top of page
Search

அதிமுக - பாஜக கள்ள கூட்டணி! நிவாரணம் கேட்டால் பிச்சை என்பதா!ஆணவத்தால் வீழ போகும் பாஜக! முதல்வர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 23, 2024
  • 8 min read
ree

அதிமுக - பாஜக கள்ள கூட்டணி! நிவாரணம் கேட்டால் பிச்சை என்பதா!ஆணவத்தால் வீழ போகும் பாஜக! முதல்வர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி?


தி.மு.கழ­கத் தலை­வர் தமிழ்­நாட்டின் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் , நேற்று மார்ச்22, வெள்ளிக்கிழமை திருச்­சி­ சிறுகனூரில் நடை­பெற்ற ’திருச்சி, பெரம்­ப­லூர்’ மக்­க­ள­வைத் தொகு­தி­க­ளுக்­கான தேர்­தல் பரப்­பு­ரை­யில் கலந்­து­கொண்டு தி.மு.கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:


டெல்லி செங்­கோட்­டையை யார் கைப்­பற்ற வேண்­டும் என்று தீர்­மா­னிக்க இந்த மலைக்­கோட்டை மாந­க­ரில் கடல்­போல் திரண்­டி­ருக்­கும் தமிழ்ச் சொந்­தங்­களே! திருச்சி என்­றாலே திருப்­பு­முனை! இப்­போது இந்­தி­யா­வுக்கே திருப்­பு­முனை ஏற்­ப­டுத்த நாம் திரண்­டி­ருக்­கி­றோம்! பல திருப்­பு­மு­னை­களை தமிழ்­நாட்­டுக்கு கொடுத்து, தமி­ழி­னத்­தின் முன்­னேற்­றத்­துக்­காக தன்­னு­டைய வாழ்­நா­ளெல்­லாம் உழைத்த தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞ­ரின் நூற்­றாண்­டுப் பரி­சாக, ஒரு மகத்­தான வெற்­றியை கொடுப்­ப­தற்­கான துவக்­க­மாக இங்கு திரண்­டி­ருக்­கி­றோம்!

வெற்றி என்­றால் எப்­ப­டிப்­பட்ட வெற்றி? நாற்­ப­துக்கு, நாற்­பது! நாற்­ப­துக்கு, நாற்­பது! நாம் எழு­தப் போகும் புதிய வர­லாற்­றுக்கு முன், தந்தை பெரி­யா­ரை­யும் - பேர­றி­ஞர் அண்­ணா­வை­யும் - முத்தமிழறிஞர் தலை­வர் கலை­ஞ­ரை­யும் வணங்கி, இந்­தப் பய­ணத்­தைத் தொடங்­கு­கி­றேன்.!

ree

மாநா­டு­போல இந்த கூட்­டத்தை ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றார் முதன்­மைச் செய­லா­ளர் கே.என்.நேரு.!

எல்­லா­வற்­றுக்­கும் தொடக்­க­மாக இருப்­பது இந்­தத் திருச்­சி­தான்! திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தேர்­த­லில் நிற்க வேண்­டும் என்று 1956-ஆம் ஆண்டு முடி­வெ­டுக்­கப்­பட்­டது திருச்சி மாநாட்­டில்­தான்! திருச்சி பாதை எப்­போ­துமே வெற்­றிப் பாதை! அதன் அடை­யா­ள­மா­கத்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு ஆறு முறை ஆட்­சிப் பொறுப்பை வழங்­கி­யி­ருக்­கி­றார்­கள் தமிழ்­நாட்டு மக்­கள்!


கழகமுதன்மைச்செயலாளர்நேரு சொன்­ன­து­போல், கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு முன்பு, ‘தமிழ்­நாட்­டின் விடி­ய­லுக்­கான முழக்­கம்’ என்ற எழுச்­சி­மிகு கூட்­டத்தை ஏற்­பாடு செய்து, இங்கு அழைத்து வந்­தார் கே.என்.நேரு. அது­தான் தமிழ்­நாட்­டில் அ.தி.மு.க. ஆட்­சியை வீழ்த்தி கோட்­டை­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் ஆட்­சியை அமர வைத்­தது! உங்­க­ளில் ஒரு­வ­னான இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்பு ஏற்­றுக் கொண்­டேன்.!


அன்று முதல், இந்­தி­யாவே பாராட்­டும் நல்­லாட்­சியை நடத்தி வரு­கி­றோம்.!

பாசிச பா.ஜ.க.வை வீழ்த்தி, இந்­தியா கூட்­ட­ணி­யின் ஆட்­சியை ஒன்­றி­யத்­தில் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக நடப்­ப­து­தான், இந்த நாடா­ளு­மன்­றத் தேர்­தல்!

தேர்­தல் என்­ப­தால் பிர­த­மர், இப்­போது இந்­தி­யா­வில் இருக்­கி­றார்; அத­னால் அடிக்­கடி தமிழ்­நாட்­டுக்கு வரு­கி­றார். இல்லை என்­றால், பெரும்­பா­லும் வெளி­நாட்­டில்­தான் இருப்­பார்.!

ree

சமீ­பத்­தில் சேலத்­தில் உரை­யாற்­றிய பிர­த­மர் மோடி “தமிழ்­நாட்­டில் அவ­ருக்கு செல்­வாக்கு அதி­க­மா­கி­விட்­ட­தால், தி.மு.க.வின­ருக்­குத் தூக்­கம் வர­வில்லை” என்று பேசி­யி­ருக்­கி­றார். உண்­மை­யில், தனது மக்கள் விரோத பாசிச ஆட்சி முடி­ய­போ­கி­றது என்று, பிர­த­மர் மோடிக்­குத்­தான் தூக்­கம் வர­வில்லை!

அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் தோல்வி பயம், அவ­ரின் முகத்­தி­லும் – கண்­ணி­லும் நன்­றா­கத் தெரி­கி­றது!

தமிழ்­நாட்­டுக்கு இத்­தனை முறை வந்­த பிரதமர் மோடியிடம், நான் ஒரே ஒரு கேள்­வி­தான் கேட்­டேன். அதுக்கு ஒரு­மு­றை­யா­வது பதில் சொன்­னாரா? வாரா வாரம் வந்­தா­லும் அவர் பதில் சொல்­ல­வில்லை!


இனி வந்­தா­லும், சொல்­ல­வும் முடி­யாது!

பத்­தாண்டு காலம் ஆட்சி செய்த ஒரு பிர­த­ம­ரால், தமிழ்­நாட்­டுக்­குச் செய்த சிறப்­புத் திட்­டம் என்று ஒன்றே ஒன்­றைக்­கூட சொல்ல முடி­யுமா! இவர் நம்மையும் - கழகத்தையும் விமர்­சிக்­கி­றார்!

இப்­போது நான் சொல்­கி­றேன், நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் மூன்று ஆண்­டு­க­ளாக, மக்­க­ளா­கிய உங்­க­ளுக்­கா­கச் செய்த சாத­னை­க­ளின் பட்­டி­யல் சொல்­லவா! சொன்­னால் இன்­றைக்கு ஒரு நாள் போதாது!

முக்­கி­ய­மான சில திட்­டங்­க­ளு­டைய பயன்­க­ளைப் பற்றி, நான் சொல்­வதை விட, தமிழ்­நாட்டு மக்­கள் என்ன சொல்­கி­றார்­கள் என்று நேற்று ஒரு வீடியோ பார்த்­தேன்.

அதில், ஒரு மக­ளிர் சொல்­கி­றார்: எங்­கள் வீட்­டில், குழந்­தை­க­ளுக்கு உடம்பு சரி­யில்லை என்­றால், காசுக்­காக யாரை­யும் எதிர்­பார்க்க வேண்­டிய தேவை இனி­மேல் இல்லை. எங்­கள் அண்­ணன் ஸ்டாலின் கொடுக்­கும், 1000 ரூபாய் தாய் வீட்­டு­சீர் இருக்­கி­றது! இப்­படி மாதா மாதம், மாநி­லம் முழு­வ­தும் ஒரு கோடியே 15 லட்­சம் குடும்­பங்­கள் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றார்­கள்!

ree

அடுத்­தது, விடி­யல் பய­ணத் திட்­டம் பற்­றிப் பேசு­கி­றார்­கள்! ஸ்டாலின் சார் பேருந்­தில் சென்று, நான்கு மாதம் இல­வ­ச­மாக பய­ணம் செய்து கம்ப்­யூட்­டர் கோர்ஸ் முடித்து, இப்­போது வேலைக்­குச் செல்­கி­றேன் என்று - காஞ்­சி­பு­ரம் மாவட்ட சகோ­தரி ஒரு­வர் மகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார், இது போல், மாநி­லம் முழு­வ­தும் இது­வ­ரை­யில் மக­ளிர் மட்­டும், 445 கோடி முறை பய­ணம் செய்து இருக்­கி­றார்­கள்!

திருப்­பூர் மாணவி ஒரு­வர் பேசு­கி­றார்! ஏழ்­மை­யான சூழ­லில் அர­சுப் பள்­ளி­யில் படித்து கல்­லூ­ரிக்கு வந்த எனக்கு, அப்பா போல், ஸ்டாலின் அய்யா 1000 ரூபாய் தரு­கி­றேன் என்று கூறி­னார்­கள், இப்­படி மாநி­லம் முழு­வ­தும் 4 லட்­சத்து 81 ஆயி­ரத்து 75 மாண­வி­கள் புது­மைப் பெண் திட்­டம் மூல­மாக பய­ன­டை­கி­றார்­கள்!

அடுத்த வீடி­யோ­வில், எப்­போ­தா­வ­து­தான் வீட்­டில் சாப்­பி­டு­வேன்… காலை­யில் அம்மா வேலைக்­குச் சென்று விடு­வார்­கள்.. நான் பள்­ளிக்­குச் சென்­று­வி­டு­வேன்… இப்­போது பள்­ளி­யி­லேயே ஸ்டாலின் தாத்­தா­வி­னு­டைய காலை உணவு திட்­டத்­தில் சாப்­பி­டு­கி­றேன் என்று, தொலைக்­காட்­சி­யில் சிரித்­துக் கொண்டே ஒரு குழந்தை பேட்டி கொடுத்­தது! அது போல் தமிழ்­நாடு முழு­வ­தும் 16 இலட்­சம் குழந்­தை­கள் காலை உண­வுத் திட்­டத்­தில் சாப்­பி­டு­கி­றார்­கள்!


, கொரோனா காலத்­தில் பள்­ளிக்கு செல்­லா­மல் ஏற்­பட்ட இடை­வெ­ளி­யி­னால், பத்து வரைக்­கு­மான எண்­க­ளைக்­கூட மறந்­து­விட்டு இருந்த குழந்­தை­கள், இப்­போது எண்­கள், எழுத்­துக்­களை நன்­றாக வாசிக்­கி­றார்­கள் என்று, தன்­னார்­வ­லர் ஒரு­வர் கூறி­னார்! அதற்­குக் காரா­ண­மான இல்­லம் தேடி கல்­வித் திட்­டத்­தில் இது­வ­ரைக்­கும் 24 இலட்­சத்து 86 ஆயி­ரம் மாண­வர்­கள் பய­ன­டைந்து இருக்­கி­றார்­கள்.!

