top of page
Search

பாஜக - அதிமுக ஜனநாயக விரோத போக்கு! தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 12, 2024
  • 1 min read
ree

பன்முகத்தன்மை, பல்வேறு காலாச்சாரங்கள், மொழி, சார்ந்து, ஒற்றுமையுடன் இந்திய ஒன்றியத்தின் ஒரே குடையின் கீழ், தேச பற்றுடன், அனைத்துத்தரப்பு மக்களும், தொப்புள்கொடி உறவுகளாய், சகோதர ஒற்றுமையுடன், வாழும் இந்திய ஒன்றியத்தில், இது நாள் வரை சனாதான போக்கு, மத, , பிரிவினை தூண்டும் வகையில் பிளவை ஏற்படுத்தி, மக்களை பிரித்தா ளும் சூழ்ச்சிகள் மூலம்,, தேர்­த­லில் தனது அனைத்து அஸ்­தி­ரங்­க­ளும் எடு­ப­டா­மல் போன நிலை­யில், குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டத்தை அமல்­ப­டுத்­து­வ­தன் மூல­மா­கக் கரை­யேற முயற்­சிக்­கி­றார் பிர­த­மர் மோடி.!


தேர்­தல் நேரத்­தில் மக்­க­ளின் உணர்ச்­சி­க­ளைச் சீண்டி உள்நோக்கத்தோடுஅர­சி­யல் ஆதா­யம் அடை­யப் பார்க்­கி­றார் பிர­த­மர்.!

ree

அமை­தி­மிகு இந்­தி­யா­வில் பிள­வு­மிகுந்த, மதம் சாயம் பூசும் சட்­டத்­தைக் கொண்­டு­வந்த பா.ஜ.க. வையும், அந்­தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்­கள் மன்­னிக்க மாட்­டார்­கள்!


இந்த நாடாளுமன்ற தேர்தலில்,தக்க பாடம் புகட்­டு­வார்கள்!’’ என்று, கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.!


தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது.!

ree

‘குடி­யு­ரிமை’ என்ற மனி­த­நே­யக் கொள்­கையை மதம் - இனத்­தால் வேறு­ப­டுத்­தும் பிள­வு­வா­தக் கொள்­கை­யாக மாற்­றி­யது ஒன்­றிய பா.ஜ.க. அரசு. இசு­லா­மிய மதத்­த­வ­ரை­யும், இலங்­கைத் தமி­ழ­ரை­யும் வஞ்­சிக்­கும் குடி­யு­ரிமை திருத்­தச் சட்­ட­ம­சோ­தாவை இயற்­றி­யது ஒன்­றிய பா.ஜ.க அரசு.

அதனை தி.மு.க. உள்­ளிட்ட ஜன­நா­ய­கச் சக்­தி­கள் கடு­மை­யாக நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்த்­தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம்­தாங்­கி­யான அ.தி.மு.க. ஆத­ரித்து வாக்­க­ளித்­த­தால்­தான் அச்­சட்­டம் நிறை­வே­றி­யது.!


மக்­கள் எதிர்ப்பு கார­ண­மாக அந்­தச் சட்­டத்தை இது­நாள் வரை­யில் அமல்­ப­டுத்­தா­மல் வைத்­தி­ருந்­தது பா.ஜ.க.

தி. மு. கழக அரசு ஆட்­சிப் பொறுப்­பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்­டம்­பர் 8-ஆம் நாள், இந்­திய நாட்­டின் ஒற்­று­மை­யை­யும், மத நல்­லி­ணக்­கத்­தை­யும் போற்­றிப் பாது­காக்­க­வும், அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள மதச்­சார்­பின்­மைக் கோட்­பாட்­டினை நிலை­நி­றுத்­த­வும், இந்­திய குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டம் - 2019-ஐ, இரத்து செய்­திட ஒன்­றிய அரசை வலி­யு­றுத்தி, தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் அர­சி­னர் தனித் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றினோம்.!

ree

இப்­போது, தேர்­த­லில் தனது அனைத்துஅஸ்­தி­ரங்­க­ளும் எடு­ப­டா­மல் போன நிலை­யில் குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டத்தை அமல்­ப­டுத்­து­வ­தன் மூல­மா­கக் கரை­யேற முயற்­சிக்­கி­றார் பிர­த­மர் மோடி. தேர்­தல் நேரத்­தில் மக்­க­ளின் உணர்ச்­சி­க­ளைச் சீண்டி அர­சி­யல் ஆதா­யம் அடை­யப் பார்க்­கி­றார் பிர­த­மர்.!


அமை­தி­மிகு இந்­தி­யா­வில் பிள­வு­மிகு சட்­டத்­தைக் கொண்டு வந்த பா.ஜ.க. வையும், அந்­தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்­கள் மன்­னிக்க மாட்­டார்­கள்! தக்க பாடம் புகட்­டு­வார்­கள்!


இவ்­வாறாக சமூக வலை­த­ளப் பதி­வில் முதல்­வர் மு.க.ஸ்டாலின் குறிப்­பிட்­டுள்ளார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page