சாதிவாரி கணக்கை வலியுறுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! பாஜக - ஆதரவு கட்சிகளின் நிலை என்ன? வலுப்பெரும் கேள்வி?
- உறியடி செய்திகள்

- Jul 29, 2024
- 1 min read

நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது, மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதுதான்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.!
இதில் தமிழ்நாட்டில் பாஜக மற்றும்ஆதரவு எதிர்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்று மக்கள் மத்தியில் தெளிவு படுத்துவார்களா? அரசியல் திறனாய்வு - விமர்சனர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்!
இது தொடர்பாக தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,!

தி.மு.கழகம் மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தினால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத்துள்ள செய்தியைப் பகிர்கையில் எனது நெஞ்சில் பெருமை பொங்குகிறது.!
மேலும், இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்தியாவெங்கும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த பல பயனுள்ள விவாதங்களுக்கு வழிவகுத்ததில் அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது.!
நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதிசெய்வது தான். !
பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் விகிதத்தை அறிந்து, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நமது பங்கைப் பெற முடியும். இதனைச் சாதிக்க ஒன்றிணைந்து பணியாற்றிடுவோம்”
என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு தொடர்ந்து, தமிழ்நாட்டில் சமூக நீதியின் பெயரால் அரசியல் கட்சி நடத்துபவர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாதிவாரியாக கணக்கெடுப்பு எடுக்க வேண்டும், அதை அறிவிக்க வேண்டும் என்று முழுக்க மிட்டவர்கள், அவர்கள் கூட்டணி வைத்துள்ள, தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் கட்சியினர்கள் . முதல்வரின் இத்தகைய அறிவிப்யை தொடர்து , ஒன்றிய பாஜக, அரசுக்கு அழுத்தம் தாருவார்களா? வீதிக்கு வந்து கொடி பிடித்து ஒன்றிய பாஜக, அரசை வலியுறுத்துவர்களா ? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
என்கின்றனர் அரசியல் திறானாய்வு - விமர்சகர்கள் .!




Comments