மற்­றொரு கல்­லூரி படிக்­கும் தம்பி பேசு­கி­றார்! வேலைக்­காக, நாங்­கள் கூடு­தல் படிப்­பு­கள் படிக்க வேண்­டும் என்­றால், பயிற்சி மையங்­க­ளுக்கு அதிக கட்­ட­ணம் செலுத்த வேண்­டும்! ஆனால், இலட்­சங்­க­ளைச் செலுத்­திப் படிக்க வேண்­டிய அந்த படிப்­பு­களை எங்­க­ளுக்கு, நான் முதல்­வன் திட்­டத்­தில் இல­வ­ச­மாக கற்­றுக் கொடுத்­த­தால் வேலை கிடைத்­தி­ருக்­கி­றது என்று அந்­தத் தம்பி கூறி­னார்.

இப்­படி இரண்டு ஆண்­டு­க­ளில், 28 இலட்­சம் இளை­ஞர்­கள் நான் முதல்­வன் திட்­டத்­தில் பலன் அடைந்­தி­ருக்­கி­றார்­கள்!

ree

அடுத்­தது, மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் திட்­டம்! மாற்­றுத் திற­னா­ளி­யான எனக்கு, குறைந்த வரு­மா­னம்­தான்! ஆனால், வீடு தேடி வந்து சுகர் – பி.பி. பரி­சோ­த­னை­கள் எடுத்து, மருந்து மாத்­தி­ரை­கள் கொடுப்­ப­தால் மாதம் ஆயி­ரம் – இரண்­டா­யி­ரம் என்று மிச்­சம் ஆகி­றது என்று சேலத்­தைச் சேர்ந்த சகோ­த­ரர் கூறி­யது போல், தமிழ்­நாடு முழு­வ­தும் இந்த திட்­டத்­தில் ஒரு கோடி பேர் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள்.

கடை­சி­யாக, கும்­பக்­கோ­ணத்­தைச் சேர்ந்த ஒரு­வர் கூறு­கி­றார்! மக்­க­ளு­டன் முதல்­வர் திட்­டத்­தி­னால், 35 ஆண்­டு­க­ளாக முடி­யாத பட்டா மாற்­றம், மூன்றே நாட்­க­ளில் முடிந்­து­விட்­டது என்று நன்றி தெரி­வித்­தார்! இப்­படி தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற, அனைத்­துக் குடும்­பத்­திற்­கும் பார்த்து பார்த்து அவர்­க­ளின் குடும்­பத்­தில் ஒரு­வ­னாக பல திட்­டங்­க­ளைத் தீட்டி தரு­ப­வன்­தான், இன்று உங்­கள் முன்­னால் கம்­பீ­ர­மாக நின்று கொண்­டி­ருக்­கும் இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்!

மாநி­லத்தை ஆளும் நாங்­கள்­தான், முடி­யாத நிதி நெருக்­க­டி­யி­லும், இவ்­வ­ளவு செய்­தி­ருக்­கி­றோமே, நீங்­கள் என்ன என்ன சிறப்­புத் திட்­டங்­களை தமிழ்­நாட்­டிற்கு செய்­தி­ருக்­கி­றீர்­கள் என்று பிர­த­ம­ரி­டம் கேட்­டால் - சென்னை – தூத்­துக்­குடி வெள்­ளப் பாதிப்­புக்கு ஏன் நிதி தர­வில்லை என்று பிர­த­ம­ரி­டம் கேட்­டால் – எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னையை ஏன் கட்­ட­வில்லை என்று பிர­த­ம­ரி­டம் கேட்­டால் – புதிய இர­யில்வே திட்­டங்­கள் எங்கே என்று பிர­த­ம­ரி­டம் கேட்­டால் – இங்கு இருக்­கின்ற ஒன்­றிய அரசு பணி­க­ளில் ஏன் தமிழ்­நாட்டு இளை­ஞர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிப்­ப­தில்லை என்று கேட்­டால் – எதற்­கா­வது அவ­ரி­டம் சரி­யான பதில் இருக்­கி­றதா?

அவ­ரு­டைய தோல்­வி­களை மறைக்க, மாநில உரி­மை­க­ளைப் பறிப்­பதை மறைக்க, தமிழ்­மொ­ழி­யைப் புறக்­க­ணித்­ததை மறைக்க, தமிழ்­நாட்டு வளர்ச்­சிக்கு முட்­டுக்­கட்டை போட்­டதை மறைக்க, மொத்­தத்­தில், உண்­மை­யான மக்­கள் பிரச்­சி­னை­களை மறைக்க, தேவை­யில்­லாத விஷ­யங்­களை எல்­லாம் பேசி, திசை­தி­ருப்­பு­கி­றார்!

ree

தேர்­த­லுக்­குத் தேர்­தல் நீங்­கள் நடத்­து­கிற கபட நாட­கங்­களை, இனித் தமிழ்­நாட்டு மக்­கள் மட்­டு­மல்ல; ஒட்­டு­மொத்த இந்­திய மக்­க­ளும்­கூட நம்ப மாட்­டார்­கள்! உங்­களை மன்­னிக்­க­வும் மாட்­டார்­கள்! மாநி­லம் முழு­வ­தும் செய்த திட்­டங்­களை நான் பட்­டி­ய­லிட்­டேன். நலத்­திட்­டங்­கள் மட்­டு­மல்ல, இந்த மாவட்­டங்­க­ளுக்கு என்று செய்த – செய்து கொண்­டி­ருக்­கின்ற – வளர்ச்­சித் திட்­டங்­க­ளை­யும் சொல்­லவா? சில­வற்றை மட்­டும் சொல்­கி­றேன்!

