முருகன் மாநாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் எதிரிகளா ? சு.திருநாவுக்கரசர் திருச்சியில் பேட்டி!
- உறியடி செய்திகள்

- Jun 14
- 1 min read

முருகனுக்கு மாநாடு நடத்துவதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எவரும் எதிரிகள் இல்லை என்று திருச்சியில் சு.திருநாவுக்கரசர் கூறினார்.!
திருச்சி அருணாசலம் மன்றத்தில், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர், ராகுல் காந்தி, எம்.பி. பிறந்தநாளை யெட்டி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் தனி துறை வேலை வாய்ப்பு ஒரு நாள் முகாம் நடைபெற்றது.!
இம்முகாமில் டாட்டா, ஓமேகா, பிர்லா, நோக்கியோ உள்ளிட்ட தனியார் துறையை சேர்ந்த 43 , நிறுவனங்கள் பங்கேற்று, பள்ளி கல்வி, கல்லூரி, தொழிற்கல்வி, பயின்ற சுமார் 1.500 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், கலந்து கொண்டார்கள்.!
முகாமில் தேர்வானவர்களுக்கு முன்னால் தமிழத காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் - நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பாராட்டி பேசினார்.!
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சு. திருநாவுக்கரசர்
தமிழ்நாட்டில் தமிழ் கடவுள் முருகனுக்கு மாநாடு நடத்துவதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட நாங்கள் யாரும் எதிரிகள் கிடையாது. அதே சமயம் பா.ஜ.க. அரசியல் உள்நோக்கத்துடன் சாமியார்களின் மாநாடாக நடத்துகிறது.!
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் ஆதாரங்கள் வைத்து ஞானசேகரனுக்கு தண்டனை வழங்கபட்டுள்ளது. தீர்ப்பு வழங்கபடுவதற்கு முன்பே அண்ணாமலை தன்னிடமுள்ள ஆதாரங்களை வைத்து நீதிமன்றத்திலேயே முறையிட்டிருக்கலாம் அதை விருத்து ஞானசேகரனுடன் மேலும் சிலர் குற்றவாளிகளாக இருப்பதாக அண்ணாமலை பேசி வருகிறார். இப்போது பேசுவதால் என்ன பயன்?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு தொடர்ந்து பணியாற்ற ஆசை பட்டேன், வாய்ப்பு கிடைக்காமல் போனது வருத்தம் தான்.
பல இடங்களில் மக்களும் - தொண்டர்களும் இதனை சுட்டிகாட்டி வருத்தம் தெரிவிக்கின்றார்கள்.
அதே சமயம் திருச்சி தொகுதி தோழமை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. சகோதரர் துரை வைகோ, வெற்றி பெற்று செயல்பட்டு கொண்டிருக்கின்றார். அவருக்கு வாழ்த்துகள்.!
வருகின்ற தேர்தலில் திருச்சியில் மக்கள் - தொண்டர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப போட்டியிட எனது குரல் ஒலிக்கும்.!
பணம் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற மனம் வேண்டும் அது நடிகர் விஜயிடம் இருக்கிறது. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசுகளும் வழங்குகிறார்.
தமிழ்நாட்டில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் என்கிற மாபெரும் ஆளுமை தலைவர்கள் வாழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு, அவர்கள் மட்டுமே நிகரானவர்கள் . காமராஜருடன் ஒருவரை ஒப்பிட்டு பேசுவதை பெரிதுபடுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், எல். ரெக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.




Comments