பாஜக ஒரு பொருட்டே இல்லை ஜெயகுமார்! அணைய போகும் விளக்கு அதிமுக அண்ணாமலை! அதிமுக ஊழல் பட்டியல் வெளிவருமோ?
- உறியடி செய்திகள்

- Feb 7, 2024
- 1 min read

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என்று கடந்த ஆண்டு அண்ணாமலை கூறியிருந்தார்.!
இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.!
இதையடுத்து திமுகவினரின் பட்டியல் என்கிற பெயரில் விமர்சனத்திற்குள்ள பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பட்டியலை வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார். என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வரப்படுகின்றது.!

இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றின் கேள்விக்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஒரே நபர் அனைத்து வேலைகளையும் செய்ய முடியாது என மழுப்பலாக கூறியுள்ளார்.!
அதிமுக உடனான கூட்டணி முறிவுக்கு பிறகு அக்கட்சியை சேர்ந்தவர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்து வந்த அண்ணாமலை, திடீரென அதிலிருந்தும் பின்வாங்கினார்.!
இதேபோன்று தி.மு.க.வின் எதிர்வினையை சமாளிக்க முடியாமல் முதல் பட்டியலை செய்திக்காக மட்டுமே வெளியிட்டதாக அவர் கூறியுள்ளாதாக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில்
. 2வது பட்டியல் குறித்து புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்த அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவே 3வது பட்டியலை வெளியிட்டதாக புது விளக்கமும் கொடுத்தார்.!

இந்நிலையில்
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ராணிப்பேட்டையில் நடைபயணம் மேற்கொண்ட போது நிருபர்களிடம் கூறியபோது!
அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது போல் ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டுமென பாஜ கூறுகிறது.
கள்ளக்குறிச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், பா.ஜ.க.வை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. முதலில் நோட்டாவை ஜெயிக்கட்டும் என்று கூறியுள்ளார்.!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்று சொல்வார்கள். அதிமுக நிலையும் அதுதான். இரண்டும் ஒன்று தான்.
என்று அண்ணாமலை எதிர்வினையாக கூறியுள்ளார்.!
கடந்த சில தினங்களுக்கு முன்னர், தனது வழக்கமான பாணியில் பத்திரிக்கையாளர்களை அவதூறு பரப்பும் வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டு வருவதாக அண்ணாமலை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர்கோட்டம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றதும், இங்கு நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.!

எல்லாம் சரி அதிமுக மாஜிக்கள் பற்றிய ஊழல் பட்டியல் எப்போது அண்ணாமலை சார் வெளியிடுவீர்கள். ஏன் இந்த மவுனம்.!
என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை!




Comments