350 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் திருச்­சி­யில் ஒரு மிகப்­பெ­ரிய பேருந்து முனை­யம் மற்­றும் கன­ரக வாகன சரக்கு மையம் அமைக்­கும் பணி நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.

142 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மணப்­பா­றை­யில் உண­வுப் பூங்கா, நவல்­பட்­டில் தக­வல் தொழில்­நுட்ப மையம், பஞ்­சப்­பூ­ரில் 410 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மினி டைடல் பார்க், 110 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் திருச்­சி­யில் மகாத்மா காந்தி நினைவு அர­சி­னர் மருத்­து­வ­ம­னைக்­குப் புதிய கட்­ட­டங்­கள் ஆகிய பணி­கள் வேக­மாக நடைப்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.!

இன்­னும் பல திட்­டங்­கள் குறிப்­பாக, திருச்­சி­யில் இளை­ஞர்­க­ளுக்­காக உல­கத்­த­ரத்­தில் ஒரு ஒலிம்­பிக் அகா­டமி, புதுக்­கோட்­டை­யில் புதிய பேருந்து நிலை­யம், 40 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கரூர் பேருந்து நிலை­யக் கட்­டு­மா­னப் பணி­கள் - என்று பட்­டி­யல் நீள­மாக இருக்­கி­றது!

, இங்கு நம்­மு­டைய வேட்­பா­ளர் தம்பி துரை வைகோ சொன்­ன­து­போல, நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட தேர்­தல் அறிக்கை பற்­றி­யும் கூற­வேண்­டும். அதி­லும் சில­வற்றை தலைப்பு செய்­தி­க­ளாக சொல்­கி­றேன். கடந்த பத்­தாண்­டு­க­ளாக பா.ஜ.க. அரசு இஷ்­டத்­திற்கு ஏற்­றிய பெட்­ரோல், டீசல் மற்­றும் சமை­யல் சிலிண்­டர் விலை குறைக்­கப்­ப­டும். தமிழ்­நாட்டு ஏழை-­எ­ளிய மாண­வர்­க­ளின் உயிரை பழி­வாங்­கும் நீட் தேர்வு ஒழிக்­கப்­ப­டும். மாநி­லங்­க­ளு­டைய உயிர்­மூச்­சாக இருக்­கின்ற நிதி உரி­மைக்கு வேட்டு வைக்­கும், தற்­போ­தைய ஜி.எஸ்.டி முறை சீர்­தி­ருத்­தம் செய்­யப்­ப­டும். சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ரான சட்­டங்­கள் ரத்து செய்­யப்­ப­டும். ஒரே நாடு - ஒரே தேர்­தல் என்ற பேரில் ஜன­நா­ய­கத்­துக்­குச் சவக்­குழி தோண்­டும் முயற்சி நிறுத்­தப்­ப­டும். உல­கப் பொது­ம­றை­யான திருக்­கு­றள், தேசிய நூலாக அறி­விக்­கப்­ப­டும். ஒன்­றிய அர­சுப் பணித் தேர்­வு­கள், ஒன்­றிய அலு­வ­ல­கங்­க­ளில் தமிழ் மொழி­யில் பயின்ற நமது இளை­ஞர்­க­ளுக்கு இடம் உறு­தி­செய்­யப்­ப­டும். அது­மட்­டு­மல்ல, இந்த பகுதி மக்­க­ளுக்­காக பொன்­மலை இர­யில்வே பணி­ம­னையை இர­யில் பெட்­டித் தொழிற்­சா­லை­யாக மாற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். ஆத்­தூர் இர­யில் நிலை­யம் முதல் பெரம்­ப­லூர், அரி­ய­லூர் ரயில் நிலை­யம் வரை, புதிய அகல இர­யில் பாதை அமைக்க ஆவன செய்­யப்­ப­டும்.!

ree

மக்­கள் நலத் திட்­டங்­களை

பார்த்­துப் பார்த்து செயல்­ப­டுத்­து­கி­றோம்!

தம்பி மகேஷ் அடிக்­கடி கோரிக்கை வைக்­கும், தேசிய நெடுஞ்­சா­லை­யில் பால்­பண்ணை முதல் துவாக்­குடி வரை உயர்­மட்­டச் சாலை அமைக்­கப்­ப­டும். அது­மட்­டு­மல்ல, தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லாத ஒன்­றை­யும் இங்கு வாக்­கு­று­தி­யாக கொடுக்க விரும்­பு­கி­றேன். அந்த உயர்­மட்­டச் சாலை அமைக்­கப்­ப­டு­வ­தோடு அணுகு சாலை­யும் அமைக்­கப்­ப­டும். இப்­படி, மக்­க­ளுக்­கான திட்­டங்­களை சிந்­தித்து செயல்­ப­டுத்த பாடு­ப­டு­ப­வர்­கள்­தான் நாம்!

ஆனால், தமிழ்­நாட்­டில் சொல்­வ­தற்­கென்று, எது­வுமே இல்­லாத ஆட்­சியை நடத்­தி­ய­வர்­தான் பிர­த­மர் நரேந்­திர மோடி! அவ­ரால் சாத­னை­களை சொல்ல முடி­ய­வில்லை! மேடைக்கு மேடை என்ன சொல்­கி­றார்! பத்­தாண்டு நான் ஊழ­லற்ற அர­சாங்­கத்தை நடத்­தி­னேன் என்று சொல்­கி­றார்! பா.ஜ.க. ஆட்­சி­யில் நடந்த ஊழல்­கள் பற்றி, நாம் மட்­டு­மல்ல நாடு முழு­வ­தும் கேள்வி கேட்­டா­லும் அவ­ரால் பதில் சொல்ல முடி­ய­வில்லை!

