சென்னை: தேங்கிய மழை வெள்ளநீர் அகற்றும் பணி! விரைவுபடுத்திய அமைச்சர் கே.என்.நேரு! அதிரடி நடவடிக்கை!
- உறியடி செய்திகள்

- Dec 4, 2023
- 2 min read

சென்னை சுற்றுப்பகுயில், புயலால் தேங்கிய மழை வெள்ளநீர் அகற்றும் பணிகளை விரைவுபடுத்தி அமைச்சர் கே.என்.நேரு! அதிரடி நடவடிக்கை!
வெள்ள காடாக மாறியது மாங்காடு நகராட்சி அமைச்சர் நேரு அதிரடி நடவடிக்கை! தாழ்வான, மழை வெள்ளநீர் தேங்கும் பகுதிகளிலும் தொடர் கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார்.! தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் களத்தில் இறங்கினர்கள்.!
மிக்ஜாம் புயல் எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.!
சென்னையில் தொடர்ந்து 10 மணி நேரத்துக்கு மேல் வெளுத்து வாங்கியகனமழை!

பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு நகராட்சிகளில் கொட்டும் மழையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.!

மேலும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் கனமழையின் காரணமாக தாழ்வான பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி,
மழை நீரை வெளியேற்ற உள்ளாட்சி நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.!

இந்த நிலையில் தமிழக அரசு புயலினால் பாதிக்கப்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து உரிய நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.!

இந்த நிலையில், தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படியும், வழிகாட்டல்கள் அறிவுறுத்தல்களின் படியும் தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு- தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட நூம்பல், மூகாம்பிகை நகர், ஐ.சி.எல் காலனி பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளையும், மழைநீரை வெளியேற்றும் பணிகளையும் கொட்டிய மழையில்
ஆய்வு செய்தார்.!

அப்போது ஆவடி நாசர் எம்எல்ஏ, நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, நகர் மன்ற உறுப்பினர் உமாபதி ஆகியோர் உடனிருந்தனர்.!
பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடி, பனையாத்தம்மன் குட்டை, அம்மான் நகர், மற்றும் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையில் அமைக்கப்பட்ட கால்வாய் ஆகிய பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளையும்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் அமைச்சர் நேரு ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல், ஆலோசனைகள் கூறி பணிகளை துரிதபடுத்தினார்.!

தொடர்ந்து மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வசதி, மழைநீரை வெளியேற்றும் பணிகளையும் கொட்டும் மழையில் அவர் ஆய்வு செய்து அங்கு உரிய நடவடிக்கைகளை உடனிருந்து செய்யும் வகையில் பணிகளையும் முடுக்கிவிட்டு, துரிதபடுத்தினார்.!

இந்த ஆய்வின் போது எம்எல்ஏக்கள் ஆவடி நாசர், பூந்தமல்லி கிருஷ்ணசாமி, நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மண்டல இயக்குநர் சித்ரா, கண்காணிப்பு பொறியாளர் முருகேசன்,
பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் ஸ்ரீதர், ஆணையர் லதா, நகர செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், மாங்காடு நகர் மன்ற தலைவர் சுமதி முருகன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்!.

அப்போது மழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பூந்தமல்லி நகராட்சியில் தேங்கும் மழைநீரை குமணன்சாவடி பகுதியில் பெரிய அளவில் தொட்டி அமைத்து அங்கிருந்து மின் மோட்டார் மூலம் ,மழை நீரை அகற்ற வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரு அறிவுறுத்தினார்.!
அது மட்டும் இன்றி பூந்தமல்லி மற்றும் பல்வேறு ஊராட்சிகளில் இருந்து மழை நீர் மாங்காடு நகராட்சிக்கு வருவதால் அதனை குடியிருப்பு பகுதிகள் பாதிக்காதவகையில் தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட அமைச்சர் கே.என்.நேரு அதற்கான பணிகளை விரைவுபடுத்தினார்.!

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையில் கல்குவாரிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்ட கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.!
இதே போல் கோடம்பாக்கம் உள்ளிட்ட மேலும் பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் சூழ்ந்த தண்ணீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தம் பணிகளையும் நேரில் ஆய்வு செய்து மழை வெள்ள தடுப்பு பணிகளையும் துரிதபடுத்தி பணிகளை முடுக்கிவிட்டார்,!




Comments