top of page
Search

பந்துஎப்படி வந்தாலும் சிச்சரோ! அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆய்வு! மேம்படுத்த ரூ 21. கோடி ஒதுக்கீடு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 19, 2024
  • 2 min read
ree


அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆய்வு!


அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு!


அம்மா உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார் முதல்வர்.

அம்மா உணவகங்களை நேரில் சென்று தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆய்வு செய்தார்.!


அம்மா உணவகங்களை தரமாக, கூடுதலாக மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.!


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,


பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும், 7 அரசு மருத்துவமனைகளிலும் சென்ற ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட 388 அம்மா உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை எளியோருக்கு பயனளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகின்றது. மேற்கூறிய உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் பயனாளிகள் உணவு அருந்தும் நிலையில், ஒரு ஆண்டில் சுமார் நான்கு கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.!


அம்மா உணவங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், மளிகை பொருள்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு உருளைகள் போன்றவை திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தயிர் ஆவின் நிறுவனத்திடம் பெறப்படுகிறது.

ree

அம்மா உணவகங்களை நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர்

வார பலன்கள்: 12 ராசிக்கும்!

இந்த உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.300 அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த மூன்றாண்டுகளில் ரூ.148.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேற்கூறிய பல்வேறு செலவினங்களுக்கும் 2021 மே மாதம் முதல் இதுவரை வரை சென்னை மாநகராட்சியால் சுமார் ரூ.400 கோடி, அரிசி மற்றும் கோதுமைக்கான தமிழ்நாடு அரசின் மானியமாக ரூ.69 கோடியும் என, மொத்தமாக ரூ.469 கோடி செலவிடப்பட்டு இந்த உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட இந்த அரசு வழிவகுத்துள்ளது.


இன்று (19.7.2024) சென்னை மாநகராட்சி 122ஆவது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை சோதனை செய்ததோடு, அங்கு உணவருந்த வந்த பயனாளிகளோடும் உரையாடினார். பல்வேறு அம்மா உணவகங்களில் உள்ள பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை ரூ.7 கோடி செலவில் வழங்கிட ஆணையிட்டார்கள். மேலும், ரூ.14 கோடி செலவில் இந்த உணவகங்களை புனரமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்கள்.


தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.!


அம்மா உணவகங்களை தி.மு.கழக அரசு முட உள்ளதாக எதிர்கட்சிகளின் தரப்பில் அரசியல் செய்ய நினைத்த நிலையில், எந்த பக்கமிருந்து பந்து வந்தாலும், தமிழ்நாடு மக்களுக்காக அது முதல்வர் மு.க.ஸ்டாலினால் சிச்சராகவே அமையும் என்கின்றனர்.தி.மு.கழக , கூட்டணி கட்சியினர்கள் .!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page