்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.இதனையடுத்து கடந்த 5ம் தேதி புதிதாக கட்டும் வீட்டிற்கு ஆம்ஸ்ட்ராங் வந்தபோது, அவரை பின்தொடர்ந்த திருவேங்கடம் தலைமையிலான கலிப்படை ரவுடிகள் ஆன்லைன் டெலிவிரி ஊழியர்கள் போல் வந்து ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்துள்ளனர்.!


அப்போது ஆம்ஸ்ட்ராங் சுதாரித்துக் கொண்டு தன்னை வெட்ட வந்தவர்களில் ஒருவனிடம் இருந்து அரிவாளை பறித்து தாக்க முயன்ற போது, ரவுடி திருவேங்கடம் அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கின் கழுத்து பகுதியில் ஓங்கி வெட்டியுள்ளார்.!


அதில் நிலைதடுமாறிய ஆம்ஸ்ட்ராங் கீழே சாய்ந்து வீழ்ந்தபோது மற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து வெட்டிக் கொன்றுள்ளனர்.!

ree

ரவுடி திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங் கழுத்திலேயே 4 முறை ஓங்கி வெட்டியதில்தான் அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார் என்று போலீசார் விசாரணயில் திருவேங்கடம் தெரிவித்தாக கூறப்படுகின்றது..


மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக திட்டமிட்டு முன்கூட்டியே கள்ளத் துப்பாக்கி ஒன்றும் வாங்கி வைத்திருந்ததாகவும் போலீசார் விசாரணையில் ரவுடி திருவேங்கடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, கொடூங்கையூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் தனிப்படை இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் ரவுடி திருவேங்கடத்தை நேற்று முன்தினம் இரவு மாதவரத்தை அடுத்த ஆடுத்தொட்டி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.!


அப்போது ரவுடி திருவேங்கடம் அப்பகுதியில் பல இடங்களில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக பல மணிநேரம் தனிப்படை போலீசாருக்கு போக்கு காட்டியுள்ளார்.!


தொடர்ந்து ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என திருவேங்கடம் போலீசாரிடம் கூறியதால் வாகனத்தை நிறுத்தியபோது திருவேங்கடம் திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளார்.!


இதை சற்றும் எதிர்பாராத தனிப்படை போலீசார் பின்தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிட்டேரியன் வில்லேஜ் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு ஷெட் அருகே பதுங்கியிருந்த திருவேங்கடம், அங்கு தேடி வந்த போலீசாரை பார்த்தவுடன் , இரும்பு ஷெட்டில் புதைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து, போலீசாரை நோக்கி சுட்டபடி ஓடியுள்ளார்.!

ree

இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், ரவுடி திருவேங்கடத்தை பலமுறை எச்சரித்தும் அவர் நிற்காமல் ஓடியுள்ளார். ஒரு கட்டத்தில் தாக்குதலை சமாளிக்கும் வகையில் தனிப்படையில் இருந்த இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, தற்காப்புக்காக ரவுடி திருவேங்கடத்தை நோக்கி மூன்று முறை சுட்டு எதிர்தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.!


இதில் ரவுடி திருவேங்கடத்தின் வலது பக்க வயிறு மற்றும் இடது பக்க மார்பில் குண்டுகள் பாய்ந்தன. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த திருவேங்கடத்தை போலீசார் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ரவுடியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.!


இந்நிலையில்

திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

ree

"பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றவாளியை அவசரமாக என்கவுண்டர் செய்ய வேண்டிய காரணம் என்ன?


3 முக்கிய குற்றவாளிகளும் தானாக வந்து சரணடைந்த நிலையில் எப்படி தப்பி ஓட முயற்சி செய்வார்கள், இதில் என்ன லாஜிக் உள்ளது.!


ஒருவரை என்கவுண்டர் செய்து விட்டால் அந்த குற்றச்சம்பவம் குறித்த வழக்கை முடித்து விடமுடியுமா?


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினருக்கும் தொடர்பு உள்ளது.!


போலீஸ் காவலில் இருந்தவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்திருக்கும். சரணடைந்தவரை என்கவுண்டர் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவசர அவசரமாக என்கவுண்டர் என்ற பெயரில் ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு வழக்காக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு செல்லும் போது தான் முழுமையான விவரங்களும் தெரியவரும்."

இவ்வாறு அவர் கூறினார்.!


இது குறித்து அரசியல், சமூக வட்டாரங்களில், திருத்துறைபூண்டியிலிருந்து, ரவுடி தாக்குதலின் போது போலீஸ் தற்காப்புக்காக சுட்ட

என் கவுண்டர் சம்பவம் வரை, ராமதாஸ், அண்ணாமலை, பழனிசாமி, சீமான், போன்றவர்களின் நினைப்பாடுகள், சுயநல அரசியல் செய்வதாகவே இருந்து வருகிறது.!


அதே சமயம், ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணி பற்றிப தகவல்கள் பரப்பானவுடன், திடீரென அண்ணாமலை தி.மு.கவில் ஆர்.எஸ்.பாரதியையும், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும், பற்றி விமர்சித்து திசை திருப்ப முயற்சித்தார்.! அது போல இப்போது ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் சம்பவத்தை அரசியலாக்க முயற்சிப்பதாக வே பார்க்க வேண்டியுள்ளது.!

என்கின்றார்கள்.!


இது ஒருபுறமிருக்க ஆம்ஸ்ட்ராங்கை கொலையாளிகள் எவ்வாறு நோட்டமிட்டு வெட்டிச் சாய்த்தனர் என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஏற்கனவே வெளியாகி பரபரப்பானது.!


இந்நிலையில் மேலும் ஒரு வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது,!


அதில், திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு பட்டாக்கத்தியுடன் தப்பிச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரு வாகனங்களில் வரும் கொலையாளிகள் திருவேங்கடத்தை தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். இந்த வீடியோவும் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.!

குறிப்பிடதக்கது.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page