இந்­தப் பத்­தாண்டு ஆட்­சி­யில், ஊழல்­கள் ஒன்றா - இரண்டா! அதற்கு, இமா­லய எடுத்­துக்­காட்­டு­தான் இந்­திய ஜன­நா­ய­கத்­திற்கே அழிக்க முடி­யாத அவ­மா­னத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும் தேர்­தல் பத்­திர ஊழல்! கடந்த 5 ஆண்­டு­க­ளில் இடி.ஐ.டி.சி.பி.ஐ. (ED – I.T – C.B.I –) இப்­ப­டிப்­பட்ட ஒன்­றிய அர­சின் அமைப்­பு­களை பா.ஜ.க.வின் கைப்­பா­வை­யா­கப் பயன்­ப­டுத்தி, அவர்­களை ரெய்­டிற்கு அனுப்­பு­வது, பிறகு பா.ஜ.க.வுக்கு நிதி­யா­கத் தேர்­தல் பத்­தி­ரங்­களை வாங்­கு­வது என்று, 8 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்­தி­ருக்­கி­றார்­கள்.

வர­லாற்­றி­லேயே இப்­படி ஒரு வசூல் நடந்­த­தில்லை!


அது­மட்­டுமா, சி.ஏ.ஜி அறிக்­கை­யில் வந்­ததே! பாரத்­மாலா திட்ட ஊழல், துவா­ரகா விரை­வுப் பாதைக் கட்­டு­மா­னத் திட்ட ஊழல், சுங்­கச்­சா­வடி கட்­டண ஊழல், ஆயுஷ்­மான் பாரத் திட்ட ஊழல், ஓய்­வூ­தி­யத் திட்ட ஊழல், எச்.ஏ.எல். விமான வடி­வ­மைப்­புத் திட்ட ஊழல் என்று 7 இலட்­சம் கோடி ரூபாய்க்கு முறை­கேடு நடந்­தி­ருப்­ப­தாக சி.ஏ.ஜி. அறிக்கை வெளி­யிட்­டி­ருக்­கி­றது!

அந்த அறிக்கை மேல் தக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய ஒன்­றிய அரசு, அது பற்றி வாய் திறக்­க­வில்லை! தேர்­தல் பத்­தி­ரம் போலவே மற்­றொரு நிதி­யும் வசூல் செய்­தி­ருக்­கி­றார்! அது­வும் ‘பி.எம். கேர்ஸ் ஃபண்ட்’ என்று பேர் வைத்து வசூல் செய்­தி­ருக்­கி­றார்! அது பற்­றிய அத்­தனை இர­க­சி­யங்­க­ளும் ஜூன் மாதம் இந்­தியா கூட்­டணி ஆட்­சிக்கு வந்­த­தும், அம்­ப­ல­மா­கும்!

அதே­போல், ரஃபேல் ஊழல் ரக­சி­ய­மும் நிச்­ச­ய­மாக வெளியே வரும்! இப்­ப­டிப்­பட்ட ஊழல் ஆட்­சியை நடத்­திய பிர­த­மர் மோடி ஊழ­லைப் பற்றி பேச­லாமா? பா.ஜ.க. ஊழல்­களை மறைக்க, நேற்று டெல்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வா­லைக் கைது செய்­தி­ருக்­கி­றார்­கள். என்ன கார­ணம்? பா.ஜ.க.வின் தோல்வி பயம்­தான் ஒரே கார­ணம்!

டெல்லி துணை முத­ல­மைச்­சர் மணீஷ் சிசோ­டி­யா­வைக் கைது செய்து, 13 மாதங்­க­ளா­கச் சிறை­யில் இருக்­கி­றார். சென்ற மாதம் ஜார்க்­கண்ட்முத­ல­மைச்­சர் ஹேமந்த் சோரன் கைது செய்­யப்­ப­டு­கி­றார். இப்­போது அர­விந்த் கெஜ்­ரி­வால்! அப்­பட்­ட­மான பழி­வாங்­கும் நட­வ­டிக்கை இல்­லையா இது?

தனக்கு எதி­ராக ‘இந்­தியா’ என்ற வலி­மை­யான கூட்­ட­ணியை எதிர்க்­கட்­சி­கள் அமைத்து விட்­டார்­களே - மக்­கள் பா.ஜ.க.வுக்கு எதி­ராக ஒன்று திரள ஆரம்­பித்­து­விட்­டார்­களே என்ற பயத்­தில், தவ­று­க­ளுக்கு மேல் தவ­று­களை செய்­து­கொண்டு வரு­கி­றது, பா.ஜ.க. தலைமை!


தமிழ்­நாட்­டில் நம்­மு­டைய ஆட்­சிக்கு தொந்­த­ரவு கொடுக்க, ஆளு­நரை வைத்து மிரட்­டிப் பார்க்­கி­றார்­கள்.

இந்த நிகழ்ச்­சிக்­குப் புறப்­ப­டு­வ­தற்கு முன்­பாக, நம்­மு­டைய அமைச்­சர் பொன்­மு­டி­யின் பத­விப் பிர­மாண நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்­டு­விட்டு நான் வந்­தி­ருக்­கி­றேன்.

