தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கர்நாடகாவில் தொடர்மழை ஆரஞ்சு - ரெட் அலார்ட் விடுப்பு!
- உறியடி செய்திகள்

- Jul 30, 2024
- 1 min read

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.! தமிழ்நாட்டில் மழை
கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 371 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட 55 சதவீதம் அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஷிவ்மோகா, உடுப்பி, சிக்மகளூர், தட்சிண கன்னடா மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. உத்தரகன்னடா, ஹாசன் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தட்சின கன்னடா மாவட்டத்தில் 114.4 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் 31 தாலுகாக்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.!
இதனால் கர்நாடாகவிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து கனிசமாக வே இருந்து வருகிறது.!

இதனால் மேட்டூர் அணை 43 வது முறையாக முழு கொள்ளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீரின் திறப்பும் அதிகரித்தே உள்ளது.!

இந்நிலையில் தற்போது
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். !

மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.!

இந்நிலையில் இரவு 10 மணி வரை 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், விருதுநகர், தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




Comments