பஞ்சப்பட்டிஏரிக்கு காவிரிநீர் - புதிய கதவணை. இருவழிச்சாலை கோரி!குளித்தலை மாணிக்கம் எம்.எல்.ஏ வலியுறுத்தல்!
- உறியடி செய்திகள்

- Jun 23, 2024
- 3 min read

குளித்தலை, பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரியாற்று தண்ணீரும், மருதூர் - உமையாள்புரம், இருவழிசாலை வசதியுடன் புதிய கதவணைத்திட்டத்தையும் நடப்பு நிதி ஆண்டில் செயல்படுத்திட அவை முன்னவர் -நீர்வளத்துறை அமைச்சர் துரை - முருகனிடம் நேரில் சந்தித்து தொகுதி மக்களின் சார்பில் குளித்தலை எம்.எல்.ஏ. இரா. மாணிக்கம் வலியுறுத்தல்.!
கரூர் மாவட்டம், குளித்தலை நகர தி.மு.கழகச் செயலாளர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் முதல் தொகுதி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா. மாணிக்கம் சென்னை, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.!
தமிழ்நாட்டின் வளர்ச்சி , முன்னேற்றத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அரிய திட்டங்கள் சொல்லில் அடங்காது. அத்தகைய உலக தமிழினத்தின் வரலாறு போற்றும் தலைவர் கலைஞர் அரசியல் களம் கண்ட முதல் பெருமை மிகுந்த தொகுதி குளித்தலை சட்டப்பேரவை தொகுதி என்பது தமிழக . ஏன் இந்திய அரசியல் வட்டாரம் அறியாத ஒன்றல்ல,!
இத்தகைய
பெருமைமிகுந்த தொகுதியில் கழகத் தலைவர், திராவிட மாடல் ஆட்சி நாயகர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியாரின் வழிகாட்டல்களோடு இரண்டாவது தடவையாக தொகுதி மக்களின் அன்பையும், நம்பிக்கை, நல்லாதரவைப் பெற்று, தொகுதியின் முதல் தொண்டராய் மக்கள் பணியாற்றும் வாய்ப்பை தந்த அனைவருக்கும் என்றென்றும் நன்றி கடன்பட்டுள்ளேன் என்றால் அது மிகையாது.!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் - திராவிட மாடல் ஆட்சி நாயகர் தளபதியார் - தலைமையில் கழகஆட்சி அமையும் காலங்கள் எல்லாம் குளித்தலை தொகுதி மக்களுக்கு பொற்கால ஆட்சியாக, தொடர்ந்து படிப்படியாக பல்வேறு அரசு துறை திட்டங்கள் நிறைவேற்றுப்பட்டு வருகின்றது.!

கடந்த தேர்தல் பரப்பரையின் போது கழக தலைவர், முதல்வர் தளபதியார் சுற்றுப்பயணத்தின் போது அறிவித்த பல்வேறு திட்டங்கள் கரூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் மிகவும் முக்கியமான மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கை பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் கோரிக்கையாகும்.!
1837 ஆம் ஆண்டில் பிரிட்டீஸ் ஆட்சியாளர் சார்லஸ் என்பவரால், சுமார் 1.200 ஆயிரத்து இருநூறு ஏக்கரில், ஒன்றுபட்ட மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஏரியாக, குளித்தலை தொகுதிக்குட்பட்ட இந்த பஞ்சப்பட்டி ஏரியாகும்.
இந்த ஏரியை சுற்றியுள்ள சுமார் 25, ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயம் செய்ய முடியாமல், வறட்சியின் காரணத்தால், ஏரியும், சுற்றுப்புற விளைநிலங்களும் வறண்ட நிலையிலுள்ளது.!