ஆளு­நர் அவ­ரா­கச் செய்­தாரா! முடி­யாது என்று சொல்­லி­விட்­டார். நாங்­கள் விடு­வோமா… தி.மு.க.காரர்­கள் நாங்­கள். நீதி­மன்­றத்­திற்­குச் சென்­றோம். உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வாதம் நடந்­தது. எப்­ப­டிப்­பட்ட கண்­ட­னத்தை ஆளு­ந­ருக்கு தெரி­வித்­தி­ருக்­கி­றார் தலைமை நீதி­பதி! அதற்­குப் பிறகு, இன்­றைக்கு மாலை 3.30 மணிக்கு அழைப்பு வந்­தது. அந்த அழைப்பை ஏற்­றுக்­கொண்டு நாங்­கள் நேர­டி­யா­கச் சென்று ராஜ்­ப­வ­னில் பத­விப் பிர­மா­ணத்தை முடித்­து­விட்டு, ஒரு மரி­யா­தைக்கு ஆளு­ந­ரி­டம் பூங்­கொத்­தைக் கொடுத்­து­விட்டு, புறப்­ப­டும்­போது கூறி­னேன். இன்­றைக்­குத்­தான் நான் தேர்­தல் வேலை­யைத் தொடங்­கு­கி­றேன். தேர்­தல் பிரச்­சா­ரத்தை முதன்­மு­த­லாக ராஜ்­ப­வ­னி­லி­ருந்து தொடங்­கு­கி­றேன் என்று கூறி­னேன். அவர் உடனே, (”BEST OF LUCK” ) பெஸ்ட் ஆப் லக் என்று சொல்லி அனுப்­பி­னார்.

ராஜ்­ப­வ­னி­லி­ருந்து தொடங்­கி­யி­ருக்­கின்ற இந்­தப் பய­ணம் குடி­ய­ர­சுத்­த­லை­வர் மாளிகை வரைக்­கும் செல்­லப்­போ­கி­றது என்­பதன் ஒரு அடை­யா­ளம் இது.

மக்­க­ளுக்­கான சட்­டங்­களை நிறை­வேற்­றி­னால், அதற்கு ஆளு­நர் ஒப்­பு­தல் தரா­மல் நிறுத்­து­வார். நாம் ஒவ்­வொரு முறை­யும் உச்­ச­நீ­தி­மன்­றத்­திற்­குச் செல்ல வேண்­டும்.

நேற்­றும், இன்­றைக்­கும் போல், வர­லாற்­றில் வேறு எந்த ஆளு­ந­ரை­யா­வது நீதி­மன்­றம் இப்­படி கடு­மை­யான கேள்­வி­கள் கேட்­டி­ருக்­கி­றதா? அப்­ப­டிப்­பட்ட கேள்­வி­களை உச்­ச­நீ­தி­மன்­றம் கேட்­டி­ருக்­கி­றது. மக்­களை எதிர்­கொள்ள பயப்­ப­டும் பா.ஜ.க. அம­லாக்­கத்­துறை, சி.பி.ஐ., வரு­மான வரித்­துறை போன்ற புல­னாய்வு அமைப்­பு­கள் மூல­மா­க­வும், ஆளு­நர்­கள் மூல­மா­க­வும் எதிர்­கொள்­வது கோழைத்­த­னம!

உங்­க­ளின் இந்த மிரட்­டல் உருட்­டல் அர­சி­யலை மக்­கள் கவ­னித்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள். இது இந்­தியா கூட்­ட­ணிக்­கும் பாஜ­க­வுக்­கு­மான யுத்­தம் அல்ல. இது இந்­திய நாட்டு மக்­க­ளுக்­கும் - பாசிச பா.ஜ.க.வுக்­கு­மான யுத்­தம்! இந்த யுத்­தத்­தில் மக்­கள்­தான் வெற்றி பெறு­வார்­கள். பாசிச பா.ஜ.க. வேரோ­டும் - வேரடி மண்­ணோ­டும் வீழ்த்­தப்­ப­டும்.

இந்­திய மக்­கள் இப்­போது இந்­தியா கூட்­ட­ணி­யின் பக்­கம் அணி திரண்­டு­விட்­டார்­கள்! பிர­த­மர் அவர்­களே! இந்­தியா கூட்­டணி மாபெ­ரும் வெற்றி! என்று ஜூன் 4-ஆம் தேதி வர­வி­ருக்­கும் செய்தி உங்­கள் தூக்­கத்­தைத்­தான் தொலைக்­கப் போகி­றது!

நான் கேட்­பது, தமிழ் மீதும் - தமிழ்­நாட்­டின் மீதும் - தமி­ழர்­க­ளின் மீதும் உங்­க­ளுக்கு ஏன் இவ்­வ­ளவு வெறுப்பு? தமிழ்­நாட்­டுக்கு விரோ­த­மாக எல்­லா­வற்­றை­யும் செய்­து­விட்டு, தமிழ்­தான் மூத்­த­மொழி என்று பிர­த­மர் மோடி நீலிக்­கண்­ணீர் வடிக்­க­லாமா? சமஸ்­கி­ருத வளர்ச்­சிக்கு நீங்க கொடுத்த நிதி எவ்­வ­ளவு? தமிழ் வளர்ச்­சிக்­குக் கொடுத்த நிதி எவ்­வ­ளவு? இதை கூச்­ச­மில்­லா­மல் தமிழ்­நாட்­டுக்கு வந்து கூறு­வாரா அவர்?

