முதல்வரின் வழிகாட்டலின்படி! பெரம்பலூர் தொகுதி தன்னிரைவு பெற பாடுபடுவேன்! கே.என்.அருண் நேரு பேட்டி!
- உறியடி செய்திகள்

- Jun 6, 2024
- 2 min read
Updated: Jun 6, 2024

மணவை எம்.எஸ்.ராஜா...
பெரம்பலுருக்கு ரயில் போக்குவரத்துத் திட்டம், வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் தொழிற் சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும், பெரம்பலூர் தொகுதி, தமிழக முதல்வர் வழிகாட்டலின் படி தன்னிறைவு பெற தேவையான அனைத்து திட்டங்களும் கொண்டு வர முயற்சிகள் மேற்க்கொள்வேன் என்று வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு கூறினார்.!
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் வெற்றிப்பெற்ற தி.மு.கழக கூட்டணி வேட்பாளர் .கே.என்.அருண் நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது.!

தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சரால் அடையாளம் காட்டப்பட்டு, பெரம்பலூர் தொகுதியில் தி.மு.கழக கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக மக்களவை போட்டியிட்ட,எனக்கு விழுந்த ஓட்டுக்கள், தமிழக முதல் அமைச்சர் எங்கள் தலைவர் தளபதியார், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு, கடநத 3 ஆண்டுகளாக தலைமையேற்று, நடத்தி வரும்திராவிட மாடலின் நல்லாச்சியில், எல்லோருக்கும், எல்லாமும் கிடைத்திட வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கில் மக்களுக்கு, தேர்தல் நேரத்தில் சொல்லாததிட்டங்கள் பலவற்றையும் நிறைவேற்றி தந்த மக்கள் நலத்திட்டங்க ளுக்கும், கருப்பு சிவப்பு வண்ணத்திற்கும், உதய சூரியன் சின்னத்திற்கும், முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவர். முதல்வர் தளபதியார் மக்கள் நலப்பணிக்காக விழுந்த ஓட்டுக்கள் தான் என்றால் அது மிகையாது என்பதை நன்கறிவேன்.!

பெரம்பலூர்பாராளுமன்ற தொகுதியில் வேலைவாய்ப்பு, விவசாயம், தேவையான ரயில் திட்டங்கள் போன்ற மக்களின் அத்தியா வசமானதிட்டங்களை முதலில் நிறைவேற்றிடுவேன்.
குறிப்பாக நீண்ட நாள் கோரிக்கையான பெரம்பலூருக்கு ரயில் திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்வேன். !
தொகுதிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகள் விவசாயம் சார்ந்துள்ளது.
ஆகவே வேளாண் பயிர் சாகுபடி ஊக்குவிப்பதற்காக தேவையான அனைத்து திட்டங்களும் கொண்டு வர அயராது பாடுபடுவேன்.!

ரயில் போக்குவரத்து திட்டம் கொண்டுவரப்பட்டால் வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய விவசாயம் சார்ந்த நிலங்கள் அதிகம் இருப்பதால் புதிதாக தொழிற்சாலைகள் கொண்டு வரும் திட்டமும் நிறைவேற்றப்படும்.! இதன் மூலம் கழகத் தலைவர் தளபதியாரின் ஆட்சி காலத்தில் பெரம்பலூர் தன்னிறைவு அடையச் செய்ய தொடர்ந்து பாடுபடுவேன்.!




வெற்றி என்பது முதல் படி தான் மக்களுக்கான பணிகள்இதற்கு பின்னர் செய்யக்கூடியது தான் அதிகம் உள்ளது என்பதை நன்கு அறிவேன்.!
கழகத் தலைவர், தளபதியாரால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட என் மீது மாபெரும் நம்பிக்கை கொண்டு வாக்களித்த அனைத்து தரப்பு மக்களுக்கும், வெற்றிக்கு தன்னிகரற்ற வகையில்உழைத்த
தி.மு.க. கழக அனைத்துத்தரப்பு நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், அனைத்துத்தரப்பு மக்கள் பிரதிகள், உள்ளிட்டவர்கள் மட்டுமல்லாது தோழமையுடன் தேர்தல் பணியாற்றிய அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.!
எனக்கு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த கழகத்தலைவர் தமிழக முதல்வருக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!


தொகுதி முழுவதும் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தீவிரமாக வாக்குகள் சேகரித்து எனது வெற்றிக்கு அடித்தளமிட்ட, தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு - மேம்பாடு - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் அண்ணன் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் - கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் என் பணிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.!





Comments