முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்! தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி - முசிறி அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!
- உறியடி செய்திகள்

- Jul 16, 2024
- 2 min read
Updated: Jul 16, 2024

தமிழ் நாடுமுதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.! தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, திருச்சி, முசிறியில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நேற்று ஜூலை 15. ந் தேதி தொடங்கிவைக்கப்பட்டது,!
இத்திட்டத்தின் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களிடையே ஏற்பட்ட ஏகோபித்த பாரட்டுக்கள் வரவேற்பினையும், மாணவ மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு25.8.2023 அன்றே முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த திருக்குவளையில் தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!
அப்போது 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடும் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தியும் படித்து வருகிறார்கள்.!
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.!

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று முன்தினம் ஜூலை 15, பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கிவைத்தார்.!


இதனை தொடர்ந்து தூத்துக்குடி வி. வி.டி. பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர், கவிஞர் கனிமொழிகருணாநிதி தொடங்கி வைத்து, பள்ளி மாணவ குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதுடன் அவர்களுடன் உணவு அருந்தினார்!
தி.மு.கழக மாவட்டச்செயலாளர்கள், தமிழ்நாடு மகளீர் உரிமை - சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.!

இதே போல் திருச்சி மாவட்டம், பெரம்பலூர் பாராளமன்ற தொகுதிக்கும்
முசிறி சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்ட ஜெயம் கொண்டான் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு - தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, பள்ளிமாணவ குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து அருந்தினார்.!

திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி நா.தியாகராஜன், கலெக்டர் பிரதீப் குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.!
இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி களில் பயிலும் 2 இலட்சத்து 23
ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.
முதலமைச்சரால், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உலகிற்கே முன்னோடியான திட்டமாகத் திகழ்கிறது.!
என்பது குறிப்பிடதக்கது.!




Comments