நீங்­கள் வளர்க்­கின்ற வெறுப்­புத் தீ என்ன செய்­கி­றது என்றுதெரி­யுமா? ஒன்­றிய பா.ஜ.க. அமைச்­சர் ஒரு­வர், பெங்­க­ளூ­ரில் வெடித்த குண்டு தமி­ழர்­கள் வைத்த குண்டு என்று சொல்­கி­றார். தமி­ழர்­களை வன்­மு­றை­யா­ளர்­க­ளாக – பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­த­ரிக்­கப் பார்க்­கி­றது பா.ஜ.க.

தமிழ்­நாட்டு மக்­களை எப்­ப­டி­யெல்­லாம் கொச்­சைப்­ப­டுத்தி பேச­லாம் என்­ப­தில்­தான்,பா.ஜ.க.வை சேர்ந்­த­வர்­க­ளின் எண்­ணம் முழு­வ­தும் இருக்­கி­றது. பா.ஜ.க. மக்­க­ளி­ட­மி­ருந்து சுரண்­டுமே தவிர, மக்­க­ளுக்கு எது­வுமே தராது! அத­னால்­தான், மக்­கள் இயற்கை பேரி­ட­ரில் பாதிக்­கப்­ப­டும்­போது, நம்­மு­டைய நிதி­யில் இருந்தே நாம் தரு­கி­றோம். அதை­யும் மனச்­சாட்­சியே இல்­லா­மல் கொச்­சைப்­ப­டுத்தி, அதில் ஆனந்­தம் அடை­வது என்ன மாதி­ரி­யான அர­சி­யல்?

தமிழ்­நாட்­டி­லி­ருந்து ஏரா­ள­மான நிதியை வரி­யாக வசூல் செய்­கி­றீர்­கள்! அதி­லி­ருந்து நியா­ய­மான பங்கை ஏன் திருப்­பிக் கொடுப்­ப­தில்லை என்­று­தானே கேட்­கி­றோம்! ஒரு ரூபாய் வசூல் செய்­து­விட்டு, 29 பைசா மட்­டும் திருப்பி கொடுப்­பது நியா­யமா? முறையா? தரு­மமா? என்று கேட்­கி­றோம்!

ree

இதைக் கேட்­டால், சில நாட்­க­ளுக்கு முன்­னால் ஒன்­றிய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் ஆண­வ­மா­கச் சொல்­கி­றார்! மக்­க­ளுக்கு நிவா­ர­ணம் வழங்­கு­வது பிச்­சை­யாம்! எவ்­வ­ளவு ஆண­வம்!

எவ்­வ­ளவு வாய்க் கொழுப்பு! நிர்­மலா சீதா­ரா­மன் அவர்­களே… உங்­கள் அர­சி­ய­லுக்­காக தமிழ்­நாட்டு மக்­களை கொச்­சைப்­ப­டுத்­து­வீர்­களா? பாதிக்­கப்­பட்ட மக்­களை அவ­மா­னப்­ப­டுத்­து­வீர்­களா? மக்­க­ளுக்­குக் கொடுப்­பது எது­வுமே பிச்சை அல்ல; அது அவர்­க­ளின் உரிமை!

மக்­கள் பாதிக்­கப்­ப­டு­கி­ற­போது அவர்­க­ளுக்கு உதவி செய்ய வேண்­டி­யது, அர­சி­ய­லில் இருக்­கும் நம்­மு­டைய கடமை! அந்­தக் கட­மை­யைத்­தான் தி.மு.க. அரசு சரி­யாக செய்­து­கொண்டு இருக்­கி­றது. கார்ப்­ப­ரேட் கம்­பெ­னி­க­ளுக்கு பல்­லா­யி­ரம் கோடி தள்­ளு­படி செய்­கி­றீர்­களே… தொழி­ல­தி­பர்­கள் கூட்­டத்­தில் சென்று இப்­படி பேசு­வீர்­களா?

மக்­க­ளுக்கு உத­வ­மு­டி­யா­த­வ­ருக்கு

நிதி­ய­மைச்­சர் பதவி எதற்கு!

ஏழை­கள் என்­றால் அவ்­வ­ளவு இளக்­கா­ரமா? ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்­கி­னால்­கூட வரி கட்­டு­கி­றார்­களே மக்­கள்… அவர்­கள் பாதிக்­கப்­ப­டும்­போது அர­சாங்­கம் உதவ வேண்­டும் என்று எதிர்­பார்ப்­பது தவறா? மக்­க­ளுக்கு உதவ முடி­ய­வில்லை என்­றால் எதற்கு நிதி அமைச்­சர் பதவி?

பா.ஜ.க.வில் இருக்­கின்ற ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் சொல்­கி­றேன்… உங்­க­ளு­டைய இந்த ஆண­வம்­தான் பா.ஜ.க.வை வீழ்த்­தப் போகி­றது! இப்­ப­டிப்­பட்ட எதேச்­சா­தி­கார - சர்­வா­தி­கார பா.ஜ.க.வைத் தமிழ்­நாட்­டில் இருக்­கிற பழ­னி­சாமி கண்­டிக்­கி­றாரா? நம்­மைப் போல் விமர்­ச­னம் செய்­கி­றாரா? எங்­கா­வது கண்­டித்து அறிக்கை விடு­கி­றாரா?

குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­து­விட்டு சிறு­பான்­மை­யி­னர் நலன் பேசு­கி­றார் பழ­னி­சாமி! அவ­ரின் இருண்ட கால ஆட்­சியை நீங்­கள் எல்­லாம் மறந்­து­விட்டு இருப்­பீர்­கள் என்று தப்­புக்­க­ணக்கு போடு­கி­றார் பழ­னி­சாமி!