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும், காவிரியாறு பாய்ந்தோடும், மாயனூர் அருகிலிருந்து காவிரியாற்று நீரை கொண்டு வந்து நிரப்ப தொடர்ந்து கோரிக்கைவிடுத்தும் வந்தனர் கடந்த 2015 , ம், ஆண்டு அக்.12-ம் ந்தேதி நமக்கு நாமே திட்ட அறிவிப்பின்படி சுற்றுப்பயணம் வந்த கழகத் தலைவர் தளபதியாரிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்ட படி நேரில் பஞ்சப்பட்டி ஏரிக்கு சென்று பார்வையிட்டு காவிரியாற்றிலிருந்து, தண்ணீர் கொண்டு வர திட்டம் செயல்படுத்தப் பூர்வாங்க பணிகள் தொடங்கி விரைவில் செயல்படுத்தப்படும் என்று கழகத்தின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டது.!

இதனையடுத்து இந்த திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடும்,சமர்பிக்கப்பட்டிருந்தது
மேலும் குளித்தலை - முசிறி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடுவே டெல்டா மாவட்டத்தை நோக்சி பாய்ந்து ஓடும் அகண்ட காவிரியாற்றில், மருதூர் முதல் உமையால்புரம் வரை புதிய கதவணை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி சுற்றுப்புற கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.!

இக்கதவணை ஏற்படுத்தபடுவதால் சுமார் 2 முதல் 3 டி.எம்.சி.தண்ணீர் சேமிக்க இயலும், இத்திட்டத்தால், குளித்தலை, முசிறி, மணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 44.000 நாற்பத்தி நான்காயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் கூடுதல் பாசன வசதிகள் பெற்று, இதனால் விவசாயம் மட்டுமல்லாது, அதனை சார்ந்த பல்வேறு வளர்ச்சிகளும், போக்குவரத்து, உட்பட புதிய பல வளர்ச்சிகளும், போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறையும், புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்திடும் வாய்ப்புகளும் உருவாகும் சூழல் ஏற்படும்.!
அதே சமயம், குளித்தலை அருகே மருதூர் பகுதியில் காவிரி தென்கரையிலிருந்து சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்க்கான நடை பெற்று வருகிறது. இப்பணிகளுக்கு சுமார் 3 ,1/2,மூன்றரை அடி விட்டமுள்ள குழாய்கள் மூலம் கொண்டு செல்ல காவிரிஆற்றில் தண்ணீர் பள்ளி முதல் குமாரமங்கலம் வரை சுமார் 100 அடி ஆழத்தில், 50 அடி பக்கவாட்டில் ஆழ் துறை கிணறுகள் மூலமாக தண்ணீர் உறிஞ்சிம் குழாய்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.!
இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறையவும் வாய்ப்புள்ளதாக, மேற்படி பகுதிகளின் சுற்றுப்புறவிவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு மக்களும் அஞ்சும் சூழலும் நிலவி வருவதால், .......

இவற்றை கருத்தில் கொண்டும், குளித்தலை தொகுதி விவசாயிகள். உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நீண்ட கால கோரிக்கையான, காவிரியாற்றின் வெள்ள பெருக்கு காலத்தில் கிடைக்கும் உபரிநீரை சேமிக்கும் வகையில் மருதூர் முதல் உமையால் புறம் வரையிலுள்ள பகுதியில் தண்ணீர் திறக்கும் ஷட்டர் கதவுகள் மற்றும் இருவழிசாலை வசதியுடன் கூடிய கதவணை திட்டத்தினை நடப்பு 2024 - 2025, நிதியாண்டில் ஏற்படுத்து கொடுத்திட வலியுறுத்தியும், தி.மு.கழக பொதுச் செயலாளர் சட்டப்பேரவை முன்னவர், நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரை -முருகனிடம் நேரில் சந்தித்து தொகுதி மக்களின் சார்பில் வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது.!
தாயுள்ளம் கொண்ட கழகத் தலைவர், தமிழகமுதல்வர் தளபதியாரின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு சென்று விரைந்து அவை முன்னவர், நீர்வளத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.!
இவ்வாறாக எம்.எல்.ஏ. இரா. மாணிக்கம் கூறினார்கள்.
நங்கவரம் பேரூர் தி.மு.கழக துணைச் செயலாளர். பேரூராட்சித் துணைத் தலைவர் மு. அன்பு உடனிருந்தார்.!




Comments