சென்னை மழைவெள்ள நிவாரணப் பணிகள் சுறுசுறு! களத்தில் முதல்வர்! சுற்றி சுழலன்ற அமைச்சர்கள் - அதிகாரிகள்
- உறியடி செய்திகள்

- Nov 30, 2023
- 2 min read

சென்னை மழை வெள்ள நிவாணப் பணிகள்,! களத்தில் மக்கள் குறைகளை நேரடியாக கண்காணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! நிவாரண - மீட்புப் பணிகளில் சுற்றி சுழன்று பணியாற்றிய அமைச்சர்கள் - அதிகாரிகள்!
வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக தமிழகத்தில் மழை பொழிவை கொடுத்துக் கொண்டிருக்கிறது முக்கியமாக தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் பலத்த மழை பொழிவு இருக்கிறது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில்மலைப்பொழிவு அதிகமாக இருக்கிறது கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னையில் பெருவெள்ளம் போல் இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருக்கிறது.!


இதனைப் போல் அடிப்படையில் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று தி.மு.கழக அரசு தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறது தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து கொண்டே இருப்பதால் அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கிறது.!
தொடர்ந்து மின்சாரம் கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது இதனால் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றுவதற்கும் சிக்கல்கள் நிகழ்கிறது ஏனென்றால் தொடர்ந்து மழைப்பொழிவு இருப்பதால்.
எந்நேரமும் மரம்கீழே விழும் மேலும் மின்சாரம் கொடுத்தால் அதனால் பல்வேறு விதமான பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அரசு இப்பொழுது போர்க்கள அடிப்படையில் மனித ஆற்றல் மூலம் மட்டுமே மலை வெள்ளத்தை வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடாது என்று 23,000 களப்பணியாளர்களை சென்னை பெருநகரத்தில் இறக்கி உள்ளது அமைச்சர்கள், மேயர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய அரசு உயர் அதிகாரிகள் என அனைவரும் இப்பொழுது தீவிரமாக மக்கள் பணியாற்றி வருகிறார்கள்.!


தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை நேரடியாக பாதிப்பு ஏற்பட்ட களத்திற்கே நேரில் சென்றுகண்காணித்தும், அவசர கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி மூலம் பொதுமக்கள் அவசர, அத்தியாவச அடிபடை தேவைகுறைகள் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இந்த மலைப்பொழிவில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் மேலும் சென்னை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின முழு கவனத்தையும் செலுத்திய முதல்வர் ஸ்டாலின், தேவையான அனைத்துத்துறை சார்ந்த நிவாரண நடவடிக்கையும் எடுக்கவும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி செயல்படுத்திடவும் உத்தரவிட்டார ..!
.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சென்னை மாநகராட்சியில் இருந்து, மழை வெள்ளம் அல்லது மின்சாரம் அல்லது ஏதாவது பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள் விரைந்து உரிய மீட்பு, நிவாரண. பேரிடர் உதவிகள் செய்திட, வருகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டது.!
மிகத் தீவிரமான
பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாகவே சென்னை மாநகரம் இயற்கை பேரிடர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறது.
எதிர்காலத்தில் சென்னை போன்ற மிக அழகான புகழ்பெற்ற மாநகரம் இருக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் இயற்கை பேரழிவு பேரிடர் சென்னையை தாக்கிக் கொண்டிருக்கிறது.!
சுனாமி, மழை வெள்ளம், கோடை காலம் என மாறி மாறி பேரிடர்கள் தாக்கியும் வருகின்றது. தற்போது
சென்னையில் கடுமையான மழை பொழிவு வும் ஏற்பட்டுள்ளது.!

சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் நேற்று நவ.30.ந் தேதி காலை முதலே விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்தது. நேற்று மாலையில் மீண்டும் பலத்த தொடங்கியது இரவெல்லாம் தொடர்ந்தது.!
இதனால் சென்னை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது கனமழையால் சென்னை முழுக்க 145 இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் அதில் 68 இடங்களில் முழுமையாக மழை நீர் வெளியேற்றப்பட்டதாகவும்.
மீதம் 77 இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணி இரவு பகலாக போர்க்கள அடிப்படையில் களப்பணியாளர்கள் மறுசுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.!

அந்த வகையில் மழை தொடர்ந்து இருப்பதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் அபாயம் இருக்கும் சூழ்நிலையில் அவற்றை மோட்டார் மூலம் வெளியேற்றவும்.
தயார் நிலையில் 296 மோட்டார்கள் உள்ளதாகவும் 40 மோட்டார்கள் இப்பொழுது தேங்கியுள்ள நீரை வெளியேற்ற பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.!
மழை நீடிப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது அத்துடன் சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் கொடுக்கும் வகையில் இன்றைய இலவச 1913 எண்ணை நேற்று இரவு அறிவித்திருந்தது.!

சென்னை மாநகராட்சி அதே போல் 044-25619204,044-25619206,044-25619207 ஆகிய எண்களிலும் 9445477205 என்ற whatsapp நம்பரிலும் தொடர்பு கொண்டு பாதிபட்ட மக்கள் தங்களுடைய புகார்களை விரைவாக பதிவு செய்யலாம் எனவும் நிர்வாகமும் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது மேலும் கூடுதலாக இலவச உதவி எண்களை வெளியிட்டுள்ளது அந்த வகையில் 944547720 என்ற whatsapp நம்பரை வெளியிட்டு இருக்கிறது இந்த எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.!




Comments