தூத்­துக்­குடி துப்­பாக்­கிச் சூடு - கொட­நாடு கொலை– கொள்ளை, தற்­கொலை – மர்ம மர­ணங்­கள் - பொள்­ளாச்சி பாலி­யல் வன்­முறை என்று பழ­னி­சாமி ஆட்­சி­யின் அவ­லங்­கள் என்று நீண்ட பட்­டி­யலே போட­லாம்! ஊழல் கறை படிந்த அவ­ரின் கரங்­களை காப்­பாற்­றிக் கொள்ள பா.ஜ.க.வுடன் கூட்­டணி வைத்து, பா.ஜ.க.விற்கு பாதம்­தாங்­கி­யாக இருந்து, பா.ஜ.க. தமிழ்­நாட்­டுக்­குச் செய்த அத்­தனை துரோ­கங்­க­ளுக்­கும் துணை நின்று, அதற்கு லாலி பாடி­ய­வர் தான்பழ­னி­சாமி!

இப்­போது அதே பா.ஜ.க.வின் கதை – திரைக்­கதை – வச­னம் – டைரக்‌ஷ­னில் கள்­ளக்­கூட்­டணி நாட­கத்தை நடத்­திக்­கொண்டு இருக்­கி­றார். பழ­னி­சாமி நடத்­தும் நாட­கம் விரை­வில் முடி­வுக்கு வரும்! பா.ஜ.க.வின் பாசிச எண்­ணங்­க­ளுக்­கும் முடி­வுரை எழு­தப்­ப­டும்!

இதெல்­லாம் நடப்­ப­தற்கு, நம்­மு­டைய இந்­தியா கூட்­டணி ஒன்­றி­யத்­தில் ஆட்சி அமைக்க வேண்­டும்! அப்­போ­து­தான், நம்­மு­டைய இந்­திய நாட்­டை­யும் – இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தை­யும் - நாட்­டின் பன்­மு­கத் தன்­மை­யை­யும் – சகோ­த­ரத்­து­வத்­தை­யும் - காப்­பாற்ற முடி­யும்!

இந்­தி­யா­விற்கு ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்தை உரு­வாக்­கக் காத்­தி­ருக்­கும் இந்­தியா கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளிப்­பீர் என்று உங்­க­ளில் ஒரு­வ­னாக - உங்­க­ளுக்­கா­கவே உழைத்த தலை­வர் கலை­ஞ­ரின் மக­னா­கக் கேட்­டுக் கொள்­கி­றேன். திருச்சி மற்­றும் பெரம்­ப­லூர் நாடா­ளு­மன்­றத் தொகு­தி­க­ளுக்­கான வேட்­பா­ளர்­களை அறி­மு­கம் செய்ய விரும்­பு­கி­றேன்…

இதோ… திருச்சி நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யின் வேட்­பா­ள­ராக, ஈழத் தமி­ழர்­க­ளுக்­கா­கச் சிறை பல கண்ட, திரா­விட இயக்­கத்­தின் போர்­வாள், அண்­ணன் வின் மகன் துரை வைகோ -வையும் - பெரம்­ப­லூர் நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யின் வேட்­பா­ள­ராக, திருச்­சி­யைத் தீரர்­க­ளின் கோட்­டை­யாக உரு­வாக்­கிய உழைப்­பின் அடை­யா­ளம் என் ஆரு­யிர் சகோ­த­ரர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு வையும் – உங்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைக்­கி­றேன்.!

ree

அவர்­க­ளுக்­குப் பெரு­வா­ரி­யான வாக்­கு­களை அளித்து, உங்­க­ளு­டைய குர­லாக – உங்­க­ளு­டைய பிர­தி­நி­தி­க­ளாக - இந்த இரண்டு இளம் சிங்­கங்­க­ளை­யும், நாடா­ளு­மன்­றத்­திற்கு அனுப்பி வைக்க வேண்­டிய ஜன­நா­ய­கக் கடமை உங்­க­ளுக்கு இருக்­கி­றது.!

இந்­தி­யா­வைக் காக்­கும் வெற்­றிப் பய­ணத்தை திருச்­சி­யில் இருந்து தொடங்­கு­கி­றேன். புதிய ஆட்­சியை ஒன்­றி­யத்­தில் அமைப்­போம்! ஒளி­ம­ய­மான இந்­தி­யாவை உரு­வாக்­கு­வோம்! ஏப்­ரல் 19-ஆம் நாள் நீங்­கள் அளிக்­கின்ற வாக்கு புதிய இந்­தி­யாவை உரு­வாக்­கும் வாக்­காக அமை­யட்­டும். திருச்­சி­யில் வெற்றி வர­லாறு துவங்­கட்­டும்! இவ்­வாறு தி.மு.கழகத்தலை­வர் தமிழ்நாட்டின் முதல்­வர் மு.க. மு.க.ஸ்டாலின் பேசினார்னார்.


அமைச்சர்கள் முதன்மைச்செயலாளர், கே.என்.நேரு, இளைஞரணி செயலாளர்.உதயநிதிஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற தி.மு.கழக கூட்டணி வேட்பாளர் ஆ.ராசா, மாநிலங்கவை உறுப்பினர் திருச்சி சிவா,

அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்அன்பில் மகேஷ்பொய்யாமொழி, ரகுபதி மாவட்ட செயலாளர்கள், காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, திருச்சி மாநகர தி.மு கழகச்செயலாளர், மேயர் மு. அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.!


தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டலின் பரப்புரை பயணம் மூலம் வரும் ஏப்.,17 ம் தேதி வரையில் 40 தொகுதிகளிலும் மக்களை நேரில் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். என்பது குறிப்பிடதக்கது.!


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page