top of page
Search

தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்! முக்கிய முடிவுகள்! அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 13, 2024
  • 2 min read
ree

தோகமலை

ச.ராஜா மரியதிரவியம் .....


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய தொழில்வளர்ச்சி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.!

ree

தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. . அமைச்சரவை இன்றைய கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.!

முதல்வரின் வெளிநாடு பயணத்தின் போது தொழில் முதலீடுகளை அதிகமாக ஈர்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தொழிற்துறை மேற்கொண்டு வருகிறது.!

ree

மேலும், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையையும் இந்த பயணத்தின் போது முதலமைச்சர் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரிகள், பிற தொழில் நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருப்பதாகவும் தெரிகிறது.

. என்னென்ன முதலீடுகள் தற்போது தமிழகத்திற்கு வர இருக்கின்றன உள்ளிட்டவைகள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.!


மேலும், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஆக.27-ல் -முதலமைச்சர் அமெரிக்கா செல்கிறார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்த நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது!

ree

அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு, விருதுநகர் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது!

ree

கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதியார் தலைமையில் நடந்த கூட்டத்தில் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.!


ரூ.44,125 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 24700 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. வாகன தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் புதுப்பிக்கதக்க எரிசக்தி, பேட்டரி தயாரிப்பு ஆகிய தொழில்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.!

ree

ஈரோட்டில் மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.1770 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. கிருஷ்ணகிரியில் கிரீன் டெக் ரூ.1,779 கோடி முதலீட்டு திட்டம் உருவாக்கம். காஞ்சிபுரத்தில் மதர்ஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2200 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.!


வரும் 17-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம்படுகையில் ரூ.206 கோடியில் கட்டப்பட்ட தொழிலாளர்களுக்கான தங்கும் இட கட்டடம் திறக்கப்படும்.!


இந்தியாவிலேயே முதல்முறையாக 18,000 படுக்கை வசதியுடன் தொழிலாளர்களுக்கு தங்கும் இடம் வசதி செய்து தரப்படுகிறது.!


3 முக்கிய கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.நீரேற்று புனல் மின் திட்டம், காற்றாலை மின் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.! பசுமை எரிசக்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.! 2030-க்குள் பசுமை எரிசக்தி மூலம் 20,000 மெகாவாட் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.!


20,000 மெகாவாட் உற்பத்தி இலக்கை எட்ட 3 முறைகளில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். காற்றாலை மின்உற்பத்தி புதிய கொள்கை மூலம் 25% மின் உற்பத்தி அதிகரிக்கும் இவ்வாறு அமைச்சர் கூறினார்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page