top of page
Search

முதல்அமைச்சர்.மு.க. ஸ்டாலின் வாழ்த்து! தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Feb 18, 2024
  • 2 min read
ree


தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளசெல்வப்பெருந்தகைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் -!


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.!

இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் புதுடெல்லியில் நேற்று இரவு வெளியிட்டார்!.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்து மிக முக்கியத் தலைவராக விளங்கியவர் செல்வப்பெருந்தகை. கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது மங்களூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வி.சி.க.விலிருந்து விலகினார். அதன் பிறகு 2008-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த செல்வப்பெருந்தகை, அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். எனினும் அங்கும் அவரால் நீண்ட காலம் அரசியல் பணியாற்ற முடியவில்லை.!


அதனைத் தொடர்ந்து 2010-ம்ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டசெல்வபெருந்தகை, 2011-ம்ஆண்டு செங்கம் சட்டப்பேரவை தொகுதியிலும், 2016 சட்டப்பேரவை தேர்தலில் பெரும்புதூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.!

ree

தொடர்ந்து 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது பெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார்!.

இந்நிலையில் தற்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கு.செல்வப்பெருந்தகையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே நியமனம் செய்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ். அழகிரியின் பணியை கட்சித் தலைமை வெகுவாகப் பாராட்டுகிறது.!

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக எஸ்.ராஜேஷ்குமாரை நியமனம் செய்வதற்கும் அகில இந்திய தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்” என்றும் கூறியுள்ளார்.!

ree

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ். அழகிரி, 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.!


செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த 2019 முதல் தமிழக காங்கிரஸ் கமிட்டியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்த கே.எஸ்.அழகிரியின் எதிர்கால பணிகள் சிறக்கவும், காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்குமாரின் செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன்.! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.!


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.! கடும் போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் செல்வபெருந்தகை.!


59 வயதான செல்வப்பெருந்தகை, சென்னை மாநகரத்திற்கு அருகில் உள்ள படப்பை – மணிமங்கலத்தில் விவசாயக் குடும்பத்தில் 1964 ம் ஆண்டு ஏப்.14ந்தே பிறந்தார். சட்டப்படிப்பை முடித்த பின்னர் சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்தார். ரிசர்வ் வங்கியில் 16 ஆண்டுகள் பணியாற்றிய பின், பொதுவாழ்வில் ஈடுபட தொடங்கினார். !

.

ree

பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சியின் பாரதம் கட்சி மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கு.செல்வப்பெருந்தகை. பின்னர் அக் கட்சியிலிருந்து விலகி கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் இணைந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி, 2001 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இணைந்து, திருமாவளவனுக்கு அடுத்த நிலையில் பொதுச்செயலாளராக இருந்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் விசிக சார்பில் செல்வப்பெருந்தகையும், ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். அப்போது விசிக சட்டமன்ற குழுத் தலைவராக செயல்பட்டார் செல்வப்பெருந்தகை.!


திருமாவளவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகி, பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்றார்.!

2010-ஆம் ஆண்டில் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்!.


காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவு தலைவராக செயல்பட்டார். 2011 மற்றும் 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வியடைந்த நிலையில், 2021ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.!


சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக செயல்பட்டு வந்தார்.

இளையபெருமாள், மரகதம் சந்திரசேகரைத் தொடர்ந்து, 40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடதக்கது.!


அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.!

தமிழகத்தில் நடு நிலை, தற்காலிக அரசியல், ஆர்வமுள்ள இளைஞர்கள், பட்டியலின மக்களையும் வெது வாக காங்கிரஸ்கட்சியில் அதிகம் ஈர்க்கும் முயற்சியாக செல்வபெருந்தகை நியமனம் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page