முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புபெண் காவலர்களுக்கு விடிவெள்ளியானது! கனிமொழி கருணாநிதி நன்றி கூறி ட்விட்!
- உறியடி செய்திகள்

- Aug 24, 2024
- 1 min read

தோகமலை.
ச.ராஜா மரியதிரவியம்....
தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணன் தளபதியாரின் அறிவிப்பு! பெண் காவலர்களுக்கு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது கனிமொழி கருணாநிதி எம்.பி. முதல்வருக்கு வாஞ்சையுடன் நன்றி !
குடியரசுத் தலைவர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்கள் காவலர்களுக்கு வழங்கப்பட்டன. ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 7 காவலர்களுக்கும், தீயணைப்பு துறையைச் சேர்ந்த 14 பேர் மற்றும் சிறைத்துறையைச் சேர்ந்த 8 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு உயர்த்தப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.!

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு பெண் காவலர்களுக்கு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.!

இது தொடர்பாக தி.மு.கழக துணைப்பொதுச் செயலாளர், நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி., எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது;

காவல்துறையில் மகளிர் பங்காற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்து
பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகப்பேறு சமயங்களில் விடுப்பு இல்லாமல் பல இக்கட்டுகளுக்கு உள்ளான பெண் காவலர்களுக்கு, மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு உயர்த்தப்படும் என்கிற கழகத் தலைவர் முதல்வர் அண்ணன் தளபதியாரின் இத்தகைய அறிவிப்பு மாபெரும் விடிவெள்ளியாய் பெண் காவலர்களுக்கு அமைந்துள்ளது.

மேலும், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள், குழந்தையைப் பராமரிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்குக் கணவர் அல்லது பெற்றோர் வசிக்கக் கூடிய மாவட்டங்களில் பணியைத் தொடரலாம் என்கிற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி கூறியுள்ளார்.!




Comments