பா.ஜ. நோட்டாவுடன் தான் போட்டி!மோடியும், அண்ணாமலையும் வசூல்ராஜாக்கள்! ஜோதிமணி, எம்.பி. விலாசல்!
- உறியடி செய்திகள்

- Mar 1, 2024
- 1 min read

பா.ஜ. நோட்டாவுடன் தான் போட்டியிட முடியும், மோடியும் - அண்ணாமலையும் வசூல்ராஜாக்கள்,மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று கரூர் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்.!
தற்போது (2024) ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தொகுதி மாறிப் போட்டியிட போவதாக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரப்புடன் பேசப்பட்டு வந்த நிலையில்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கரூர் எம்.பி, ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது!
பிரதமர் மோடி எத்தனை நதிக்கு சென்று குளித்தாலும் எத்தனை கடலுக்கு சென்று குளித்தாலும் சரி, எத்தனை கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தாலும் சரி, தமிழகத்தில் பாஜ போட்டி போடப்
போவது நோட்டாவுடன் மட்டும் தான்.!

‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மூலம் தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றங்கள் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
அவர் சொல்வது போல் நிச்சயமாக பெரிய மாற்றங்கள் இருக்கும்.!
பாஜ நோட்டாவுடன் போட்டி போட்டு அதைவிட குறைந்த வாக்குகள் பெறும் என்பதும் உறுதி.!
உலக வரலாற்றிலேயே வசூல் செய்வதற்காக நடந்த யாத்திரை என்றால் அது பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடந்த, நடத்திய யாத்திரை தான்.!

தமிழகத்தில் மொத்த வசூல் ராஜாக்களாக பிரதமர் மோடியும், மாநில தலைவர் அண்ணாமலையும் இருக்கின்றனர்.!
நான் சிட்டிங் எம்பி என்பதால் நிச்சயமாக கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்.!
இவ்வாறு அவர் கூறினார்.




Comments