சிறுபிள்ளை விளையாட்டா? டெல்லி: நிதி ஆயோக் கூட்டம்! மம்தா மைக் துண்டிப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
- உறியடி செய்திகள்

- Jul 27, 2024
- 2 min read

நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி! தனது மைக் ஆஃப் செய்தது ஏன்? மேற்கு வங்க முதல்வர் மம்தா வெளிநடப்பு!
ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது?” என்று ஒன்றிய மோடிஅரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது? ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக மோடி அரசு புரிந்துகொள்ள வேண்டும். கூட்டாட்சியில், அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்,” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9-வது ஆட்சிக்குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று (ஜூலை 27) காலை தொடங்கியது. இதில், ஒன்றிய அமைச்சரகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.!
இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார். நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும், பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டதாகவும், கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பரப்பு குற்றம் சாட்டினார்.!
ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டி வெளிநடப்பும் செய்தார்.!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “நிதி ஆயோக் கூட்டத்தில் பேசும்போது, மாநில அரசுகளை ஒன்றிய மோடி அரசு பாரபட்சமாக நடத்தக் கூடாது என கூறினேன். தொடர்ந்து பேச விரும்பினேன். ஆனால், 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். எனக்கு முன் பேசியவர்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள்.!
எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்றேன். இருந்தும், என்னைப் பேச அனுமதிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருக்கும்போதே எனது மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள். ஏன் என்னை தடுத்தீர்கள், ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றேன்.!
இந்த கூட்டத்தில் நான் பங்கேற்றதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். மாறாக, உங்கள் கட்சிக்கும், ஆளும் உங்கள் அரசுக்குமே அதிக வாய்ப்புகளைக் கொடுக்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்ற போதும், நீங்கள் என்னை பேசவிடாமல் தடுக்கிறீர்கள்.!

இது வங்கத்தை மட்டுமல்ல, அனைத்து மாநிலக் கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும்” என்றுக் கூறினார்.!
இந்நிலையில், “ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது?” என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடு ம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநில முதல் அமைச்சர்கள் பலரும் இன்று நடைபெற்ற ஒன்றிய மோடி அரசு நடத்திய இந்த கூட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடதக்கது.!
அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரப்பபை ஏற்படுத்தி பேசும் பொருளாகியுள்ள இச்சம்பவம் குறித்து சமூக வளைதளங்களில் பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றார்கள்.!
அதிலும் சிலர் சிறு பிள்ளைத்தனமாக சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நடக்காதா என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.!




Comments