சென்னை : எண்ணூர் விபத்து 9. பேர் பலி. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி! ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பேட்டி!
- உறியடி செய்திகள்

- Sep 30
- 1 min read

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது முகப்பு சாரம் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். இந்த
சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்னும் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலையத்தின் கட்டுமான பணியின் போது வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி அருகே வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல்மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளில் 30க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ராட்சத வளைவு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, திடீரென சாரம் சரிந்து விழுந்த போது, 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே 5 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 9 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல் இன்னும் பலரும் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 9 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இதன் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேசுகையில், இது கட்டுமான பணியில் நடக்கக் கூடிய அனல்மின் நிலையம். மொத்தமாக 3,200 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பெரும்பாலும் வட இந்திய தொழிலாளர்கள் தான். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியின் கருத்து என்னவென்றால், 45 அடி உயரத்தில் பாதுகாப்பு உடை அணிந்து 10 பேர் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளனர். ஆனாலும், திடீரென சாரம் சரிந்து விழுந்ததால், இதுவரை 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக காவல்துறை, மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்டோருடன் பேசி இருக்கிறோம். அடுத்ததாக பி.எச்.இ.எல் (BHEL ) நிறுவனத்திடம் தான் பேசி உள்ளோம். ஏனென்றால் அந்த நிறுவனம் தான் ஒப்பந்தத்தாரர்கள் என்று தெரிவித்துள்ளார்.




Comments